ஸ்டைல் ராஜா

669

நிபந்தனை நித்யா
நித்தியா மேனனை நடிக்க வைப்பதென்றால் சாதாரண விடமல்ல. கதை பிடித்தால்த்தான் நடிப்பார். பிடிக்காவிட்டால் எந்தப்பெரிய இயக்குனர் என்றாலும் ~நோ|தான் பதில். ஏ.ஆர்.முருகதாஸிற்கும் இப்பொழுது அதுதான் நடிக்கிறது. தமிழ், தெலுங்கில் அவர் இயக்கும் புதிய படத்தில் நடிக்க மறுத்துள்ளார் நித்யா மேனன். மகேஸ்பாபு நாயகன். இந்திக்கும் பொருத்தமான முகமாக இருக்க வேண்டுமென பிரியங்கா சோப்ராவின் தங்கை பிரணிதா சோப்ராவை தேர்வு செய்துள்ளனர். நுடிக்க தெரிந்த இன்னொரு நாயகி தேவையென நித்யா மேனனை அணுகியுள்ளனர். கதையை கேட்டுவிட்டு, கதையில் தனக்கு முக்கியமில்லையென கூறி நிராகரித்துள்ளார்.

அடம்பிடிக்கும் கீர்த்தி
வந்த வேகத்திலேயே அடுத்தடுத்த பெரிய ஹீரோக்களின் படங்களில் ஒப்பந்தமாகி புயலைக் கிளப்பியவர் கீர்த்தி சுரேஸ். தனுஸ், விசாலுடன் நடிக்க வந்த வாய்ப்புக்கள் பின்னர் இல்லாமல் போனது. அதுபோல தெலுங்கில் ராம் சரண், மகேஸ்பாபு படங்களிலும் நடிப்பார் என கூறப்பட்டு, இறுதி நேரங்களில் கைநழுவியது. இப்படி பெரிய வாய்ப்புக்கள் கீர்த்தியை விட்டு நழுவிச் செல்ல காரணம், ஓவர் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்ற அவரது பிடிவாதமாம். தெலுங்குப்பக்கம் செல்வதென்றால் கவர்ச்சிதான் வழியென கீர்த்திக்கு நெருக்கமானவர்கள் அறிவுரை கூறியுள்ளனராம்.

காத்திருக்கும் விசாகா
கண்ணா லட்டு தின்ன ஆசையா| படக்குழுவின் தயாரிப்பில் வெளியாகியுள்ளது ~வாலிபராஜா|. சந்தானம், விசாகாசிங் நடித்துள்ளனர். இந்தப்படத்தில் இரண்டாவது நாயகியாக ஒருவரை தேடியபோது தனது நண்பியும், நடிகையுமான நுஸ்ரத்தை பரிந்துரைத்துள்ளார் விசாகசிங். அதனையடுத்து அவர் நடிக்க வைக்கப்பட்டுள்ளார். இந்தப்படத்தின் பின்னர் தமிழில் நிச்சயம் நல்ல வாய்ப்புக்கள் வருமென எதிர்பார்த்திருக்கிறார் விசாகாசிங்.

ஸ்டைல் ராஜா
கபாலி படத்திலும் வழக்கம் போல ரஜினியின் ஸ்டைல் பட்டையை கிளப்புகிறதாம். ரஜினிக்கென ரசிகர்கள் மத்தியில் உள்ள ஸ்டைல் எதிர்பார்ப்பிற்கு கபாலி தீனி போட வேண்டுமென்பதில் இயக்குனர் ரஞ்சித் அதிக அக்கறை எடுத்துள்ளாராம். ரஜினியின் அறிமுகக்காட்சிக்கே அதிகம் மினைக்கெட்டார்களாம். முடியை கோதிவிட்டபடி, ஸ்டைலாக கூலிங்கிளாசை மாட்டிக் கொண்டு ரஜினி வரும் அந்தக்காட்சிக்கு நறைய கமராக்கள் பயன்படுத்தப்பட்டு படப்பிடிப்பு நடந்துள்ளது.

சக்ஸஸ் சேதுபதி
பீட்சா, நடுவில கொஞ்சம் பக்கத்தை காணோம், சூது கவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என வரிசையாக நான்கு ஹிட் கொடுத்தவர் விஜய் சேதுபதி. பின்னர் சில படங்கள் சறுக்கின. சுதாகரித்துக் கொண்டு நானும் ரௌடிதான் ஹிட்டடித்தார். பிறகு சேதுபதி, காதலும் கடந்து போகும் என ஹிட் கொடுத்துள்ளார். அடுத்தடுத்து ஹிட் அடித்துவரும் விஜய் சேதுபதியின் படங்கள் இந்த வருடத்தில் ஏழு வரவுள்ளனவாம். அதிக படங்கள், அத்தனையும் ஹிட் எப்படியப்பா இது என
எல்லா ஹீரோக்களும் வாய் பிளக்கிறார்களாம்.