கோடையிலும் கூலாகலாம்

146

சருமத்திற்கு

பொதுவாக எண்ணெய் கொழுப்பு அதிகம் கலந்த சோப்பை உபயோகிப்பதை தவிர்க்கவும். ph balance உள்ள சோப் உபயோகிக்கலாம். கடலை மாவும் பயற்றம் மாவும் எந்த வித தொந்தரவும் கொடுக்காதவை. அவற்றைத் தினமும் குளிக்கும் போது உபயோகப்படுத்தலாம்.

வியர்வை நாற்றம்

வேப்பிலையைக் குளிக்கும் நீரில் போட்டு அந்த நீரில் குளித்தால் வியர்வையால் ஏற்படும் கெட்ட நாற்றம் போகும். ஒரு வாளி நீரில் கற்பூரத்தூள் ஒரு சிட்டிகை போட்டுக் குளிக்கலாம். இதனால் சருமத் துவாரங்கள் திறந்து தோல் நன்கு சுவாசிக்க வழி வகுக்கும். டீ சாயம் (ஹேபல் டீ தற்பொழுது சிறிய பக்கெட்டுக்களிலும் வருகின்றது. அதை ஒரு பக்கெட்டிற்கு 2 கப் நீரில் கொதிக்க வைத்து ஆற வைக்கவும்.) எடுத்து அந்த நீரில் முகம் கழுவினால் கோடையில் சருமத்தில் ஏற்படும் எரிச்சல் குறையும்.
வெயிலில் அலையும் பொழுது உடல் அதிகமாகக் கறுத்து விடும். இதற்கு பாலில் குங்குமப் பூவை ஊற வைத்து அதைப் பூசலாம்.

வெள்ளைக் கொண்டைக் கடலை மா பட்டாணி மா சம அளவு எடுத்துக் கொண்டு இவற்றுடன் ஒரு டீ ஸ்பூன் இளநீரும் தேங்காய்ப் பாலும் சேர்த்து ஊற வைத்து முகம் கழுவினால் சருமம் மென்மையாகும். கறுப்பாக இருப்பவர்கள் நல்ல நிறமாகலாம். முல்தானி மெட்டி பௌடர் ஒரு டிஸ்பூனுடன் இரு டிஸ்பூன் டீ சாயத்தைச் சேர்த்து முகத்தில் அரை மணி நேரம் ஊற வைத்து கழுவவும். வெயிலில் செல்வதற்கு முன்னும் பின்னும் இதை உபயோகிக்கலாம்.

அதிகமான வியர்வையால் கையின் அடியிலும் கல்களின் இடுக்குகளிலும் அரிப்பு ஏற்பட ஆரம்பிக்கும். இதனால் தோல் பாதிப்படையும். உடலிலுள்ள உப்பை வெளியேற்ற அதிக அளவு நீர் அருந்த வேண்டும். உடலைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். 90வீதம் நலம் நாம் சாப்பிடும் உணவிலும் வாழும் வாழ்க்கை முறையிலும் தான் அடங்கியிருக்கின்றது. பிறகென்ன கோடையிலும் மட்டுமல்ல வாழ்நாள் முழுவதுமே அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கலாம்.

15 டிஸ்பூன் திரிபலா பொடியில் தண்ணீர் சேர்த்து உடலில் வேர்க்குரு உள்ள இடங்களில் தடவி வந்தால் வேர்க்குரு மறையும். உலர்ந்த ஒரேஞ்- ரூ 2 டிஸ்பூன், பழத்தோல் தூள் ரூ- சிறிது, சந்தனத் தூள்- ரூ 1 டிஸ்பூன், வெட்டிவேர் பவுடர்- ரூ சிறிது, பன்னீர்- ரூ சிறிது இவை கலந்து ஒரு நாளைக்கு இரு முறை பூசி குளிர்ந்த நீரில் கழுவலாம்.