மாம்பழத்தினால் கிடைக்கும் அழகு

மாங்கொட்டையின் உள்ளே இருக்கும் பருப்புக்கு கூந்தல் வளர்ச்சியில் முக்கிய பங்கிருக்கிறது. மாங்கொட்டை பருப்பை அரைத்து விழுது வெண்ணை போல இருப்பதால் இதை மங்கோ பட்டர் என்று கூறுவார்கள். இது தலை முடிக்கு கெண்டிசெனராக செயற்படுகின்றது. சிலருக்கு முன் பக்க முடி உதிர்வு வழுக்கை ஏற்பட்டிருக்கும். இதற்கு ஒரு டிஸ்பூன் மைங்கோ பட்டர் அல்லது மாம்பழ சதையுடன் வேப்பம் பூ சேர்த்து அரைத்த விழுது விளக்கெண்ணை ஒரு டிஸ்பூன் கலந்து தலையில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும்.

பயிற்றம் மா கடலை மா சீயாக்காய் பொடி மூன்றையும் சம அளவில் கலந்து தலையில் தேய்த்து குளிக்க வேண்டும். வாரம் இரண்டு முறை இப்படி செய்து வந்தால் முடி உதிர்வது நின்று முன்புற முடி வளர ஆரம்பிக்கும். மைங்கோ பட்டர் நல்லெண்ணை தேங்காயெண்ணை விளக்கெண்ணை இந்த நான்கையும் சம அளவில் கலந்த மிக்சியில் அடித்து வெய்யிலில் வைத்து எடுக்கவும். இதை தலையில் பக் மாதிரி போட்டு 15நிமிடங்கள் ஊற விடவும். பிறகு சம அளவில் வெந்தயம் பயிற்றம் பரப்பை கலந்து உற வைத்து அரைத்த விழுதை தேய்த்து தலைக்கு குழித்தால் பொடுகு தொல்லை போய்விடும். பொடுகால் முடி உதிர்வது நின்று கூந்தலும் பளபளப்பாகும்.

நாற்பது வயதை நெருங்கினாலே சிலருக்கு கழுத்தில் சுருக்கம் விழ ஆரம்பிக்கும். இதற்கு பாதாம் பருப்பும் கசகசாவும் சம அளவில் சேர்த்து அரைத்த விழுது ஒரு டிஸ்பூன் சேர்த்து கலந்து அந்த பேஸ்ரை கழுத்து பகுதியில் மேலிருந்து கீழ்ப்புறமாக பூசி காய்ந்ததும் கழுவவும். இதை ஒரு மாதம் தொடர்ந்து செய்தால் கழுத்து சுருக்கம் நீங்கி சங்கை போல கழுத்து மின்னும்.

பருக்களால் முகப் பொழிவு குறைந்து விட்டதா? கவலை வேண்டாம். தினமும் குளிப்பதற்கு முன்னர் ஒரு டிஸ்பூன் வேப்பம் பூ விழுது அரை டிஸ்பூன் மாம்பழ சதை அரை டிஸ்பூன் கலந்து முகத்தில் பூசவும். பருக்கள் மறைந்து டல் அடித்த முகமும் டால் அடிக்கும். இதிலுள்ள நல்லெண்ணை தோழின் பளபளப்பை கூட்டி கூடுதல் மிருதுவாகும். மாம்பழ சதையுடன் அதே அளவு ஈர திராட்சையை சேர்த்து அரைத்து அதை ஜஸ் றே இட்டு பிறிச்சில் வைத்து விடுங்கள். உதடுகள்  உலர்ந்து போகும் போதெல்லாம் இந்த ஜஸ்கட்டியை ஒரு துணியில் சுற்றி உதட்டின் மேல் தடவுங்கள். உதடுகள் ரோஜா இதழ் போல மின்னும்.

புருவங்களில் முடி கொட்டுவதற்கு முற்றி புள்ளி வைக்கின்றது மாம்பழ சாறு. ஒரேஞ் சாறு மற்றும் மாம்பழச்சாற்றை சம அளவில் எடுத்து பிறிச்சில் வைக்கவும். புருவங்களில் விளக்கெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் ஒரு பிடி தடவி இந்த ஜஸ்கட்டியை ஒரு மெல்லிய துணியில் சுற்றி கண்கள் மற்றும் புருவத்தில் ஒற்றி எடுங்கள். தினமும் இரவு தூங்கும் முன்னர் இப்படி செய்து வந்தால் புருவத்திலும் இமையிலும் முடி வளரும்.

மாம்பழ கன்னங்கள் வேண்டுமா?
நன்றாக பழுத்த மாம்பழ சதை அரை டிஸ்பூன் கஸ்தூரி, மஞ்சள் 2 சிட்டிகை, பார்லி பவுடர் 1டிஸ்பூன், வெல்லரி பவுடர் அரை டிஸ்பூன். இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து இந்த பேஸ்டை முகத்தில் மாஸ்க் மாதிரி தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவவும். தோலுக்கு தேவையான நீர் சேர்ந்து கன்னம் கொளுகொளு என்று வந்து நிறமும் கூடும்.

வெள்ளரிகாய் வீட்டில் இருந்தால் அதன் சாற்றினை முகத்தில் தடவி 10 நிமிடங்கள் ஊற வைத்து பின் கழுவுங்கள் இல்லாவிட்டால் ஒரு வெள்ளரிக்காய் துண்டை எடுத்து அதை முகத்தில் சிறிது நேரம் தேய்த்து ஊற விட்டு கழுவுங்கள். இதன் மூலமும் சோர்வுடன் காணப்படும் முகத்தை புத்துணர்ச்சியுடன் வெளிக்காட்டலாம்.