வைத்தியரிடம் கேளுங்கள்

212
Strongly coughing young man suffered from asthma

றொச்சன் (28), கோண்டாவில்
கேள்வி: எனக்கு பல வருடங்களாக புகைபிடிக்கும் பழக்கம் இருக்கிறது. அதன் பாதிப்புணர்ந்து தற்போது நிறுத்திவிட்டேன். புகைப்பிடித்ததால் ஏற்பட்ட  இருமல் சுவாசிக்க கஸ்டம் என்பன இப்போதும் இருக்கிறது. தீர்வு சொல்லுங்கள். நுரையீரலில் உள்ள கழிவுகளை எப்படி வெளியேற்றுவது?
பதில்: சிருங்கி பற்பம் , தாளிசாதிசூரணம், கஸ்தூரி கறுப்பு என்பன நுரையீரலை  பலப்படுத்தும் கனகாசகம் திராட்சா அரிஸ்டம் என்பன புகைத்தலால் ஏற்படும் சுவாசக் கோளாறுகளுக்கு  நிவாரணம் அளிக்கும்.

மலரவன் (30), சித்தன் கேணி.
கேள்வி: எங்கள் வீட்டுத்தோட்டப்பகுதியில் குப்பைமேனிச் செடிகள் அதிகம் உண்டு. அதை வெட்டி முயன்றபோது, அது மருத்துவ பயன்பாடுள்ளதென மறித்து விட்டார்கள். அதன் மருத்துவ குணங்களை குறிப்பிட முடியுமா?
பதில்: மாற்றடுக்கில் அமைந்த பல அளவுகளில் உள்ள இலைகளையும்,இலைக்காம்பு இடுக்கிலமைந்த பூக்களையும் கொண்டது. இதற்கு அரி மஞ்சரி, பூனைவணங்கி, மேனி என்ற பல பெயர்கள் உண்டு. இதன் இலை, வேர், சமூலம், (முழுச் செடியும்) மருத்துவப் பயன்பாட்டில் உள்ளது.

தந்தமூலப்பிணிதீத் தந்திருபுண் சர்வவிடம்
உந்துகுன்மம் வாதம் உதிரமூ லந்தினவு
சூலஞ்சு வாசம் தொட்ர்பீ சங்கபம்போம்
ஞாலங்கொள் மேனியத னால்——-(தேரையர் குணபாடம்)

பொருள் – குப்பைமேனி இலையால் பல்நோய், தீச்சுட்டப் புண், பயிர் வகையின் நஞ்சு, வயிற்றுவலி, வளிநோய், மூலம், நமைச்சல், குத்தல், இரைப்பு, மூக்குநீர் பாய்தல், கோழை போன்றவை தீரும். வயிற்றுப் புழுக்கள் நீங்க குப்பைமேனியிலையை நிழலில் உலர்த்திப் பொடித்து 1ஃ2 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் வயிற்றுப் புழுக்கள், மலப்புழுக்கள் வெளியேறும். நீரில் கலந்தும் கொடுக்கலாம். ஆறு மாதத்திற்கு ஒருமுறை குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது. பெரியவர்கள் குப்பைமேனி இலையின் சாறு எடுத்து இலேசாக சூடாக்கி 15 மி.லி. கிராம் அளவு அருந்தி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் வெளியேறும். சொறி, சிரங்கு நீங்க குப்பைமேனி இலையுடன் சிறிது உப்பு சேர்த்து அரைத்து உடலெங்கும் பூசி 15 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் சொறி, சிரங்கு மாறி சருமம் பொலிவுபெறும்.

விமலேஸ்வரன் (39), வரணி.
கேள்வி: நாவற் பழம் நீரிழிவு நோய்க்கு உகந்ததா? வேறு மருத்துவ பயன்பாடுள்ளதா? விளக்கம் தரவும் . .
பதில்: நாவல் பழத்தின் துவர்ப்புச் சுவையே அதன் சிறப்பு அம்சமாகும். நாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். இதனால் இரத்தத்தின் கடினத் தன்மை மாறி இலகுவாகும். மேலும் இரத்தத்தில் கலந்துள்ள இரசாயன வேதிப் பொருட்களை நீக்கி சிறுநீர் மூலம் வெளியேற்றும். நாவற் பழத்தைவிட நாவற்பட்டையே நீரிழிவுநோயாளருக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

நாவல்ப் பட்டையை இடித்து நீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி குடிநீராக அருந்தி வந்தால் நீரிழிவு நோயினால் உண்டான பாதிப்புக்கள் நீங்கும். மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் நாவல்ப் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மூல நோயின் தாக்கம் குறையும்.

அஜீரணக் கோளாறுகளைப் போக்கி, குடல் தசைகளை வலுவடையச் செய்யும். தூக்கமின்றி அவதிப்படுபவர்கள், நாவல்ப் பழத்தை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால், தூக்கமின்மை நீங்கும். மெலிந்த உடல் உள்ளவர்கள் தினமும் நாவல்ப் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் தேறும். நாவல்ப்பழம் வியர்வையைப் பெருக்கும். சரும நோய் ஏற்படாமல் பாதுகாக்கும். பித்தத்தைக் குறைக்கும், உடல் சூட்டைத் தணிக்கும். ஞாபக சக்தியையும் அதிகரிக்கும்.