மொபைல் பற்றரி பழுதானதால் குழந்தைபோல் அழுது துடித்த இளம்பெண்

106

இன்றைய நவீன உலகில் மொபைல்போன் பயன்படுத்தாதவர்களே இல்லை என்று சொல்லும் அளவில் அதன் பயன்பாடு உள்ளது. பள்ளி மாணவர்களும் மாணவிகளூம் இதற்கு விதிவிலக்கு அல்ல. இந்த மொபைல் மோகம் உடல் ஆரோக்கியமின்மை பிரச்னை தவிர்த்து மனதளவிலும் அவர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதை ஆய்வாளர்கள் சுட்டி காட்டுகின்றனர்.

ஆண்களைவிடப் பெண்கள் அதிகமான நேரத்தை செல்போனுடன் செலவழிக்கிறார்கள் என்று சமீபத்தில் வெளியான ஆய்வு தெரிவிக்கிறது. கல்லூரி மாணவிகள் ஒரு நாளில் சராசரியாகப் பத்து மணி நேரத்தைத் தங்கள் செல்போனில் செலவிடுகிறார்கள். இதுவே, மாணவர்கள் ஒரு நாளில் எட்டு மணி நேரம் செல்போன் பயன்படுத்துகிறார்கள்.

அமெரிக்காவின் பெய்லர் பல்கலைக்கழகம் நடத்திய இந்த ஆய்வில் அறுபது சதவீத மாணவர்கள் தங்களுக்கு செல்போன் அடிக்ஷன் இருப்பதாக ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த வீடியோவை பாருங்கள் தனது மொபைல் போனின் பற்றரி பெயிலியர் ஆனதும் இந்த பெண் ஒரு குழந்தையை போல் கதறி அழும் பரிதாப காட்சி தான் இது. ஹொங்கொங் மெட்ரோ ரெயில் பயணம் செய்யும் இந்த பெண் தனது மொபைலின் பற்றரி தீர்ந்து போனதும் கதறி அழுகிறார் கால்களை தரையில் அடித்து அடித்து அழுகிறார் ஆனால் அதை சுற்றி உள்ளவர்களும் வேடிக்கை பார்த்தபடி உள்ளார்கள். யாரும் எந்த வித எதிர் நடவடிக்கைகளிலும் ஈடுபட வில்லை அவரது செயலை ஆர்வமாக வேடிக்கை பார்க்கிறார்கள். இந்த வீடியோ தற்சமயம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.