ஈழச் செய்திகள்

103

வலி.வடக்கில் வீடுகளை அழித்துவரும் இராணுவத்தினர்!
லிகாமம் வடக்கில் உயர் பாதுகாப்பு ஷ்வீடுகளை அழிக்கும் நடவடிக்கைகளை இராணுவத்தினர்  மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கட்டுவன்,  குரும்பசிட்டி பகுதிகளில்  தற்போது  விடுவிக்கப்படாமல்  இராணுவத்தினர்  நிலைகொண்டுள்ள  வீடுகளையே இராணுவத்தினர் அழித்து வருவதாக அப்பகுதி மக்கள்  தெரிவிக்கின்றனர்.

இப்பிரதேசங்களில் உயர் பாதுகாப்பு வலயத்தின் எல்லைகளிலுள்ள வீடுகளில்  இருந்து இராணுவத்தினர்வெளியேறி வருவதாகவும், வெளியேறு முன்பாக தாம் இருந்த வீடுகளை முற்றாக அழித்து வருவதாகவும் உடைக்கப்படும் வீடுகளின்பொருட்களை இராணுவத்தினர் வேறு இடங்களிற்கு கொண்டு செல்வதாகவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே விடுவிக்கப்பட்ட  பகுதிகளிலும் பொது  மக்களின் வீடுகள் அத்திவாரம்  தெரியாத அளவிற்கு  அழிக்கப்பட்டிருந்தன. மக்கள் உடனடியாக மீள்குடியேற  முடியாத நிலையை உருவாக்கவே இவ்வாறு வீடுகளை அழிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் குழுக்கள் சமஷ்டி மூலம் நாட்டைப் பின்நோக்கிக் கொண்டு செல்ல முயற்சி -சம்பிக்க
புதிய அரசியலமைப்பு சட்டமூலத்தில் சமஷ்டி முறையை வலியுறுத்தி  நாட்டைப் பின்நோக்கிக் கொண்டு செல்ல அடிப்படைவாத தமிழ் குழுக்கள் முனைவதாகக் குற்றம் சாட்டியிருக்கிறார் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் செயலாளரும் அமைச்சருமான  சம்பிக்க ரணவக்க.  உண்மையான நல்லிணக்க மொன்றை நோக்கிச் செல்லும் பயணத்தில் இனவாதத்தைக் கைவிட்டு நாட்டின்ஒருமைப்பாட்டுக்காக ஒன்றிணையுமாறு தமிழ் அடிப்படைவாதிகளிடம் கேட்டுக்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்திருக்கிறார். அண்மையில் வட மாகாண சபை உறுப்பினர்கள் அரசியமைப்பு பேரவையின் வழிநடத்தற்குழுவின் முன் ஆஜராகி வடக்கு-கிழக்கு இணைந்த சமஷ்டி முறையிலான மாற்றத்தினையே வட மாகாணமக்கள் கோரி நிற்பதாகத் தெரிவித்திருப்பதற்குப் பதிலாகவே இக்கருத்தை முன்வைத்திருக்கிறார் பாட்டலிக்கசம்பிக்க.

த.தே.கூட்டமைப்பு – அமெரிக்க உயர் மட்ட அதிகாரிகள் சந்திப்பு

கொழும்பில் அமெரிக்கா உயர் மட்ட அதிகாரிகளைச் சந்தித்திருக்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்ட உறுப்பினர்கள் குழு.  இலங்கை வந்துள்ள அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால், அமெரிக்க உதவி அமைச்சர் டொம் மலினோஸ்கி  ஆகியோரையே  கூட்டமைப்புக் குழு கொழும்பில்  சந்தித்துப் பேசியிருக்கிறது.

இச்சந்திப்பில் கூட்டமைப்புக் குழு தற்போதைய நிலவரங்கள் குறித்து பேசியிருக்கிறது. இச்சந்திப்பின் போதுஐ.நா.மனித உரிமைப் பேரவையில்  நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதிலுள்ள குறைபாடுகள் அரசியல் கைதிகளை விடுவித்தல், காணிகளை விடுவித்தல் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கூட்டமைப்பு அமெரிக்க உயர் மட்ட அதிகாரிகளுக்கு விளக்கியதாகக் கூறப்படுகிறது.

இச்சந்திப்புக் குறித்து எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், இலங்கையில் ஆட்சிமாற்றத்தின் பின் நடக்கின்ற பல சீர்திருத்தங்கள், அரசியலமைப்பு சீர்திருத்தம், ஐ.நா.பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்தல் சம்பந்தமாக நீண்ட நேரம் பேசியதாகத்தெரிவித்திருக்கிறார்.

இச் சந்திப்புக் குறித்து கருத்து வெளியிட்டுள்ள சுரேஷ் பிரேமச்சந்திரன், ஐ.நா.மனித உரிமைப் பேரவையில்நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தை அரசாங்கம் அமுல்படுத்த அமெரிக்கா அழுத்தங் கொடுக்க வேண்டும், ஐ.நா.மனித உரிமைப் பேரவை தீர்மானம் நிறைவேற முன்பாக இடம் பெற்று வந்த இராணுவத்தின் காணிசுவீகரிப்பு நடவடிக்கைகளையும் சிங்களக் குடியேற்றங்களையும் தடுக்க அரசாங்கத்திற்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டுமென கோரியதாகத் தெரிவித்திருக்கிறார்.

எம்.ஏ.சுமந்திரன், இலங்கை அரசாங்கம் இலங்கையிலுள்ள கட்சிகள் இந்த செயற்பாட்டில் முழுமையாக வெற்றிகாண்பதற்கு அமெரிக்க உதவி தொடர்ந்து இருக்குமென உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

சாம்பல் தீவு சந்தியில் புத்தர் சிலை
திருகோணமலை சாம்பல் தீவு சந்தியில் பொலிஸ் பாதுகாப்புடன்  பௌத்த பிக்குகளும் சிங்களவர் பலரும் இணைந்து புத்தர்  சிலையை  நிறுவி  பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.அண்மையில் இங்கிருந்த இரண்டு இராணுவச் சோதனை நிலையங்கள் அகற்றப்பட்ட போது, இராணுவத்தினர் அமைத்திருந்த  புத்தர்  சிலையையையும் கொண்டு சென்றிருந்தனர்.  இதனையடுத்து அவ்விடத்தில் பிள்ளையார் சிலையும் சூலமும்  வைக்கப்பட்டதாகவும் அவை உடைத்து சேதமாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து அவ்விடத்தில்  ராணுவத்தினர் வளர்த்திருந்த  அரச மரம்  அழிக்கப்பட்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கிந்றன.

இதன் எதிரொலியாக , பொலிஸ் பாதுககாப்புடன்  பௌத்த பிக்குகளும் சிங்களவர் பலரும் இணைந்து நிரந்தரமானகட்டுமானப் பணியை மேற்கொண்டு  புத்தர் சிலையை நிறுவியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இருந்தபோதும் போதும், இராணுவத்தினர் வெளியேறும் போது தாம் இருந்த இடமெல்லாம் பௌத்த அடையாளங்களை நிறுவிச் செல்லும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதன் ஒரு அங்கமாகவே இது நடைபெற்றுள்ளதாக அங்குள்ள ஒரு பத்திரிகையாளர் தெரிவித்தார்.

சுவரொட்டி
சம உரிமை இயக்கம் மக்கள் குடியிருப்புக்களில் இருந்து இராணுவத்தை அகற்றக்கோரி வடமாராட்சிப்பிரதேசத்தில் சுவரொட்டிகளை ஒட்டியிருக்கின்றது. இராணுவத்தை முகாமுக்குள் மட்டுப்படுத்து, குடியிருப்புக்களிலிருந்து   முகாமை  அகற்று  யுத்தப் பாதிப்பிற்கு இப்போதாவது  இழப்பீடுகொடு  என்ற வாசகங்கள் இந்தச் சுவரொட்டிகளில் எழுதப்பட்டிருந்தன.

கூட்டமைப்பில் கருத்து முரண்பாடுண்டு பிளவில்லை  என்கிறார் மாவை!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் கருத்து வேறுபாடுகள் இருக்கின்ற போதிலும் பிளவுகள் இல்லை அவ்வாறானபிளவுகளுக்கும் கூட்டமைப்பில் இடமில்லை எனத் தெரிவித்திருக்கிறார் மாவை சேனாதிராஜா. அண்மைக்காலமாக வன்னி பொருளாதார மத்திய நிலைய அமைவிடம் உட்பட்ட பல்வேறு விடயங்களில் கூட்டமைப்பினர் மத்தியில்  கருத்து முரண்பாடுகள் குழப்பங்கள் நிலவி வருகின்றமை தொடர்பில்  கருத்துதெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். எனினும் கூட்டமைப்பிற்குள் குழப்பங்களை ஏற்படுத்தும் குழுவொன்று  இயங்கி வருகிறது என்று தெரிவிக்கப்படுகிறது.

40,000 பொது மக்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை அரசாங்கம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது -ரூ -அமைச்சர் மகிந்த சமரசிங்க.
இறுதி யுத்தத்தின் போது 40,000 பொது மக்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை அரசாங்கம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது எனத் தெரிவித்திருக்கிறார் அமைச்சர் மகிந்த சமரசிங்க.அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற (12,ஜூலை) ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறுதெரிவித்திருக்கிறார் மகிந்த சமரசிங்க. இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது.  இறுதி யுத்தத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் 40,000பொது மக்கள் கொல்லப்பட்டார்கள்  என்பதை அரசாங்கம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது, அவ்வாறு பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கான எவ்வித ஆதாரங்களும் இல்லை, இராணுவத்தினர் பொது மக்களை இலக்குவைத்து தாக்குதலை நடத்தவில்லையெனவும் மகிந்த சமரசிங்க தெரிவித்திருக்கிறார்.

அதேவேளை, தனிப்பட்ட ரீதியில் சிலர் குற்றமிழைத்திருக்கலாம் எனவும் ஆதாரங்கள் இருந்தால் விசாரணைநடத்தி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் இருப்பதாகவும்தெரிவித்திருக்கிறார்.  எனினும் யுத்தக் குற்றச் சாட்டுத் தொடர்பில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை என்ற நிலைப்பாட்டினை அரசாங்கம் தெளிவாக அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.