அமெரிக்கா ஒரு விதிவிலக்கு!

111

லிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பல பதக்கங்களை (இதுவரை 22) கனடா பெற்றிருப்பதாகக் கொண்டாடப்படுகிறது. புதிய இளைய வயதினர் பலர் நீச்சல் போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். எனினும் பெருமையும் கொண்டாட்டமும் அவசியம் எனினும் கனடாவின் வளத்துக்கும் மக்கள் தொகைக்கும் நாம் ஒலிம்பிக் போட்டிகளுக்கு அனுப்புகிற பல நூற்றுக் கணக்கான வீரர்களின் எண்ணிக்கையையும் நாம் அவர்களுக்காகச் செலவழிக்கிற பணத்தையும் எடுத்துக் கொண்டால் நாம் அடைந்திருப்பது தோல்விதான். நாடுகள் வெல்லும் பதக்கங்களின் என்ணிக்கையை வைத்துக் கொண்டு அவற்றின் வெற்றி தோல்வியைக் கணிப்பிடுவது பல முக்கியமான விடயங்களை மறைத்து விடும். கிறெனடா, ஜமைக்கா, நியூசிலாந்து, ஸ்லோவேனியா, டென்மார்க் போன்ற நாடுகள் சிறியவை. சனத்தொகை குறைந்தவை. எனினும் அவ்ற்றின் சனத்தொகை விகிதத்தின்படி பார்த்தால் இந்த நாடுகளின் பதக்கங்களின் எண்ணிக்கை பெரிய சாதனையாகவே இருக்கும். பொருளாதார வளங்கள் எனப் பார்த்தால் கனடியப் பொருளாதார வளம் 100 பில்லியன். எனினும் நாம் பெற்றது வெறுமனே 22 பதக்கங்கள். இத்தகைய பொருளாதார அடிப்படையில் பதக்கங்களை எடை போட்டால் க்றெனாடா, போன்ற சிறிய வளமற்ற நாடுகள் எடுக்கிற ஒரு பதக்கம் நூறு பதக்கங்களுக்குச் சமன். போட்டிக்கு அனுப்புகிற விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கைக்கும் வெற்றி கொள்கிற பதக்கங்களின் எண்ணிக்கைக்கான விகிதாசாரத்தையும் பார்த்தால் கனடா பெரிய தோல்வி என்பது தெரிய வரும். மறுபடியும் சிறிய நாடுகள் தமது அளவை மீறிச் சதனை புரிந்துள்ளன.

ஒரே ஒரு விதி விலக்கு: அமெரிக்கா. அது அனுப்புகிற போட்டியாளர்களும் அதிகம். வெல்கிற பதக்கங்களும் அதிகம். எந்த விகிதாசாரப்படி பார்த்தாலும்!!!