ஜி.வியின் வெறி!

136

கடவுள் இருக்கான் குமாரு படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்துவருகிறார். ஆனந்தி, நிக்கி கல்ராணி நாயகிகள். படத்தின் டீசர் அண்மையில் வெளியிடப்பட்டது. இதன்போது ஜி.வி அடிவாங்கிய ஒருசம்பவத்தை தயாரிப்பாளர் டி.சிவா கூறினார். ஜி.வி.நடிக்கும் பெரிய அக்சன் படம் இது. சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டபோது ஜி.வி நன்றாக அடிவாங்கியிருக்கிறார். இரத்தம் சொட்டுமளவிற்கும் காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அவர் சளைக்காமல் கட்டுபோட்டுக்கொண்டு நடித்துள்ளார். நடிப்பின் மேல் அவருக்குள்ள ஆர்வத்தை பாராட்டிய சிவா, மீண்டும் அவருடன் ஒரு படத்தில் இணைவேன் என்றும் கூறினார்.

நான் ஐட்டமா?
காஜலின் கைவசம் இரண்டு படங்கள் உள்ளன. தமிழில் அஜித் ஜோடி. தெலுங்கில் சிரஞ்சீவி ஜோடி. முன்னணி நடிகையாக உள்ள அவர் தெலுங்கில் “ஜனதா கேரேஜ்“ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். இதில் அதிக கவர்ச்சியாக ஆடியுள்ளார். இது பலத்த விமர்சனத்தை கிளப்பியுள்ளது. பலர் காஜலை கடுமையாக கிண்டலும் அடித்து, “ஐட்டம் கேர்ள்“ என்றும் அழைக்க ஆரம்பித்துள்ளனர். நிலைமை விபரீதமாவதை உணர்ந்த காஜல் அது பற்றி விளக்கமளித்துள்ளார். படக்குழு நட்புக்காக ஒரு பாடலுக்காக ஆடும்படி கேட்டதால் ஆடினேன். அதை ஐட்டம் சோங் என அழைக்க கூடாது, ஸ்பெஷல் சோங் என்றுதான் அழைக்க வேண்டும். இனி நட்புக்காக யாரும் கேட்டாலும் ஒரு பாடலுக்கு ஆட மாட்டேன் என்றுள்ளார்.

மச்சாளால் மாட்டிய தனுஷ்!
ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்த செய்தியை ருவிற்றரில் உறுதி செய்துள்ளார். இந்த சமயத்தில் இந்திய விலங்குகள் நல வாரியத்தின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். சௌதர்யாவின் அக்காள் கணவனான நடிகர் தனுஷ் இதற்கு ருவிற்றரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இரண்டு விவகாரமும் சமநேரத்தில் நிகழ்ந்ததில், பல ருவிற்றர்வாசிகள் குழம்பிவிட்டார்கள். விவாகரத்திற்குத்தான் தனுஷ் வாழ்த்தினார் என சிலர் கொளுத்திப்போட, பரபரப்பு பற்றிக்கொண்டது. பிறகு, நான் வாழ்த்தியது அதற்குத்தான் என தனுஷே ஆஜராகி விளக்கம் கொடுத்த பின்தான் ருவிற்றர்வாசிகள் அடங்கியுள்ளனர்.

இவரா அனுஷ்காவின் காதலன்!
சமந்தாவின் காதல் விவகாரம் முடிந்து இப்பொழுது அனுஷ்காவை பஞ்சாயத்திற்கு இழுத்து வந்துள்ளனர். அனுஷ்காவிற்கும் காதல் தீ பற்றி விட்டதென்பதுதான் சினிமா வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. தமிழ், தெலுங்கில் அதிக சம்பளம் பெறும் நடிகைகளில் ஒருவரான அனுஷ்கா விரைவில் திருமணம் செய்யப்போகிறார் என்கிறார்கள். தற்போது நடித்துவரும் மெஹா பட்ஜெட் படங்களான பாகுபல 2, பஹ்மதி இரண்டையும் முடித்துவிட்டு, இல்லறத்தில் குதிப்பார் என பேசப்படுகிறது. காதலன் யார் என்பதுதான் சஸ்பென்சாக இருக்கிறது. மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் குடும்பத்தை சேர்ந்த இளம் தயாரிப்பாளர் என்பது ஒரு தகவல். அவர் ஏற்கனவே திருமணமானவர் என்பது உபரி தகவல். இந்த தகவலை அனுஷ்கா தரப்பு மறுக்கவில்லை என்பதையும் கவனிக்க
வேண்டும்.