அழகின் இரகசியம்

357

லைமுடியை போலவே ஒவ்வொருவருக்கும் சரும வகையும் வேறுபடும். உலர்ந்த சருமம் எண்ணெய்ப் பசை சருமம் அலர்ஜியை ஏற்படுத்த கூடிய சருமம் என்று ஐந்து வகையுள்ளது. தங்களின் சருமம் எந்த வகையை சார்ந்தது அதில் உள்ள பிரச்சினை என்னவென்று அறிந்து கொண்டு அதற்கு தகுந்தவாறு தீர்வு காண்பது நல்லது.

உலர்ந்த மற்றும் பொலி விழுந்த சருமத்திற்கு
சந்தனப்பவுடர் -2 டிஸ் பூன்
புதினா சாறு- 4-8 துளிகள்
பன்னீர் – சிறிதளவு
இவை கலந்து முகத்தில் 10 நிமிடங்கள் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவினால் நன்றாக இருக்கும்.
பாதாம் பருப்பு- 4(அரைத்தது)
தேன் – 1டிஸ் பூன்
பால் – 1 டிஸ் பூன்
இவற்றை கலந்த முகம் கழுத்து பகுதியில் தடவி கழுவலாம். 1டிஸ் பூன் பால் ஏட்டை முகத்தில் தடவி 5 நிமிடங்பள் கழித்து கழவலாம். மில்க் பவுடர் 4டிஸ் பூன் பாதாம் எண்ணெய் ஒரு துளி தண்ணீர் சிறிதளவு இவற்றை கலந்து முகத்தில் போட்டு கழுவலாம். மஞ்சல் வாழைப்பழ கூல் ஒரு டேபில் ஸ் பூன் பட்டர் புறுட் இவை இரண்டையும் சேர்த்து முகத்தில் தடவி 10 நிமிடங்கள் ஊற வைத்துக் கழுவினால் உலர்ந்த சருமம் மென்மையாகும்.

ஸ்க்ரப் செய்ய
சந்தனப் பவுடர் – 2டிஸ் பூன்
கஸ்தூரி மஞ்சல் – 1 டிஸ் பூன்
கடலை மா – 2டிஸ் பூன்
பச்சை பயறு மா – 2டிஸ் பூன்
ரோஜா இதழ் – 1 டிஸ் பூன்
முல்தானி மெட்டி – 4டிஸ் பூன்
குளிக்கும் பொழுது சருமத்தில் லேசாக எண்ணெய் தடவிக் கொள்ளவும். இந்த பௌடரில் சிறிது நீர் கலந்து வட்ட வட்ட வடிவமாகத் தேய்த்து குளித்தால் சருமத்திலுள்ள இறந்த செல்கள் நீங்கும்.எப்பொழுதும் ஸ்க்ரப் பௌடருடன் நீர் சேர்த்து ஸ்க்ரப் செய்யவும். இல்லையெனில் சருமம் எரியும். இதை அடிக்கடி செய்யக் கூடாது. ஸ்க்ரப் பௌடரை சிறிதளவு வைத்துக் கொண்டு எப்பொழுதாவது மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும். இந்தப் பௌடருடன் வேப்பிலை பொடி சிறிது கலந்து வைத்தால் பூச்சி வராது.


உலர்ந்த சருமத்தினர் தேய்த்து குளிக்க எண்ணெய்
நல்லெண்ணெய் – 150 மி.லி
விளக்கெண்ணெய் – 150 மி.லி
ஒலிவ் எண்ணெய் – 150 மி.லி
இவை அனைத்தையும் ஒன்று சேர்த்து அடுப்பில் வைத்து சூடு பறக்கக் காய்ச்சவும். ஏண்ணெய் சூடாக இருக்கும் போதே 250 கிராம் வெள@ளரி விதைப் பொடியை அதில் போட்டு மூடி வைக்கவும். இரண்டு நாள் ஊறிய பிறகு அதை பயன்படுத்தலாம். தேவைக்கு ஏற்ப எண்ணெயை எடுத்து உடலில் தேய்த்து அரை மணி நேரம் ஊறிய பிறகு குளியல் பொடி தேய்த்து குளிக்கலாம்.

எண்ணெய் பசை சருமம்
பப்பாளிக் கூல்- 1 டிஸ் பூன்
வேப்பிலைப் பொடி – 1ஃ2 டிஸ் பூன்
முல்தானி மெட்டி – 2 டிஸ் பூன்
இதை சிறிதளவு பன்னீரில் கலந்த முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். இறந்த செல்களை நீக்கவும் இந்த பொடி உபயோகமாகும். ஆராஞ்சு பழச்சாறு 1டிஸ் பூன் எடுத்து முகத்தில் பூசி 10 நிமிடங்கள் கழித்துக் கழவினால் எண்ணெய்ப் பசை நீங்கும்.(ஆராஞ்சு எழுமிச்சை சாறை அப்படியே போடுவதை விட சிறிது நீர் கலந்து போடுவது சருமத்திற்கு பாதுகாப்பானது.) எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் ஒயில் ஃப்ரீ அல்லது சோப் ஃபீரி பேஸ் வோஸ் உபயோகிக்கலாம்.

நோமல் சருமம்
இது பிரச்சினை இல்லாத சருமம். ஏந்த வகையான அழகு சாதனங்களும் சிகிச்சையும் ஏற்றுக் கொள்ளும். குலீய்ச்சாத பாலில் பஞ்சை நனைத்து முகத்தில் தடவி சிறிது நேரத்திற்குப் பிறகு கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும்.

கெம்பினேஷன் சருமம்
நெற்றி மூக்கு தாடை பகுதி எண்ணெய்ப் பசையாகவும் மீதமுள்ள பகுதி உலர்ந்தும் இருக்கும். எனவே அந்தந்த பகுதிக்கு ஏற்றவாறு சிகிச்சையை செய்ய வேண்டும்.

அலர்ஜி சருமம்
கவனமாக கையாள வேண்டிய சருமம் இது. ஒரு டிஸ் பூன் கற்றாழை ஜெல்லுடன் ஒரு டிஸ்பூன் பன்னீர் கலந்த முகத்தில் பூசி பத்து நிமிடத்தில் கழுவலாம்.

தொடரும்…