தானியங்களும் அழகுக்கு கை கொடுக்கும்

144

உளுத்தம் பருப்பு:
சில தானிய வகைகள் சரும பூச்சுக்கு உபயோகப்படுத்துவதில்லை. என்னும் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்ததாக இருக்கும். உடல்ஆரோக்கியம் நன்றாக இருந்தாலே சரும புற அழகும் தானாக வந்து சேருமல்லவா? உளுத்தம் பருப்பில் இரும்புத் சத்தும் புரத சத்தும் அதிகளவில் இருக்கின்றது. குறிப்பாக உளுத்தம் தோலில் அதிக சத்து இருக்கின்றது.

பெண்களின் கருப்பைக்கு வலுவூட்டக் கூடிய சக்தி உளுந்தில் இருக்கின்றது. இடுப்பிற்கு உறுதி சேர்க்க கூடியது. உளுந்தை வறுத்து மாவாக்கி சக்கரை நெய் சேர்த்து களி செய்து முதல் மாத விலக்காகும் பெண்களுக்கு கொடுத்து வந்தால் கருப்பை பலமாகவிருக்கும். மாதவிலக்கின் போது ஏற்படும் வலி இல்லாது நோமலாகவிருக்கும். பிரண்டையும் உளுத்தம் மாவும் சேர்த்து செய்யும் அப்பளமும் உடலுக்கு நல்லது.

திருமதி.ச.கார்த்திகாயினி
வின்னீஸ் லக்கி இந்தியன் பியூட்டி பார்லர்
திருநெல்வேலி ( Joykarthiha3014@gmail.com)

பார்லி:
வட இந்தியர்கள் அளவிற்கு நமது நாட்டில் பார்லியை உபயோகிப்பது இல்லை. பார்லியின் மகத்துவம் தெரியாமலேயே பலர் இருக்கின்றார்கள். உடலில் அதிகபடியாக நீர் சத்து அதிகமாகி விட்டால் அதை குறைக்க கட்டுப்படுத்த பார்லி உபயோகப்படுத்தலாம். கர்ப்பிணிப் பெண்களுக்கு நீர் சத்து உப்பு சத்து அதிகமாகி விட்டால் கை கால் பெரிதாக வீங்கி விடும். இதற்கு காலையில் ஒரு டம்ளரும் மாலையில் ஒரு டம்ளரும் பார்லியில் ஊற வைத்த நீரை குடித்து வந்தால் வேண்டாத நீரை எடுக்கும். பார்லி கஞ்சி அருந்துவதும் உடலுக்க நன்மை பயக்கும்.

கோதுமை
கோதுமையில் பல வகைகள் இருந்தாலும் அதன் குணம் சற்று ஏறக் குறைய ஒன்று தான். உடல் பலம் குறைந்தவர்கள் கோதுமைக் கஞ்சியை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நல்ல பலம் கிடைக்கும். சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி வாரம் ஒரு முறை கோதுமை மாவை எடுத்து நீரில் டிப்ஸ் செய்து போடவும். கோதுமையை சுத்தமான ஈரத்துணியில் போட்டு முளை கட்டியதும் அதை எடுத்து போத்தலில் வளர்த்தால் செடியாக வளரும். அதில் ஒரு இஞ் அளவிற்கு வெட்டி தூய்மையான நீரோடு சேர்த்து குளித்து வரலாம். இதையே ஷ்லீமீணீவ ரீக்ஷீணீளள ழீரவீநீமீ  என்கிறார்கள். இது இரத்தத்தை சுத்தம் செய்யக் கூடியது. இயற்கையாகவே பல நோய்களை குணப்படுத்தக் கூடிய சக்தி இந்த கோதுமை புல் சாருக்கு உண்டு.

ஓட்ஸ்
நோயிலிருந்து மீண்டவர்கள் ஓட்ஸ் உட்கொள்ளும்படி மேல் நாடுகளில் மூலிகை நிபுணர்கள் சிபாரிசு செய்கிறார்கள். ஜீரணத்திற்கு சிரமம் தராத உடலுக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்க கூடிய உணவு மருந்து ஓட்ஸ். ஓட்ஸ்சில் மாச்சத்து புரதச் சத்து விட்டமின் பீயும் ஈயும் உள்ளன. மேலும் தாது உப்புக்கள் பொட்டாசியம் பொஸ்பரசும் உள்ளன. இருதயத்திற்கு பலமூட்டக் கூடிய ஓட்ஸ் கொலஸ்ரோலை கட்டுப்படுத்துகின்றது. ஓட்ஸ் கஞ்சியை அருந்தினால் களைப்பிலிருந்து நிவாரணம் கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கக் கூடிய ஓட்ஸ் ரிக்கெட்ஸ் என்கிற எலும்பு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் நல்ல பலன் கிடைக்கம்.

உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாது சருமப் பராமரிப்பிற்கும் அழகிற்கும் ஓட்ஸ் சிறந்ததாக கொள்ளப்படுகின்றது. இதில் இயற்கையாகவே எண்ணெய் பசை உண்டு. உலர் சருமத்திற்கு உகந்ததாக ஓட்ஸ் கருதப்படுகின்றது. சிறிதளவு ஓட்சைப் பாலில் வேக வைத்து ஆற வைத்து முகத்தில் பூசி கழுவலாம்.உலர் சருமத்திற்கு அருமையாக பக் ஓட்சையும் தேனையும் கலந்து பூசலாம். இத்துடன் எழுமிச்சம் பல சாறு சிறிது கலந்து பூசினால் பியூட்டி பார்லரில் ப்ளீச் செய்த எஃபெக்ட் கிடைக்கும்.  ஓவ்வொருவரின் சமையலறையிலும் அவசியம் இடம் பெற வேண்டியது ஓட்ஸ் மா.

கருஞ்சீரகம்
இது தலைமுடிக்கு குளிர்ச்சியைக் கொடுக்க கூடியது. கருஞ் சீரகத்தை 4டிஸ்பூன் எடுத்துக் கொண்டு லேசாக வறுக்கவும். 250 மில்லி லீட்டர் நல்லெண்ணெய்யை காச்சி அதில் போட்டு வேக விடவும். (எண்ணெய் புகை வரும்படி சூடாக்க கூடாது.) பின் ஆறியதும் இந்த எண்ணெயை வடிகட்டி வைத்து கொண்டு தலையில் தேய்த்து வரலாம்.

 தொடரும்…