மேலாடையின்றி தோன்றிய மொடலை மணந்தார் சுவீடிஷ் இளவரசர்

130

சுவீடன் இளவரசர் சாமானியரான தொலைக்காட்சி நடிகையை மணந்துள்ளார். இளவரசரை மணந்த சோஃபியா ஹெல்க்விஸ்ட் முன்னர் மேலாடையின்றி தோன்றிய மொடலாக இருந்தவர்.தலைநகர் ஸ்டாக்ஹோமில் ஆடம்பரமாக நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் இளவரசர் கார்ல் பிலிப், சோஃபியா ஹெல்க்விஸ்டை கரம்பிடித்தார்.

இளவரசரை மணந்துள்ள சோஃபியா முன்னர் மேலாடையின்றி தோன்றிய மொடலாக இருந்தவர். அதுமட்டுமன்றி யோகா பயிற்றுவிப்பாளராகவும் இருந்த அவர் பின்னர் அறக்கட்டளை ஒன்றையும் நிறுவினார். சுவீடனில் அரச குடும்பத்துக்கான ஆதரவு குறைந்து வருகிறது என கருத்துக் கணிப்புகளில் தெரியவந்தாலும், ஆயிரக்கணக்கான நலம் விரும்பிகள் இந்தத் திருமணத்துக்காக தெருவோரங்களில் குவிந்திருந்தனர்.

1059935

கடந்த 2010 ஆம் ஆண்டு இந்த ஜோடி முதல் முறையாக உணவு விடுதி ஒன்றில் சந்தித்தினர், பின்னர் அவர்களது காதல் மலர்ந்து இப்போது திருமணம் வரை வந்துள்ளது. மேலாடை இல்லாத ஒரு மொடலாக தான் இருந்து பின்னர் அரைகுறை ஆடையுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றினாலும், அதிலிருந்து தான் விலகி பல ஆண்டுகள் ஆகின்றன என சோஃபியா ஹெல்க்விஸ்ட் கூறுகிறார். எனினும் தனது கடந்த காலம் குறித்து வருத்தப்பட வேண்டியது இல்லை என்றும், அந்த அனுபவங்களே தன்னை இப்போது இருக்கும் நிலைக்கு உருவாக்கியுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்காவில் சமூகத்தில் பின் தங்கியுள்ள பிள்ளைகளின் நலன்களுகான அறக்கட்டளை ஒன்றையும் அவர் ஏற்படுத்தி நிர்வகித்து வருகிறார். நியூயோர்க்கில் கணக்கியல் படித்துள்ள அவர் பின்னர் யோகா ஆசிரியராகவும், விடுதியில் உணவு பரிமாறுபவராகவும் பணியாற்றியுள்ளார். சுவீடிஷ் மணிமகுடத்துகுரிய வரிசையில் இளவரசர் பிலிப் மூன்றாவது இடத்தில் உள்ளார்