அழகின் இரகசியம்

276

லைமுடிக்கு அடுத்தாற் போல் முகத்திற்கு அழகு சேர்ப்பது நெற்றி தான். நெற்றியில் உயரமான நெற்றியாக இருந்தாலும் குறைவாக இருந்தாலும் நாம் செய்யும் “ஹெயா ஸ்டைலைக்” கொண்டே சரிப்படுத்தி விடலாம்.

முன் நெற்றி வழுக்கை உள்ளவர்கள் ஃப்ரின்ச் கட் செய்து கொள்ளலாம்.

நீங்கள் வைத்துக் கொள்ளும் பொட்டும் உங்களது முகத்திற்கு அழகு சேர்க்கும். தரமான பொட்டை பொருத்தமான கலரில் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒலிவ் எண்ணெய் மிதமான சூட்டில் நெற்றியில் வட்ட வடிவான மசாஜ் செய்யவும்.

புருவங்களை ஜபுரொ காஜல் பென்சிலால் மற்றும் லைனராலும் அழகு படுதலாம்.

புருவங்களில் முடி இல்லாதவர்கள் விளக்கெண்ணெயை  லேசாக  சூடாக்கி இரவு மசாஜ் செய்யவும். காலையில் முகத்தைக் கழுவவேண்டும். இப்படி ஒரு மாதம் செய்தால் நன்கு புருவ முடி வளரும்.

புருவ முடிக்கு நிறம் கிடைக்க
விளக்கெண்ணெய் கரிசலாங்கண்ணி எண்ணெய் தலா 5 சொட்டு எடுத்து சூடு செய்து நெல் உமி ஒரு சிட்டிகை கலந்து புருவங்களில் மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்து வெது வெதுப்பான நீரில் கழுவவம். இதை வாரம் மூன்று முறை செய்யவும்.

மூக்கின் மேல் உள்ள கரம்புள்ளிக்கு
தோலின் உள்ளே இருக்கும் துவாரங்களில் அழுக்கு சேரும் போது மூக்ககில் கரும்புள்ளி தோன்றும்.

ரோஜா இதழ்கள்-10
சூடான நீர்- 1/2 ரம்ளர்
சுடு நீரில் ரோஜா இதழ்கனள அரை மணி நேரம் ஊற வைக்கவும். பின் அரைத்து மூக்கில் தடவவும்.
வ்வக்ஸ்
சீனி-1 கப்
எலுமிச்சம்பழசாறு-ஒரு கப்
தண்ணீர்-ஒரு கப்

இவற்றை அடுப்பில் குறைந்த நெருப்பில் வைத்து சுடாக்கினால் வ்வக்ஸ் ஆகும். இதை மூக்கில் கரும்புள்ளி இருக்கும் இடத்தில் தடவவும். அதன் மேல் கொட்டன் துணியை வைத்து வேகமாக இழுத்தால் கரும்புள்ளி வந்து விடும். முகத்தில் மற்ற இடத்தில் வ்வக்ஸ் போட்டால் பரு அதிகரிக்கும்.

மூக்கின் மேல் உள்ள எண்ணெய் பசைக்கு
சிலருக்கு எப்பொழுதும் மூக்கின் மேல் பளபளப்பாக எண்ணெய் பசையுடன் காணப்படம். இதைத் தவிர்க்க ஒரேஞ் பழச்சாற்றுடன் முல்தாணி மெட்டி கலந்து தேய்த்து வரலாம். அவ்வப்போது டிஷ்யூ பேப்பர் கொண்டு ஒற்றி எடுத்தலும் எண்ணெய் பசை போகும்.

கழுத்து கறுப்பு மறைய
தக்காளி சாறு அரை டிஸ்பூன் தேன் அரை ஸ்பூன் சமையல் சோடா ஒரு சிட்டிகை மூன்றையும் கலந்து கழுத்தில் அப்பளை பண்ணி அரை மணி நேரம் கழித்து கழுவினால் சிறிது நாளில் கறுப்பு மறைந்து விடும்.

கண் கருவளையம் நீங்க
ஒரு முட்டையின் வெள்ளைக் கருவை கண்களின் அடியில் தடவி 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவவும்.
உருளைக்கிழங்கு சாறு- 10டிஸ்பூன்
ஆட்டா மா- 1டிஸ் பூன்
கலந்து கருவளையங்களின் மீது போடலாம். இளம் பச்சை நிற வெற்றிளையைப் பன்னீரில் நனைத்து கண் மேல் வைத்து எடுக்கலாம். மேற்கண்ட சிகிச்சைச் செய்து பாருங்கள் கருவளையம் காணாமல் போய்விடும்.

முகப்பரு தழும்பு மறைய
கடலை பருப்பு 1டிஸ்பூன் ஒரு மிளகு இவற்றை எடுத்து ஒரு டிஸ்பூன் பாலில் ஊற வையுங்கள். இதனுடன் கால் டிஸ்பூன் முல்தானி மெட்டி பவுடரை சேர்த்து கலக்குங்கள். பிறகு இதை முகத்தில் பக் ஆகப் போட்டு உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். பருக்கள் இருந்த வடு படிப்படியாக மறைந்து போகும்.