தனிப்பட்ட வாழ்க்கை குறித்த செய்திகளை படிக்கும்பொழுது மன வருத்தம் ஏற்படுகிறது

123

இந்தி திரையுலகில் நடிகர் ரன்பீர் கபூருக்கும், நடிகை காத்ரீனா கைப்பிற்கும் இடையே முறிவு ஏற்பட்டுள்ளது என ஊக அடிப்படையிலான செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், தனிப்பட்ட வாழ்க்கை குறித்த செய்திகளை படிக்கும்பொழுது மன வருத்தம் ஏற்படுகிறது.  ஒருவர் திருமணம் ஆகாதவரை அவர் தனி நபர் என்றே உணருகிறேன் என காத்ரீனா கூறியுள்ளார்.

ரன்பீரும், காத்ரீனாவும் தங்களது உறவுமுறை குறித்து ஒருபொழுதும் வெளியே கூறியதில்லை.  அவர்கள் இருவரும் இதற்கு முன்பு, ஒருவர் வீட்டு குடும்ப விழாவில் மற்றொருவர் பங்கேற்பது என்ற வகையிலேயே ஒன்றாக காணப்பட்டுள்ளனர்.

அதனுடன் நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்பட வெளியீட்டு விழா ஆகியவற்றிலும் ஒன்றாக கலந்து கொண்டுள்ளனர்.  இந்நிலையில் கைத்ரீனா கைப் பேட்டி ஒன்றில், தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விசயங்களை செய்திகளாக படிக்கும்பொழுது மன வருத்தம் ஏற்படுகிறது.

உலகில் தலைசிறந்த 5 நடிகைகளில் ஒருவராக காத்ரீனா கைப் இருக்கிறார் என்ற முடிவிற்கு நாங்கள் அனைவரும் வந்துள்ளோம் என்பன போன்ற செய்திகளை படிப்பதற்கு நீங்கள் விரும்பலாம்.  இது போன்ற விசயங்கள் செய்திகளாக வரவே நான் விரும்புகிறேன்.  நானும் ஒவ்வொரு பெண்ணையும் போன்றவளே.  நீங்கள் வேலையில் ஈடுபடும்பொழுது, உங்களது தொழில்… உங்களது பணி குறித்து பேசப்பட நீங்கள் விரும்புங்கள்.

ஒவ்வொரு நடிகருக்கும் தங்களது தனிப்பட்ட வாழ்க்கை பிறரால் பேசப்படும் என தெரியும்.  அந்த வழியிலேயே இதுவும் வருகிறது என கூறியுள்ளார்.

ரன்பீருக்கும் தனக்கும் இடையேயான உறவு முறிவு குறித்த செய்திகளை காத்ரீனா உறுதி செய்யவோ அல்லது மறுக்கவோ இல்லை.  அவர், இதற்கு முன்பே இதனை குறித்து கூறியுள்ளேன்.  அதனை மீண்டும் நான் கூறுகிறேன்… நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதவரை தனி நபரே என நான் நம்புகிறேன்.  எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை… எனக்கு நிச்சயதார்த்தமும் செய்யப்படவில்லை என கூறியுள்ளார்.