​“கீழே போட்டால் உடையாத” மோடோ எக்ஸ் போர்ஸ் செல்பேசி

273

கீழே போட்டால் உடையாதபடி வடிவமைக்கப்பட்டுள்ள, மோடோ எக்ஸ் ஃபோர்ஸ் (Moto X Force) செல்பேசி பிப். 1-ந்தேதி இந்தியாவில் வெளியிடப்பட உள்ளதாக மோடோரோலா நிறுவனம் தெரிவித்துள்ளது.

அண்மையில் ஒரு வீடியோவை வெளியிட்ட மோடோரோலா நிறுவனம், ஒட்டுமொத்த செல்பேசி பயனர்களையும் ஒரு கணம் ஆச்சரியத்தை ஏற்படுத்திவிட்டது எனலாம்.

அதாவது, நாம் பயன்படுத்தும் செல்பேசிகள் பெரும்பாலானவை கீழே விழுந்து உடைந்து போயிருப்பது தான் கண்டிருப்போம். இதனால், கவனமாக கையாள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருந்தது.

மோடோரோலா வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், கீழே விழுந்தாலும், உடையாத பாதுகாப்பான வன்பொருளால் உருவாக்கப்பட்ட செல்பேசியை அறிமுகம் செய்துள்ளது.

மோடோ எக்ஸ் ஃபோர்ஸ் என்ற அந்த செல்பேசி என்ன விலை, எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு செல்பேசி பிரியர்கள் மத்தியில் உருவானது.

இந்நிலையில், காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள மோடோரோலா வரும் பிப்ரவரி மாதம் 1-ந்தேதி இந்தியாவில் வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளது.

இதன் விலை 45 ஆயிரம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.