கோடையிலும் கூலாகலாம்

192

அப்பாடி ! என்ன தாங்க முடியாத வெய்யில். கோடைகாலம் முடியும் வரை எல்லோர் வாயிலும் இந்த வசனத்தை கேட்கலாம். வெய்யில் காலத்தில் நமது உடலிலும் சருமத்திலும் பல பாதிப்புக்கள் ஏற்படுவது இயற்கை. உடல் ஆரோக்கியத்திற்கு உண்ணும் உணவு மிக முக்கியம். மேலும் நமது சருமத்தை பாதுகாக்க சில வழிமுறைகளை அக்கறையுடன் மேற்கொள்ள தான் வேண்டும். வெப்பத்தினால் அல்ரா வயலட் A.B  கதிர்கள் நமது சருமத்தைர தாக்கும். அது 90 வீதம் நமது சருமத்தை பாதிப்படைய செய்யக் கூடியது, எனவே வெய்யிலில் செல்லும் முன்னர் s.p.f   (சன் புறடெக்ஷன் பக்ரர்) அடங்கிய சன் கிறீம் லோசன் போடுவது நல்லது.

இயற்கையான பொருட்களை கொண்டு நமது சருமத்தை பாதுகாக்க இயலாதா என்ற கேள்வியும் சந்தேகமும் பலருக்கு எழலாம். வெளியில் செல்லும் போது நேரத்தை மிச்சப்படுத்த வேண்டியும் சருமம் பாதிக்காமல் இருக்கவும் கிறீம் அல்லது லோசன் போடத் தான் வேண்டும்.

இதை வெய்யிலில் செல்லும் முன்னர் பூசினால் எவ்வளவு நேரம் நமது தோல் பாதுகாப்பாக இருக்கும். s.p.f  10, 15, 50, 60 எண் வரை கூட உண்டு. இதில் ஒரு எண்ணிற்கு 5 நிமிடங்கள் என்ற கணக்கில் நமது தோலை வெய்யிலில் இருந்து பாதுகாக்கலாம். அதாவது நீங்கள் s.p.f  15 அடங்கிய கிறீம் பூசினால் 75 நிமிடம் உங்கள் சருமத்தை பாதுகாக்கலாம். குறிப்பிட்ட நிமிடங்களுக்கு பிறகு திரும்பவும் முகம் கழுவி கிறீமை பிறஸாக பூச வேண்டும்.  இது கறுப்பாக இருக்கும். இரும்பு சத்து இதில் அதிகம் உள்ளது. குளியல் பொடியில் வாசணைக்காக கார் போக அரிசி சேர்க்கலாம். இது சொர சொரப்பாக இருப்பதால் இறந்த செல்களை அப்பபுறப்படுத்த அழகு நிலையங்களில் உபயோகப்படுத்துகின்றோம்.

கறிவேப்பிலை, வெட்டி வேர், வெந்தயம்,  கார் போக அரிசி . இவற்றை அன்றாடம் தலைக்கு தேய்க்கும் தேங்காய் எண்ணெயில் போட்டு வைத்தால் உடலுக்கு குளிர்ச்சியையும் முடிக்கு வளர்ச்சியையும் கொடுக்கும்.

அவள்

நமது சருமத்தில் உள்ள இறந்த செல்களை அவ்வப்போது நீக்கவில்லை எனில் சருமத்தில் பிரச்சினை ஏற்படும். இறந்த செல்களை நீக்க அவள் பயன்படுகின்றது. பாலில் அவளை நன்றாக வேக வைத்து மசித்து அதை முகத்தில் பூசி சுத்தமான தண்ணீரில் நன்கு கழுவி  வந்தால் இறந்த செல்கள் சருமத்தில் இருந்து நீங்கும். சருமம் புது பொலிவுடன் இருக்கும்.