தொறொன்ரோ உலகத் திரைப்பட விழா-2016

122

வ்வாண்டுக்கான தொறொன்ரோ திரைப்பட விழா கடந்த 8ம் திகதியிலிருந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கிட்டதட்ட 80 நாடுகளிலிருந்து வந்துள்ள 200க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் இந்த திரைப்படவிழாவில் இடம்பெறுகின்றன. அதிகளவிலான திரைப்படங்கள் (76) அமெரிக்காவிலிருந்தும் அதற்கடுத்ததாக அதிகளவான படங்கள் (63) ஃபிரான்சிலிருந்தும் வந்துள்ளன. இந்தத் திரைப்பட விழாவில் கனடாவில் தயாரிக்கப்பட்ட 38 கனடியப் படங்களும், இந்தியாவிலிருந்து வந்த 8 திரைப்படங்களும் இடம்பெறுகின்றன. 40 நிமிடங்கள் நீளமான திரைப்படத்திலிருந்து, 227 நிமிடங்கள் வரை நீளமான திரைப்படங்கள் என்று பல அளவுகளிலானதும் பலமொழிகளிலானதுமான திரைப்படங்கள்                                                                                     இங்கு திரையிடப்படுகின்றன.

ஐந்து ஹிந்திப் படங்களும், மலையாளம், மராத்தி, பெங்காளி ஆகிய மொழிகளில் ஒவ்வொன்றுமாக எட்டுப்படங்களுடன், இன்னொரு 7 நிமிட குறுந்திரைப்படமும் இந்தியாவிலிருந்து வந்திருந்தன. தீபா மேத்தாவின் Antony of violance, கொங்கோனா சென்சர்மாவின்  Death in the kunj, கொரான் பஸ்கல்ஜெவிக்கின்  Land of the god , றிச்சி மேத்தாவின் Indian in a day யுடன், குஷ்பூ ரங்கா இயக்கிய 7 நிமிடத் திரைப்படமான  Right to prayயுடன் அவர் வினய் சுக்லாவுடன் இணைந்து இயக்கிய an insignificant man என்பன ஹிந்தி மொழிப் படங்களாகும்.  The Bait என்ற பெங்காளி திரைப்படத்தை புத்தாதீப் தாஸ்குப்தாவும், மராத்திய திரைப்படமான  The cinema of travelers  ஐ ஷேர்லி ஏபிரஹாமும், once again என்ற மலையாளப்படத்தை அடூர் கோபால கிரிஷ்ணனும்  இயக்கியிருக்கிறார்கள். இவற்றில், அடூரின் once again என்பது அவரது முத்திரையைப் பதித்துள்ள,எட்டுவடுடங்களுக்குப் பிறகு வந்துள்ள ஒரு தவறவிடக்கூடாத படம் எனவும், றிச்சி மேத்தாவின் India in a day, அடுத்த சந்ததியினைச் சேர்ந்த திரைப்பட ரசிகர்களுக்கான படம் என்ற அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட படம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவின் மிக உயர்ந்த தரத்திலான திரைப்படங்களைத் தந்துள்ள புகழ் பெற்ற இயக்குனர்களின் இந்தப் படங்கள் இரண்டாவது அல்லது மூன்றாவது தடவையாக 16-18ம் திகதிவரையான காலப்பகுதிகளில் காட்சிப்படுத்தப்படுகின்றன மேலதிக விபரங்களை TIFF  இன் இணையத்தளத்தில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும்.