ஹியா டையும் போட்டுக்கலாம்

முன்பு வயதானால் தான் நரை வரும். தற்போது இளவயதிலேயே பலருக்கு நரைக்க ஆரம்பித்து விடுகின்றது. பரம்பரை நாம் எடுத்து கொள்ளும் டயட் வாழ்க்கை முறை சத்து குறைபாடு இவற்றினாலேயே நரை ஏற்படுகின்றது.
சுலபமாக இன்றய கால கட்டத்தில் நரையை மறைக்க உதவுவது ஹியா டை தான்.

தன்னம்பிக்கையோடு உலாவர நரை முடி ஒரு தடைக்கல்லாக இருக்கின்றது. என பலரும் எண்ணத் தொடங்கி விட்டனர். முதன் முதலில் ஹியா டையை எப்படி போடுவது என்று தெரியாமல் பலரும் திண்டாடுகின்றனர். அவர்களுக்கான டிப்ஸ் இதோ.

முதலில் பெயர் பெற்ற நிறுவனத்தின் தரமான டையை தேர்ந்தெடுங்கள்.

கறுப்பு பிறவுன் கலர். இதில் எது நமக்கு தேவை என்பதை தீர்மானியுங்கள். அமோனியா போன்ற இரசாயனம் கலந்த டையை தவிருங்கள். மூலிகை கலந்த டையை தேர்வு செய்யுங்கள். புரோட்டினை அடிப்படையாக கொண்ட நிரந்தர ஹியா டை வந்திருக்கின்றது. இவற்றில் கடுமையான இராசாயனக் கலவை இருக்காது. ஆனால் புதிதாக முடி வளரும் பொழுது வெள்ளையாக இருக்கும். அவற்றில் மட்டும் டச்சப் செய்தால் போதுமானது.

முதன் முதலில் டை போடும் பொழுது காதோரம் டையை தடவி மறுநாள் வரை வைத்திருங்கள். 24மணி நேரம் வரை அலர்ஜி ஏற்படாது இருந்தால் ஹயா டை உபயோகிக்லாம். டை போட்டால் அலர்ஜி வருபவர்கள். அலர்ஜிக்கான மாத்திரையை முன் கூட்டியே போட வேண்டும்.  இரண்டு அல்லது மூன்று மணி நேரம் கழித்து டை உபயோகிக்க வேண்டும்.பைக்கற்றில் குறிப்பிட்ட படி குறிப்பிட்ட நேரத்தில் தலை முடியை அலசுங்கள்.தலை முடியை அலசிய பிறகு ஹெண்டீசனர் உபயோகப்படுத்த வேண்டும். இது கூந்தலுக்கு பளபளப்பையும் பாதுகாப்பையும் தரும்.

ஹியா டை மாதம் ஒரு முறை போட்டால் போதும். அடிக்கடி உபயோகித்தால் தலைமுடி கொட்டும். உபயோகித்த ஹியா டையின் கலர் போகாமல் இருக்க கலர் ஹியார் சம்போவை உபயோகிக்கலாம்.

இயற்கையான ஹியார் டை செய்முறை
அவுரி விதைபொடி- 100கிராம்
மருதானிப்பொடி- 200கிராம்
நெல்லிக்காய்பொடி- 100கிராம்
செம்பரத்திபொடி- 100கிராம்
கருவெப்பிலைபொடி- 50கிராம்
வெந்தயப்பொடி- 100கிராம்

இவை அனைத்தையும் தேவையான அளவு நீர் ஊற்றி ஒரு இரும்பு பாத்திரத்தில் கலந்து ஊற வைத்து விட வேண்டும். மறு நாள் காலயில் தலையில் லேசாக எண்ணெய் தடவிக் கொண்டு இந்த கலவையை முடியில் மட்டும் படுமாறு தேய்க்க வேண்டும். அரை மணி நேரம் ஊறிய பிறகு முடியை அலச வேண்டும். இந்த நேச்சர் டை முடியை கறுப்பாக காட்டும்.

சிவப்பிற்கு
மருதானிபொடி- 200 கிராம்
நெல்லிபொடி- 50கிராம்
எலுமிச்சம் பழம் – 1/2மூடி
கோப்பிச்சாயம் – 4டேபிள்ஸ்பூன்
தயிர் – 1சிறியகப்
ஒலிவ் எண்ணெய் – 2டேபிள்ஸ்பூன்
தண்ணீர் – தேவைக்கேற்ப

இவற்றை கலந்து முதல் நாள் இரவு ஊற வைத்து விட வேண்டும். மறு நாள் குளிக்கும் முன்னர் எடுத்து தடவலாம். நல்ல நிறமாக வரவேண்டும. என்று என்னுபவர்கள் மூன்று மணி நேரம் வைத்திருக்கலாம். இக் கலவை சிறந்த கெண்டிசனராகவும் பயன்படும். தலை முடியை கெண்டிசன் செய்தால் மட்டும் போதும் என்று எண்ணுபவர்கள். இக் கலவையை அரை மணி நேரம் ஊற வைத்து அலசினால் போதும்.

ஹியா டையை தொடவே மாட்டன் என்று அடம் பிடிப்பவர்கள் ஹென்னா உபயோகிக்லாம். ஆனால் ஹென்னாவை அப்படியே உபயோகித்தாலும் அடிக்கடி உபயோகித்தாலும் தலை முடி வறண்டு கொட்டி விடும்.