குழந்தைகளுக்கு புரதம் அவசியம்

191

குழந்தைகளின் திடமான வளர்ச்சிக்கு புரத சத்து அவசியம். புரதம் கட்டடத்தின் செங்கல்  போல்  உடலில் உள்ள செல்கள் உறுதியாக இருக்க  உதவுகிறது. முளைகட்டிய பயறு, பருப்பு வகைகள், பச்சை பயறு, கடலை, பால், முட்டை, மீன்  போன்றவற்றில் அதிகம் புரதம் உள்ளது. இதனை குழந்தைகளின் உணவுகளில் கண்டிப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.

புரதம் வளர்ச்சிக்கும், காபோவைதரேற் சக்திக்கும் பெரிதும் உதவுகிறது. இரண்டும் சேர்ந்ததுதான் சமச்சீரான உணவு. குழந்தைகள் ஓடியாடி  விளையாட படிக்க தேவையான சக்திகளை கொடுக்கும் ஊட்டச்சத்து காபோவைதரேற். கோதுமை, கம்பு, மக்காச்சோளம், அரிசி, இந்தச் சத்துகள் உள்ளது. இவை குழந்தைகள் ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் வளர உதவும். கோதுமையில் றொட்டி செய்து கொடுக்காமல்  காய்கறி கலவையை உள்ளே வைத்து செய்து கொடுக்கலாம்.

வரகு மற்றும் கம்பு ஆகியவற்றில் கஞ்சி அடை தோசை செய்து தரலாம். சோளத்தை வேகவைத்து அதில் உப்பு, மிளகுத்தூள் தூவி கொடுத்தால்  குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.  இப்போது சோழம்மா கடைகளில் கிடைக்கிறது. அதில் சர்க்கரை மற்றும் சிறிது நெய் சேர்த்து  உருண்டையாக பிடித்துக்கொள்ளலாம். சர்க்கரையில் இரும்பு சத்து உள்ளது. அதே சமயம் நெய் பால் சார்ந்த பொருட் என்பதால் கல்சீயம் சத்தும்  கிடைக்கும்.

கொழுப்பு சத்து குழந்தைகளின் வளர்ச்சிக்கு அவசியம். இதிலிருந்து ஏ ,டி ,ஈ மற்றும் கே போன்ற விட்டமின்கள் கிடைக்கின்றன. ஆனால் அளவுக்கு  மீறிய கொழுப்பு ஆபத்தானது. எனவே துரித உணவுகளை தவிர்த்து விடுங்கள். அதே சமயம் ரத்தசோகை மற்றும் சோர்வு ஏற்படாமல் தடுக்கிறது. பால் தயிர் மோர், மீன், கீரை வகைகள் மற்றும் கேழ்வரகில் சோர்வை தடுக்கும்  அனைத்து சத்துகளும் உள்ளன.முளைகட்டிய பயிர், பால், முட்டை, நார்ச்சத்துள்ள உணவுகள், கோதுமை, கேழ்வரகு, கம்பு, சோளம், பாசிப்பயிறு, கடலை, சோயா, பழங்கள், அப்பிள், ஒரேஞ்ச், திராட்சை  மற்றும் பச்சை காய்கறிகளை சாப்பிட கொடுக்கலாம்.

பல குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் அவசரத்தில் காலை சிற்றுண்டியை தவிர்த்து விடுகிறார்கள். இது தவறு. பொதுவாக காலை சிற்றுண்டி  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அவசியம். எனவே இட்லியை காலை சாப்பாடாக சாப்பிடுவதாக இருந்தால் சாம்பார்  கருவேப்பிலை அல்லது தக்காளி சட்னியுடன் சேர்த்து சாப்பிடலாம்.

மதிய உணவில் அனைத்து ஊட்டச்சத்துகளும் இருக்க வேண்டும். எனவே மரக்கறிகள் அவித்து சேர்த்த சோறுஅல்லது தேங்காய் சாதத்தில் பாதாம் துருவி  சேர்க்கலாம். வேர்க்கடலை அல்லது வேகவைத்த கொண்டைக்கடலை சேர்த்து கொடுக்கலாம். தவிர வேகவைத்த முட்டை கீரை  வகைகள் காய்கறிகள் போன்றவற்றை மாறி மாறி கொடுப்பதால் தேவையான ஊட்டச்சத்து குழந்தைகளுக்கு கிடைக்கும்.