அலப்பறை அரவிந்த்சாமி!

134

மேற்றர் புதுக்காதலனுக்கு தெரியும்!
சமந்தாவின் காதல் விவகாரம் பற்றி வாரம் ஒரு செய்தி வெளியாகிக் கொண்டிருக்கிறது. சமந்தாவும், நாகசைதன்யாவும் எப்படி சந்தித்தார்கள், எப்படி காதலை பரிமாறினார்கள் என்று ஆரம்பித்த செய்தி, இப்பொழுது வந்து நிற்பது விபரீதமான ஒரு இடத்தில். ஆம். சமந்தாவின் கடந்தகால காலம் வெளிப்படையாக சொன்னால், சித்தார்த்தை காதலித்த விவகாரமெல்லாம் நாகசைதன்யாவிற்கு தெரியுமா என்பதுதான் அந்த வில்லங்க விவகாரம். தனக்கு நெருங்கியவர்களிற்கு சமந்தா இந்த சந்தேகத்தை தீர்த்து வைத்துள்ளாராம். சித்தார்த்துடனான காதல், முறிவு எல்லாம் அக்குவேறு ஆணிவேறாக நாகசைதன்யாவிற்கு தெரியுமாம். சமந்தாவிற்கு தேறுதல் சொன்னவர்களில் சைதன்யாவும் ஒருவராம். தேறுதல் சொல்லி, நண்பராகி, சில வருடம் நட்பை பேணித்தான் காதலை பரிமாறினோம். என் கடந்த காலம் முழுவதும் நாகசைதன்யாவிற்கு தெரியும் என்றுள்ளார். தேறி வந்த காதலாக இருக்குமோ!

4ஜி ஜி.வி!
ஷங்கரின் உதவியாளர் வெங்கட் பாக்கர் இயக்கும் படம் 4ஜி. ஜி.வி.பிரகாஷ்குமார் ஹீரோவாக நடிக்கிறார். கடந்த வாரம் சென்னையில் படப்பிடிப்பு தொடங்கியது. ரேவதியின் முன்னாள் கணவர் சுரேஷ் மேனன் ஒளிப்பதிவாளர். அனைவரும் ரசிக்கும்விதமான காதல் கதையாக இருக்குமென்கிறார்கள். அடுத்த வருடம் காதலர் தினத்தன்று படம் வெளியாகுமாம். 4ஜி வேகத்தில் தியேட்டரிலிருந்து ஓடாவிட்டால் சரி!

ஸ்ரேயாவின் காதல்!
ஸ்ரேயாவை அவ்வளவு விரைவில் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். தமிழ், தெலுங்கில் முன்னணியிலிருந்தவர். தமிழின் அனேக முன்னணி நாயகர்களுடன் நடித்து விட்டார். இப்போது அவருக்கு 34 வயதாகிறது. இளவயது நடிகைகளின் வரவால் வாய்ப்பிழந்து விட்டார். வீட்டில் உட்கார்ந்திருப்பவருக்கு கல்யாணம் காட்சி செய்து பார்க்கும் முயற்சியில் பெற்றோர் ஈடுபட்டுள்ளனர். பெற்றோரை சிரமப்படுத்தாமல் ஸ்ரேயாவே மாப்பிள்ளை பார்த்துவிட்டார் என்பதுதான் இப்போதைய பரபரப்பு. மாப்பிள்ளை மேற்கிந்தியதீவுகள் அணியின் வெய்ன் பிராவோ. இருவரும் ஒன்றாகத்தான் சுற்றி திரிகிறார்களாம். அண்மையில் மும்பை ஹோட்டலின் முன்பாக இருவரையும் ஒருவர் படம்பிடித்து வெளியிட, காதல் பகிரங்கமாகியுள்ளது. கறுத்த மாப்பிள்ளையை சிவப்பாக்க பெயர் அண்ட் லவ்லியா பாவிப்பார்?

அலப்பறை அரவிந்த்சாமி!
ஒரு காலத்தில் அரவிந்த்சாமி ஓகோ வென இருந்தார். அலைபாயுதே படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த பின்னர் நடிப்பை விட்டு ஒதுங்கிவிட்டார். பின்னர் நீண்ட இடைவெளியின் பின்னர் கடல் படத்தில் நடித்தார். படம் சொல்லிக்கொள்ளும் விதமாக அமையவில்லை. ஆனால் அரவிந்த்சாமிக்கு வாய்ப்புக்கள் வந்தன. தனி ஒருவனில் வில்லனென்றாலும், அவரது ஸ்டைலான நடிப்பு பேசப்பட்டது. இப்போது போகன் படத்திலும் ஜெயம் ரவியுடன் நடிக்கிறார். தனி ஒருவனின் தெலுங்கு ரீமேக் துருவா. இதன் படப்பிடிப்பு நடக்கிறது. ஆனால் படப்பிடிப்பிற்கு சரியான நேரத்தில் செல்வதில்லை, இயக்குனர் சொல்வதை போல நடிக்காமல் தனது விருப்பத்தில் நடிக்கிறார் என நிறைய குற்றச்சாட்டுக்கள் வருகின்றன. இதனால் தெலுங்கில் அவரை ஒப்பந்தம் செல்ல பலர் தயங்குகிறார்களாம். தனி ஒருவனை தப்பாக விளங்கிவிட்டாரோ!