மலச்சிக்கல்

277
Person's feet behind a closed door of a toilet cubicle

து பெரும்பாலும் ஆண் பெண் குழந்தைகள் வயோதிபர்கள் என்று வேறுபாடு இல்லாமல் எல்லோர் மத்தியிலும் ஏற்படும் பிரச்சினையாகும். இதன் விளைவாக உணவு உட்கொள்ள மனமின்மை வயிற்று குத்து தண்ணீர் தாகம் வயிறு குமட்டுதல் போன்ற அறிகுறிகள் தென்படலாம்.

ஒரு நாளுக்கு இந்த நோய் வந்தாலே அந்த நாள் முழுதும் சினம் கோபம் வேறு வேலைகளில் நாட்மின்மை என்பன காணப்படும். குழந்தைகள் அழுதபடியே இருப்பார்கள். மிக கஸ்ரப்பட்டு மலம் கழித்தால் குதை வழியில் எரிவு ஏற்பட்டு புண் வந்து தொடர் வேதனையை கொடுக்க கூடும். எனவே பெரும்பாலும் இந்த நோய் ஏற்படாமல் எம்மை நாமே பாதுகாத்துகொள்ள வேண்டும்.

ஏன் மலச்சிக்கள் ஏற்படுகின்றது?
1  நார்த் தன்மையான உணவுகளை சேர்த்து கொள்ளாமையினால்.
2 தேவையான அளவு நீர் அருந்தாமையினால்.
3 உடற் பயிற்சியின்மை
4 உணவு பழக்கவழக்கத்தில் ஒழுங்கின்மை. (குறிப்பிட்ட ஒரு நேரத்தை உணவு உண்பதற்காக கடைப்பிடிக்காமை.)
5 உயிர்ச்சத்து “பீ” நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். அதை உணவில் கவனிக்காவிடத்து.
6 மலம் கழிப்பதை நாளாந்த பழக்கமாக கொள்ளாமல் அடக்குதல் மற்றும் தாமதித்து செல்லுதல்.
7 நீண்ட நேரமாக உடலை ஒரே நிலையில் வைத்திருத்தல்.
8 பெருங் குடலின் தசைகள் பலவீனமாகுதல். துசைகளின் சக்தி குறைவடைதல் எனலாம்.
9 போதுமான நீர் அருந்தாமை.
10 குளிர்மையான உணவுகள்(பழங்கள் பச்சை காய்கறிகள்) உணவில் சேர்க்க தவறுதல்.

இவ்வாறான செயற்பாடுகளினால் மலச்சிக்கல் இலகுவாக ஏற்படக் கூடும். எனவே அதை கவனத்தில் எடுப்பதனூடாக எம்மை நாமே பாதுகாத்து கொள்ள முடியும்.