ரஜினிக்கு பின் சிவகார்த்திகேயனா?

128

பெண்ணாக மாறிய நடிகர்!

பொலிவூட்டின் பிரபல நடிகர், மொடல் கவுரவ் அரோரா. இவர் இப்பொழுது பெண்ணாக மாறிவிட்டார். கவுரி அரோரா என பெயரையும் மாற்றிவிட்டார். தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டபோது தான் பெண்ணென்பதை உணர்ந்ததாக கூறியுள்ளார். பெண்ணாக மாற தேவையான அறுவை சிகிச்சைக்காக உடல்ரீதியாக தயாராகிவிட்டதாகவும், தேவையான மருந்துகள் சாப்பிட்டு வருவதாகவும் கூறியுள்ளார். பெண்ணாக மாற பலமுறை முயற்சித்ததாகவும், பெற்றோர் மற்றும் சமூகத்திற்கு பயந்து அந்த முடிவை கைவிட்டதாகவும் கூறியுள்ளார். இந்த மனஉளைச்சலில் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறியுள்ளார்.

வரலாற்றில் விஜய் சேதுபதி!
விஜய் சேதுபதி நடிப்பில் ‘றெக்க’ படம் வெளியானது. அந்த படத்தோடு விஜய் சேதுபதி நடிப்பில் இந்த வருடம் 6 படங்கள் வெளியாகியுள்ளது. அதில், முக்கால்வாசி படங்கள் நல்ல வசூலை பெற்றுள்ளன. இந்நிலையில், எந்த நடிகருக்கும் கிடைக்காத பெருமை ஒன்று அவருடைய படங்களுக்கு கிடைத்துள்ளது. அது என்னவென்றால், விஜய் சேதுபதி நடித்த ‘தர்மதுரை’ படம் கடந்த ஓகஸ்ட் 19-ந் தேதிகதி ரிலீஸ் ஆனது. அதைத் தொடர்ந்து அவர் நடித்த ‘ஆண்டவன் கட்டளை’ படம் செப்டம்பர் 23-ந் திகதி வெளியானது. கடந்த 7-ந் திகதி ‘றெக்க’ படமும் வெளியானது. இரண்டு மாதங்களுக்குள் அவர் நடிப்பில் மூன்று படங்கள் வெளியாகியுள்ள நிலையில், சென்னை சத்யம் திரையரங்கில் ‘றெக்க’ படடன.  சத்யம் திரையரங்க வரலாற்றிலேயே ஒரு நடிகர் நடித்த மூன்று படங்கள் திரையிடப்படுவது இதுதான் முதல்முறை என்று கூறப்படுகிறது.

ரஜினிக்கு பின் சிவகார்த்திகேயனா?
தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகிவிட்டார் சிவகார்த்திகேயன். அவரது படமென்றால் கண்ணை மூடிக்கொண்டு காசை கொட்ட தயாராக உள்ளனர் அனைவரும். இதனால்தான் ரெமோ படத்தை பெரியளவில் தயாரித்தார்கள். இந்தபடத்தை ஜப்பானில் வெளியிடும் உரிமையை மெட்ராஸ் மூவிஸ் நிறுவனம் டோக்கியோ பெற்றுள்ளது. ரஜினி தவிர்ந்த மற்றைய நடிகர்களின் படங்கள் யொகோயமா (Yokoyama) டோக்கியோ (Tokyo)  பிரதேசங்களில் மட்டும்தான் வெளியாகும். ரஜினி படம் மட்டும்தான் நகோயா பிரதேசத்தையும் சேர்த்து மூன்றாவது இடத்திலும் வெளியாகும். சிவகார்த்திகேயன் படமும் இந்த இடத்தில் வெளியாகவுள்ளதாம்.

பிஸியான பிரியா!
பிரியா ஆனந்த் நினைத்த மாதிரி திரையுலகம் இல்லை. எவ்வளவு முயன்றும் முன்னணி நடிகையாக முடியவில்லை. பெரிய ஹீரோக்களின் கடைக்கண் பார்வையும் கிட்டவில்லை. இரண்டாம் நிலை ஹீரோக்களுடன்தான் ஜோடி சேர முடிகிறது. மலையாளத்தில் இருந்து வரும் இளம்நாயகிகளின் தாராள கவர்ச்சிதான் தனக்கு வினையாகிறதென முணுமுணுக்கும் பிரியா, இந்திப்பக்கம் முயற்சி செய்ய ஆரம்பித்துள்ளார். இதற்கு உடனடி பலனும் கிடைத்துள்ளது. இதற்காக 90 நாள் கால்சீட் கொடுத்துள்ளாராம்.