உதட்டோரம் ஒரு இரகசியம்

288

ந்த வித உணர்வுகளையும் வெளிப்படுத்துவதில் உதடுகளுக்கு முக்கிய பங்கு இருக்கின்றது. கண்களுக்கு அடியில் உதடுகளும் எண்ணெய் சுரப்பிகள் இல்லாததாலேயே வெப்பம் குளிர் தாங்க முடியாததாக இருக்கின்றது. சரியான பராமரிப்பு உதட்டிற்கும் வேண்டும். இல்லையெனில் உதடுகளின் மீது சுருக்கங்கள் கோடுகள் எற்படும்.

உதடுகளை சிலர் அடிக்கடி கடிப்பார்கள். இதனால் தோல் உரிந்து விடும். இதற்கு ஓட்ஸ் பௌடர் அல்லது பச்சைப் பயறு மாவுடன் சில துளி தேன் கலந்து உதட்டில் தடவலாம். தற்பொழுது இயற்கையிலேயே காய் கறிகளில் இருந்து எடுக்கப்படும் கொழுப்பிலிருந்து லிப்ஸ்டிக் தயாரிக்கின்றார்கள். இருந்தாலும் அடிக்கடி லிப்ஸ்டிக் பாவிப்பது நல்லதல்ல. இப்பொழுது பல நிறங்களில் வஸ்லின் வருகிறது . இதை உபயோகித்தால் உதடுகளுக்குப் பாதுகாப்பாக இருக்கும்.

ஒரு சிலருக்கு உதடுகளின் ஓரங்களில் புண் மாதிரிக் காணப்டும். விற்றமின் பி கொம்ப்ளக்ஸ் சத்து குறைபாட்டினால் இது வரும். காய்கறிகள் கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். விட்டமின் ஈ உள்ள சன்ஸ்கிரீம் லோஷனை வாய் ஓரத்தில் இருக்கும் புண்ணுக்குத் தடவலாம் .

உதட்டின் மென்மைக்கும் நிறத்திற்கும்
முட்டையின் வெள்ளைக் கரு – 1டிஸ்பூன்
தேன்- 1/2டிஸ்பூன்
கலந்து உதடுகளில் தடவி வந்தால் சிவப்பாகும். மாதுளம்பழச் சாறு அல்லது பீட்ரூட் சாற்றை தினமும் தடவி வந்தால் உதடுகள் சிவப்பாகும்.

வஸ்லீன் – 1ஸ்பூன், தேன் – 1/2ஸ்பூன், ஒரேஞ் பழச்சாறு – சிலதுளி. இவற்றை உதடுகளில் தடவி வந்தால் உதடு பட்டுப் போல மென்மையாகும். லைட்டான வெதவெதுப்பான டீ சாயம்- அரை கப்பில் ரோஜா இதழ்கள்  – 5 போட்டு அதில் டவலை நனைத்து ஒத்தடம் கொடுக்கலாம்.

உதடுகளின் மீது வெதுவெதுப்பான தண்ணீரையும் குளிர்ந்த  நீரையும் மாறி மாறி 10 நிமிடங்களுக்கு ஒத்தடம் கொடுக்கலாம். இதை வாரம் இரண்டு மூன்று முறை செய்யலாம். தினமும் சிறிதளவு வஸ்லினை எடுத்து உங்கள் உதடுகளில்தடவி வந்தால் மென்மையாகவும் வெடிப்புக்கள் இல்லாமலும்  இருக்கும்.

மனதில் ஜன்னல் கண்கள் என்றால் உதடு அதன் மேடை என்பார்கள். மெல்லிய தடித்த சொப்பு என உதடுகளின் அமைப்பு நிறம் ஆகியவற்றை பொருத்து லிப்ஸ்டிக் பூசி மேலும் உதட்டை அழகாகாக்குங்கள்.