பெண் குழந்தைகளை விட அதிகளவில் ஆண் குழந்தைகளே பிறக்கின்றன!

121

கனடாவில் வாழும் இந்தியத் தாய்மாருக்கு பெண் குழந்தைகளை விட மிக அதிகளவிலான வித்தியாசத்தில் ஆண் குழந்தைகள் பிறக்கின்றார்கள். அசாதாரணமான விதத்தில் நடக்கும் இந்தப் பிறப்பு வீதத்தினால், கடந்த 20 ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளில் பெண் குழந்தைகளை விட  4400 க்கு மேற்பட்ட ஆண்குழந்தைகள் அதிகமாகப் பிறந்துள்ளதாக அண்மையில் செய்யப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இந்த ஆய்வாளர்கள் ‘கனடாவின் ‘காணாமற் போன பெண்கள் ‘ பற்றிய தமது ஆய்வில், இதற்கான பிரதான காரணமாக இருப்பது கருக்கலைப்புச் செய்தலே என்று தெரிவிக்கின்றனர்.

கனடிய மருத்துவ சங்கத்தின் ஆய்வு இதழில் வெளியான இந்த ஆய்விற்கு,  கிட்டத்தட்ட 6 மில்லியன் பிறப்புக்கள் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டு ஆராயப்ப்ட்டிருக்கின்றன. இன் ஆய்வின்போது, இந்தியத் தாய்மாரிடைய இத்தகைய அதிகளவில், ஆண் பெண் பிறப்பு விகிதம் வேறுபடுவதற்கும், மூன்று மாதங்களுக்கும் ஆறு மாதங்களுக்கும் இடையில், குழந்தை ஆணா,பெண்ணா என்று அறியக்கூடிய நிலை வந்தவுடன் செய்யப்படும் கருக் கலைப்புக்கும் இடையில் நேர்ப்படியான தொடர்பு இருப்பதாக அந்த ஆய்வாளர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.கனடாவின் புள்ளிவிபர. நிறுவனம் மற்றும் தொறொன்ரோவிலுள்ள மருத்துவ விஞ்ஞான மதிப்பிடுகளுக்கான நிறுவனம் ஆகியவற்றிலிருந்து திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே இந்த ஆய்வு மேற்கொல்ளப்பட்டிருக்கிறது.

இது பற்றிக் கருத்துத் தெரிவித்த ஆய்வறிக்கையின் பிரதான ஆசிரியரும் தொறொன்ரோ சென்ற் மைக்கேல் வைத்தியசாலயை சேர்ந்த வைத்தியருமான மார்சிலோ உர்க்குயா, ‘இங்குள்ள குடியேறியுள்ள சில சமூகங்களில் பெண்களை விட ஆண்அள் உயர்வாகக் கருதப்படுகின்றனர். இந்தப் பிரச்சினை ஒன்றும் வெறும் கருக்கலைப்புப் பிரச்சினை அல்ல. மாறாக இது ஒரு பால் சமத்துவம் சம்பந்தப்பட்ட பிரச்சினையாகும். இன்றைய கனேடிய சமூகத்தில் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் வழங்கப்படும் பெறுமானம் தொடர்பான ஒரு நியாயமான விவாதத்தை மேற்கொள்ள வேண்டிய தேவை இருப்பதை இது காடுகிறது என்று நான் நினைக்கிறேன்.’ என்று குறிப்பிட்டர்.

அவரது இந்த ஆய்வு, திட்டமிட்ட கருக்கலைப்புக்கும் ,ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள இந்தியத் தாய்மாருக்கு அதிகளவில் ஆண்குழந்தைகள் இருப்பதற்குமான தொடர்பை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

இயற்கையில் ஆண் குழந்தைகள் பிறக்கும் தொகை பெண்குழந்தைக்ள் பிறக்கும் தொகையைவிட சற்று அதிகமாகவே இருக்கிறது. 100 பெண்களுக்கு 107 ஆண்கள் என்ற விகிதத்திலேயெ இயற்கையான பிறப்பு வீதம் உலகளாவிய ரீதியில் காணப்படுகிறது. ஆனால் கனடாவில் வாழும் இரண்டு குழந்தைகளுள்ள இந்தியத் தாய்மாரை எடுத்தால் அவர்களுடைய குழந்தைகளில் 138 ஆண்குழந்தைகளுக்கு 100 பெண்குழந்தைகள் என்ற நிலையே இப்போது நிலவுகிறது. ஆனால் அது ஒன்ராறியோவில்,196 க்கு 100 என்ற விகிதத்தில் உள்ளது. கருக்கலைப்பு செய்யத் தொடங்கியபின் இது மிகவும் அதிகரிக்கிறது. ஒரு கருச்சிதைவு மட்டும் செய்த தாய்மாரை எடுத்தால் இந்த விகிதம் 326க்கு 100 எனவும்,இரண்டு கருச்சிதைவு செய்த தாய்மாரை எடுத்தால் 409க்கு 100 என்ற விகிதத்தையும், அதைவிட அதிகமாக கருக்கலைப்பு செய்த தாய்மாரை எடுத்தால் 663 க்கு 100 பெண்கள் என்று காணப்படுகிறது, இந்தக் கருக்கலைப்புக்கள் எல்லாம் கர்ப்பமாகி இரண்டாவது மூன்று மாதஇடைவெளிக்குள், குழந்தை ஆணா பெண்னா என்று தெரிந்து கொண்டபின் செய்யப்படும் கருக்கலைப்புக்களே.

கருச்சிதைவுகளோ, தானாகவே வரும் கருக்கலைவுகளோ, ஆண்குழந்தைகள் அதிகரிப்பை தரவில்லை என்று அந்த ஆய்வு மேலும் தெரிவிக்கிறது. பொதுவாகவே ஆசிய சமூகங்களில், குறிப்பாக இந்தியாவில் நிலவும் பால் ரீதியான பாரபட்சமே  இத்தகைய ஆண்குழந்தையை முதன்மைப்படுத்தும் நிலைக்கு காரணமாக அமைகிறது என்று உந்த ஆய்வு மேலும் தெரிவிக்கிறது. இந்த புதிய ஆய்வு இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்து வந்தவர்களில் அதிக கவனத்தைக் குவித்ததற்குக் காரணம், அவர்கள் தான் குடிவரவாளர்களில் அதிகளவிலான குழந்தைகளைப் பெறுபவர்களாகவும் இருக்கிறார்கள். சீனக் குடிவரவாளர்களிடமும் குறிப்பிடத்தக்க அளவுக்கு வேறுபாடு இருப்பினும், அவற்றை கருக்கலைப்புடன் தொடர்புபடுத்த முடியவில்லை என்று அந்த ஆய்வு மேலும் தெரிவிக்கிறது.

இந்த தகவல்களில், இந்த இந்தியக் குடிவரவாளர்கள் எபோது கனடா வந்தார்கள் என்பதையோ,குழந்தையின் பாட்டன் பாட்டி எந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் என்ற விபரத்தையோ கொண்டிருக்கவில்லை என்றிந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் கனடியத்தொலைக்காட்சிக்கு கருத்துத் தெரிவித்த ,இண்டோ-கனடா பெண்கள் அமைப்பின்  திட்ட ஒருங்கமைப்பாளரான த்றிப்பாட் க்வூர், ‘ முதலாவது பிள்ளை பெண்ணாக இருப்பதை பொதுவாக ஏற்றுக் கொள்வார்கள் ஆயினும் இரண்டாவது குழந்தை ஆணாக இருப்பதையே விரும்புகிறாற்ற்கள் என்று தெரிவிக்கும் அவர் எனக்குத் தெரிய பல பெண்கள் கருக்கலைக்கும்படி வற்புறுத்தப்படுகிறார்கள் என்றும் குறிப்பிட்டார். மறுக்கும் பெண்களை உறவுகள் புறக்கணிப்பது மட்டுமல்லாமல் பிறக்கும் குழந்தையையும் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்