ஆதியின் நம்பிக்கை

155

நாயகிகள் பஞ்சம்!
தமிழ் சினிமாவில் மீண்டும் ஹீரோயின் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. முன்னணி நடிகர்கள், முன்னணி நடிகைகளைத்தான் ஜோடியாக்குவார்கள். நாயகி விடயத்தில் நாங்கள் தலையிடுவதில்லை என நாயகர்கள் சொன்னாலும் அது உண்மையில்லை. அஜித் ஜோடியாக காஜல் அகர்வால் நடிப்பது பெரிய விசயமல்ல. இருவரும் முன்னணியில் இருப்பவர்கள். ஆனால் பைரவா படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பது ஆச்சரியமானது. கீர்த்தி இப்பொழுதுதான் வளர்ந்து வருகிறார். சமந்தா திருமணத்திற்காக காத்திருக்கிறார். அனுஷ்கா ஏறக்குறைய அக்காவாகி விட்டார். தமன்னா, நயன்தாரா நாயகர்களை பார்க்காமல் கதைகளை மட்டும்தான் பார்க்கிறார்கள். இவர்களை விட்டால் முதல் வரிசையில் வேறு நாயகிகள் இல்லை. சூர்யாவின் அடுத்த படம், விக்ரமின் சாமி-2, தனுசின் வடசென்னை ஆகியவற்றின் நாயகி விபரம் அறிவிக்காமலேயே உள்ளது. நாயகி பஞ்சம்தான் காரணம். இப்போதைய முன்னணி நாயகிகள் நடிக்க வந்து பத்து வருடம் ஆகிவிட்டது. அடுத்த வருடத்தில் இனி புதுப்பட்டியல் உருவாகிவிடும் என்கிறார்கள்.

ஸ்ருதியின் காதல்!
ஸ்ருதி ஹாசன் காதலில் விழுந்துவிட்டார் என்று பரவலாக பேசப்படுகிறது. ஹிந்தி நடிகர் ரன்வீர் கபூர்தான் காதலர் என்கிறார்கள். விளம்பர படமொன்றில் இருவரும் நடித்தபோது நெருக்கம் ஏற்பட்டு காதலாகியுள்ளதென்கிறார்கள். அந்த படத்தில் இருவரும் நெருக்கமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ரன்வீர் கபூர் ஏற்கனவே திபிகா படுகோன், கத்ரினாவை காதலித்தார். கத்ரினாவும் ரன்வீரும் திருமணம் செய்யாமலேயே ஒருவீட்டில் வாழ்ந்தனர். இப்பொழுது ஸ்ருதியுடனான காதல் திருமணத்தில் முடியுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆதியின் நம்பிக்கை
அதர்வா- நயன்தாரா நடிக்கும் படம் “இமைக்கா நொடிகள்“. அதர்வாவிற்கு நயன்தாரா ஜோடியா என இணையவாசிகள் பற்றவைக்க முயன்றாலும், நயன்தாரா அலட்டிக்கொள்ளாமல் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஹிப் ஹாப் ஆதி இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார். அண்மைக்காலமாக ஆதியின் பாடல்கள் பேசப்பட்டு வருகின்றன. ஆனாலும் படமாக இன்னும் ஒன்றும் பேசப்படவில்லை. அந்தக்குறையை இந்தப்படம் போக்கும் என ஆதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.