இந்த வெற்றி எனக்கானது மட்டுமல்ல.!

148

லிம்பிக் போட்டிகளில் நீச்சலில் தங்கப் பதக்கம் வென்ற  கறுப்பின வீராங்கனை சிமோன் மனுவல் வரலாற்றுச் சாதனை ஒன்றை நிறுவியுள்ளார். நீச்சல் போட்டிகளில் வெல்பவர்கள் வளம் படைத்த வசதியான குடும்பங்களைச் சார்ந்தவர்களாகவே இருப்பது வழமை. அமெரிக்காவில் கறுப்பின மக்கள் நீச்சல் தடாகங்களுக்குள் 70 கள் வரை அனுமதிக்கப்படவில்லை. அவர்களுக்கு இழைக்கப்பட்ட எல்லா வகையான அனியாயங்களின் பட்டியலில் இதுவும் ஒன்று.

அமெரிக்காவின் கறுப்பின மக்களின் கசிவில் உரிமைப் போராட்டங்களின் போது கறுப்பினச்சிறுவர்களும் சிறுமிகளும் நீச்சல் தடாகங்களில் இறங்கியபோது அந்தத் தடாகங்களில் அசிட் /அமிலம் ஊற்றப்பட்டது. இந்தப் பின்னணியில் அமெரிக்காவின் கறுப்பினப் பெண்களின் சாதனைகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இன்னொரு வீராங்கனையான சிமொன் பைல்ஸ்  Gymastics  இல் நான்கு தங்கப் பதக்கங்களையும் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் அமெரிக்காவுக்காக வென்றுள்ளார். இவரது சாதனையும் அளப்பரியது.

அவருடைய வெற்றி பற்றித் தொலைக்காட்சி நிருபர் ஒருவர் சிமோன் மனுவலைக் கேட்ட போது மனுவல் சொன்ன பதில் சிந்தனைக்குரியது. அவர் சொன்னார்:

இந்த வெற்றி எனக்கானது மட்டுமல்ல. உலகில் நிலவுகிற நம்பிக்கையீனமும், பொலிஸ் அராஜகமும் நம்மை அலைக்
கழிக்கிறபோது இந்த வெற்றி நம்பிக்கையின் குறியீடாக அமையட்டும். எனது நிறம் எனது சமூகத்தின் நிறம். எனது சமூகத்தின் பாரமும் எனது அடையாளத்தின் பாரத்தையும்  சுமக்காமல் மற்றைய இன மக்களைப் போல ஒரு நீச்சல் வீராங்கனையாக மட்டுமே தடாகத்தில் குதிக்கும் ஒரு நாள் வரும் என நம்புகிறேன்.