போதை மருந்து கடத்தியதால் கொலம்பிய மாடல் அழகிக்கு மரண தண்டனை

108

சீனாவில் போதை மருந்து கடத்திய கொலம்பிய மாடல் அழகிக்கு மரண தண்டனை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. கொலம்பியாவை சேர்ந்த மாடல் அழகி ஜுலியானா லோபஷ் (22). இவர் தனது கம்ப்யூட்டரில் மறைத்து விமானம் மூலம் போதை பொருள் கடத்தி வந்தார்.
அதை தொடர்ந்து அவர் குவாங்ஷூ விமான நிலையத் தில் கடந்த் 18 ந்தேதி கைது செய்யப்பட்டார். இவர் மீது போதை பொருள் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சீனாவில் போதை பொருள் கடத்தல் பெரும் குற்றமாக கருதப்படுகிறது. எனவே இவருக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படு கிறது.

இதற்கிடையே அவரை காப்பாற்ற குடும்பத்தினர் முயற்சி மேற்கொண்டுள் ளனர். கைது செய்யப்பட்ட லோபஷ் எங்கு சிறை வைக்கப்பட்டுள்ளார் என தெரியவில்லை. எனவே பெய்ஜிங்கிள் உள்ள கொலம் பியா தூதரகம் மூலம் அவரை தொடர்பு கொள்ள குடும்பத் தினர் தீவிரமாக உள்ளனர். இவரைப் போலவே பாராகுவே நாட்டை சேர்ந்த 31 வயது பெண்ணும் போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ளார். கடந்த 2012-ம் ஆண்டு கைது செய்யப்பட்ட இவருக்கும் மரண தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.