மனிதம்

165

மனிதம் தேடுவது
மகோன்னத உண்மையின்
இருப்பு

மானுடம் மனிதத்தின்
மகோன்னதத்திலும்
மகோன்னதம்

மனிதம்
பால்பகரா நிலை அது
அர்த்த நாதீஸ்வரமும் இல்லை
அதற்கு மேலானது

இரண்டென்ற நிலை இன்றி
இரண்டறக் கலந்தது
ஒன்றாகி நிற்கும்

அரும் பெரும் பொருள் அது
அது எய்தப்படும் என்று
ஏங்கி நிற்பவர் சிலர்

அது எய்தப்பட முடிந்தவர் ஒரு
மாயை என மருளும் சிலர்
இடர் பல இருப்பினும்
மனிதம் என்ற அந்த ஒன்று
காத்துக் கிடக்கின்றது.
கைகூடும் என்ற நம்பிக்கையில்
காத்திருப்புகள் அர்த்தமாகின்றன.

ஆண் பெண் திருநங்கையர்
என்ற பேதம் நீங்கி
அங்கலாய்கும் அந்தராத்மாக்களின்
ஒரே வேதம் ஒரே ஜெபம்
ஒன்றே மனிதம் ஒன்றே மதம்.
கீர்த்தனா