திருமணத்தை தள்ளிவைக்கும் நடிகைகள்

145

சினிமா பணம் கொழிக்கும் தொழில். அதனால்தான் பல நடிகைகள் திருமணத்தையே தள்ளிவைத்து நடித்துக் கொண்டிருக்கிறார்கள். திருமணம் செய்யும்படி குடும்பம், காதலர்கள் வற்புறுத்தியும் நடிகைகள் திருமணத்தை தள்ளிவைப்பதன் காரணம் பணம். சினிமாவில் கிடைக்கும் புகழ் இன்னொரு காரணம். எங்கு சென்றாலும் புகழ் வெளிச்சம் விழும். அது இல்லாமல் இருப்பது மிக சிரமம். இதனால்தான் வயது ஏறினாலும் திருமணத்தை தள்ளிவைத்துக்கொண்டிருக்கிறார்கள் நடிகைகள். அனுஷ்காவிற்கு 34 வயதாகிறது. த்ரிஷாவிற்கு 33 வயதாகிறது. நயன்தாராவிற்கு 31 வயதாகிறது. காஜலுக்கும் இதே வயதுதான். ஆனால் இவர்களிற்கு உடனடியாக திருணம் செய்யும் உத்தேசமில்லை. காஜல் இரண்டு வருடத்தின் பின்னர்தான் திருமணம் என அறிவித்து விட்டமை குறிப்பிடத்தக்கது.

இதையெல்லாம் பார்ப்பாராம்!
ஆஷ்னா சவேரியென்றால் உடனடியாக நினைவிற்கு வராது. சந்தானத்தின் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் ஹீரோயின். பணம்தான் குறியென எல்லா படத்தையும் இழுத்துப்போடும் நாயகிகள் மத்தியில் நான் வித்தியாசமானவள் என்கிறார் இவர். ஒரு படத்தை தேர்வு செய்வதில் ஏராளம் விதிமுறைகளை பார்க்கிறார். கதை பிடிக்க வேண்டும் என்பது முக்கிய நிபந்தனை. நிறையப்படம் நடிப்பது முக்கியமல்ல, பெயர் சொல்லும் படம் வேண்டும் என தத்துவம் வேறு பேசுகிறார். அதுதவிர, தயாரிப்பாளர், இயக்குனர் யாரென்றும் பார்ப்பேன் என்றுள்ளார். இவ்வளவும் சரியாக அமைந்தால்தான் படத்தை தேர்வு செய்வாராம்.

தாராளமயமாகும் அஞ்சலி!
நல்ல நடிகையென பெயர் வாங்கிக்கொண்டிருந்த சமயத்தில் சித்தியுடன் சச்சரவுப்பட்டு வீட்டைவிட்டு ஓடி தலைமறைவானார் அஞ்சலி. இதன்மூலம் சினிமா வாய்ப்பையும் சேதமாக்கிக் கொண்டார். ஆந்திரா பக்கம் போய் தெலுங்குப்படங்களில் நடித்தார். பின்னர் தமிழுக்கு வந்து சூர்யா படத்தில் கவர்சி நடனம் ஆடினார். அதன்பின் நடித்த சகலகலாவல்லி, இறைவி படங்களில் குடும்பபாங்காக நடித்தார். அதன்பிறகு ஒப்பந்தமான படங்களிலும் குடும்பகுத்துவிளக்குத்தான். ஆனால் இந்தப்படங்கள் இன்னும் வெளியாகவில்லை. இதற்குள் அஞ்சலி வேறு முடிவெடுத்துள்ளார். இனி கலகலப்பான கவர்ச்சி பெண்ணாக நடிக்கவுள்ளாராம்.

சமந்தா மாறினாரா?
சமந்தா, நாகசைதன்யா காதல் ஊரறிந்தது. அடுத்த வருடம் இருவரும் திருமணம் செய்யவுள்ளனர். புதிய படங்களில் ஒப்பந்தமாகவதையும் சமந்தா தவிர்த்து வருகிறார். கிறிஸ்தவரான சமந்தா, இந்துவான நாகசைதன்யாவை திருமணம் செய்வதும் இப்போது பரபரப்பை தோற்றுவித்துள்ளது. யார் மதம் மாறுவார்கள்? மதம் மாறாமலேயே திருமணம் செய்வார்களா? என்ற சர்ச்சைகள் நீடித்துவந்த நிலையில், சமந்தா இந்துவாக மதம் மாறிவிட்டார் என்ற தகவல் இணையத்தில் பரவியது. அது பற்றிய புகைப்படங்களும் பரவின. இந்த தகவலை நாகசைதன்யா மறுத்துள்ளார். இருவரும் அவரவர் மதத்தை பின்பற்றியபடியே வாழவுள்ளதாக கூறியுள்ளார்.