நீரிழிவு நோயிலிருந்து பாதுகாப்பது எப்படி? – 2

271

வெளியிலிருந்து இரத்தத்தினுள் குளுக்கோசானது பொதுவாக உணவுக் கால்வாயினூடாக உள்ளெடுக்கப்படுகின்றது. இதனை விட தீவிர கடுமையான நோயாளிகள் வாயினாலோ அல்லது மற்றயை குழாய் மூலமான உணவையோ எடுக்க முடியாதுவிடின் ஊசிமூலம் இரத்தத்தினுள் நேரடியாக குளுக்கோஸ் ஏற்றப்படுகின்றது. இது மிகவும் அரிதான செயல். எனவே எமது உடலில் குருதியினுள் வெளியில் இருந்து உணவின் மூலமாக உணவுக்கால்வாயில் சமிபாடடையச் செய்யப்பட்டு அகத்துறிஞ்சப்படுவதன் ஊடாக இரத்தத்தினுள் குளுக்கோசு  விடப்படுகின்றது.

ஒருவரின் குருதியில் குளுக்கோசு விடப்படுவது ஒருவர் உணவை உட்கொண்ட சில நிமிடங்களிலிருந்து ஒன்று அல்லது இரண்டு மணிநேரம் மட்டுமே நடைபெறுகின்றது. ஒருவர் உணவை எடுக்காது சில மணி நேரம் விடுகின்ற போது குருதியிலுள்ள குளுக்கோசின் அளவு உடலிலுள்ள கலங்களினால் குருதியினுள் விடப்படும். குளுக்கோசின் அமைப்பிலும் அதனைப்  பாவிக்கின்ற தன்மையிலும் தங்கியுள்ளது. எனவே ஒருவர் இரவுநேரம் நித்திரை செய்யும் போது உணவை எடுக்காது இருக்கையில் இச் செயற்பாடே உடலில் நடைபெறுகின்றது. இதற்கு உடலில் இரண்டு செயற்பாடுகளின் ஊடாகவே குளுக்கோசானது இரத்த குழாய்களில் விடப்படுகின்றன.

ஒரு செயற்பாடானது கிளைக்கோஜன் பகுப்பு என்றும், மற்றையது குளுக்கோஸ் புத்துருவாக்கல் ஊடாகவும் நடைபெறுகின்றது. இச் செயற்பாடுகளில் ஈரல், சிறுநீரகம், என்புத்தசைகள் என்பன ஈடுபடுகின்றன. இவை பற்றி பிறிதொரு கட்டுரையில் ஆராயலாம். இவ் கட்டுரையிலும் தொடர்ந்து வரும் சில கட்டுரைகளிலும் உடலுக்கு வெளியில் இருந்து இரத்தத்தினுள் விடப்படுகின்ற குளுக்கோசின் அளவு எவ்வாறு பாதிக்கப்படுகின்றது என்பதை ஆராய்வோம்.

ஏற்கனவே குறிப்பிடப்பட்ட மாதிரி உணவு உள்ளெடுக்காத போது இரத்தத்தில் குருதியின் கட்டுப்பாடானது ஒரு நிலையில் பேணப்படுகின்றது. அனேகமான இரவு வேளையில் எங்கள் குருதியில் குளுக்கோஸ் அவ்வாறான நிலைகளில் பேணப்படுகின்றது. இதன் போது குருதியில் குளுக்கோசின் அளவானது ஓரளவு ஸ்திரமான நிலையில் கட்டுப்படுகின்றது. உணவின் பின்னரான குருதியில் குளுக்கோசின் அளவானது பல காரணிகளில் தங்கியுள்ளது. அவற்றில் முக்கியமானது உணவு உள்ளெடுக்கும் நேரம், உணவின் அளவு, உணவு அமைப்பு அதிலுள்ள காபோவைதரேற்று என்னும் உணவுச்சக்தியின் உள்ளடக்கம் என்பவையாகும். பின்னர் இவ் உள்ளெடுக்கப்பட்ட உணவிற்கு உடலினால் வெளிக்காட்டப்படும் குளுக்கோஸ் அனுசேபம் தொடர்பான வெளிக்காட்டலில் பிரதானமாகக் கருதப்படுவது, இன்சுலினும் குளுக்கோன் எனப்படும் சதையினால் சுரக்கப்படும் ஓமோன்கள், ஈரல், என்பு சதைகள், கலங்கள் என்பவற்றில் ஏற்படுத்தப்படும் மாற்றங்களாகும்.

இவ் மாற்றங்களில் உணவினால் ஏற்படும் மாற்றம் பற்றி முதலில் ஆராய்தல் மிகவும் பொருத்தமாக இருக்கும். இவ்வாறு நாம் உள்ளெடுக்கும் உணவு, உணவு உள்ளெடுத்த பின்  உடலில் குருதியிலுள்ள குளுக்கோசின் அளவு எவ்வாறான மாற்றங்களை ஏற்படுத்துகின்றது என்பதை அறிவதன் ழூலமும் நாம் எவ்வாறான உணவினை எந்த அளவில் உள்ளெடுப்பது என்பதை அறிந்து வைத்திருப்பதன் ழூலம் உடலில் சக்கரையின் மட்டத்தைப் பேணி நீரிழிவு நோயிலிருந்து பாதுகாப்பைப் பெற்று ஆரோக்கிய வாழ்வினை வாழலாம்.