உங்கள் குழந்தையும் விரல் சூப்புகின்றதா?

233

ரு தாய் தன் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும் போது அது இருவருக்குள்ளும் ஒரு நெருக்கத்தை உருவாக்குகிறது. இந்த நெருக்கமில்லாத குழந்தைகளே அதிகமாக விரல் சூப்பும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்கின்றன.

  1. பொதுவாக விரல் சூப்பும் பழக்கம் இப்போது எல்லாக் குழந்தைகளிடமும் இருக்கிறது. மூன்று வயது வரை இந்தப் பழக்கத்தைத் தவறாக நினைக்க வேண்டியதில்லை. அந்த வயதிற்குப் பின்பும் இப்பழக்கம் நீடித்தால் ஒரு குழந்தைகள் நல சிறப்பு மருத்துவரிடம் காண்பித்து சிறப்பு சிகிச்சை அளிப்பது நல்லது.
  2. குழந்தை விரல் சூப்புவதற்கு மிக முக்கியமான காரணமே தனக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்கவில்லை என்று உணர்வதுதான் என்கிறார்கள்.
  3. பெற்றோரிடம் தேவையான அன்பு, பராமரிப்பு, பாதுகாப்பு ஆகியவை கிடைக்காத சூழலில்தன் குழந்தைகளிடம் விரல் சூப்பும் பழக்கம் நீடிக்கிறது. பெற்றோர்களிடம் நிரந்தர சண்டை இருந்தால் அவர்களின் குழந்தைகளிடம் விரல் சூப்பும் பழக்கம் உறுதியாக இருக்கும் என்கிறார்கள்.
  4. குழந்தைகளுக்கு ஏதாவது ஒரு வழியில் மன அழுத்தம் ஏற்படும் போது அவை விரல் சூப்புவதைத்தான் விரும்புகிறது. சில குழந்தைகள் ஓய்வுக்காகவும், தூக்கம் நன்றாக வருவதற்காகவும், சில சமயம் பசிக்காகவும் கூட விரல்களைச் சூப்புகின்றன.

விரல் சூப்பும் பழக்கத்திலிருந்து விடுவிப்பது எப்படி?

  1. விரல்களைச் சூப்பும் குழந்தைகளுக்கு அந்த விரல்களுக்கு ஏதாவது வேலை இருக்கும்படி ஓவியம் வரைதல், புத்தகங்களைப் படிக்க வைத்தல் போன்ற மாற்று வழிகளில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும். இப்படி செய்வதால் குழந்தைகள் சிறிது சிறிதாக இப்பழக்கத்தை விட்டுவிடுவார்கள்.
  2. சில குழந்தைகள் இரவில் தூக்கத்தின் போது கை சூப்பும். இந்நிலையில் பெற்றோர் விரல்களை எடுத்து விட வேண்டும். இதுபோல் தூங்கும் போது குழந்தைகளின் கையில் ஏதாவது ஒரு விளையாட்டுப் பொம்மையைக் கொடுத்தால், அந்தப் பொம்மையைப் பிடித்துக் கொண்டிருக்கிறோம் என்கிற கவனத்தில் விரல் சூப்பாமல் இருக்கும்.
  3. விரல் சூப்பும் குழந்தைகளின் விரல்களில் வேப்பெண்ணெய் தடவுதல், பெண்டேஜ் போடுதல்போன்ற வன்முறையான செயல்களைத் தயவுசெய்து தவிர்த்துவிடுங்கள். இது உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் இடைவெளியை அதிகரித்துவிடும்.

விரல் சூப்பும் பழக்கத்தை மாற்றுவதற்காக அந்த விரல்களில் சூடு போடுவது, குழந்தைகளை அடிப்பது போன்ற தவறான செயல்களில் ஈடுபடுவதை விட குழந்தைகள் மருத்துவரிடம் சிகிச்சை செய்வதே சிறந்தது.

வழுக்கையில் முடிவளர வீட்டிலேயே வைத்தியம்

ழுக்கைத் தலை பிரச்சினையில் பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் ஆண்கள் பெண்களைப் போல் தங்கள் முடிக்கு போதிய பராமரிப்புக்களைக் கொடுப்பதில்லை. உண்மையில் ஆண்களை விட பெண்கள் தான் அதிக முடி உதிர்தல் பிரச்சினைக்கு ஆளாகின்றனர்.ஆனால் பெண்கள் முடி உதிர்தல் பிரச்சினை ஆரம்பித்த உடனேயே முடியை சரியாக பராமரிக்க ஆரம்பித்து விடுவதால் வழுக்கை தலை ஏற்படாமல் தப்பிக்கின்றனர்.

முடி உதிர்தலில் இருந்து தப்பிக்க சில வழிகள்.

எண்ணெய் மசாஜ்:   அனைத்து ஆண்களும் முடி உதிர்தலைத் தடுக்க முதலில்செய்ய வேண்டியது  வாரத்திற்கு இரண்டு முறை நீங்கள் பாவிக்கும் எண்ணெயை கொண்டு (தேங்காயெண்ணெய் ,நல்லெண்ணெய்)  மசாஜ் செய்து ஊற வைத்து குளிப்பது தான்.  இதனால் முடிக்கு தேவையான சத்துக்கள் கிடைத்து முடி நன்கு ஆரோக்கியமானதாக இருக்கும்.

தேங்காய் பால்:  தேங்காய் பால்  முடியின் வளர்ச்சியை அதிகரிப்பதோடு முடியில் ஏற்படும் வறட்சியை தடுக்கும். எனவே தேங்காய்பாலை தலைக்கு தடவி ஊற வைத்து குளிக்க வேண்டும். குறிப்பாக இந்த முறையால் முடி நன்கு மென்மையாகும்.

கற்றாழை: முடி வலிமையோடு வளர வேண்டுமெனில் கற்றாழை  ஜெல்லைக் கொண்டு தலையில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். அதிலும் இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் முடி உதிர் தல் குறைந்து முடிவேரில் ஏற்படும் பிரச்சனையை தடுக்கலாம்.

வேப்பிலை: வேப்பிலை அரைத்து தலையில் தடவி ஊற வைத்து குளித்தால் தலையில் உள்ள அல்கலைன் சீராக இருப்பதோடு பொடுகு மறைந்து முடி உதிர்தலும் நிறுத்தப்படும். மேலும் இந்த முறையை இன்னும் சிறப்பானதாக மாற்றுவதற்கு  வேப்பிலை பேஸ்டுடன்  தேன் மற்றும் ஒலிவ்  ஒயிலை கலந்து தேய்க்கலாம்.

முட்டை:  முடி பராமரிப்பில் முடிக்கு புரோட்டீன் சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம். முடி நன்கு வலுவோடும்  அடர்த்தியாகவும் வளர வேண்டு மெனில் இந்த புரோட்டீன் சிகிச்சையை வாரத்திற்கு 3 -4 முறை மேற் கொள்ள வேண்டும். அதற்கு செய்ய வேண்டியதெல்லாம் முட்டை உடைத்து பாத்திரத்தில் ஊற்றி நன்கு அடித்து ஈரப்பத முள்ள முடியில் தடவி  15 நிமிடம் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் முடியை அலச வேண்டும்.

வெந்தயம்:  2-3 டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை நீரில் 8-10 மணி நேரம் ஊற வைத்து அரைத்து தலையில் தடவி ஊற வைத்து குளித்தால் முடி உதிர்வது குறைவது மட்டுமின்றி முடியின் வளர்ச்சியும் அதிகரித்து பொடுகுத் தொல்லையும் நீங்கும்.