வாழைப்பழம் சாப்பிடுங்கள்

217

பழங்கள் ஈற்றுணாக்களுக்குள் சிறந்தவை எனலாம். ஏன்ன தான் ஐஸ்கிறீம் பாயாசம் கடித்தாலும் பழங்கள் உட்கொள்வதை போல் வருமா? அதவும் நமது ஊருக்கே உரித்தான வாழைப்பழம் போல் எதுவுமே வருவதில்லை. பெரும்பாலான நோய்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்வதும் வாழைப்பழத்தை தான். அப்படி இருக்கையில் உங்கள் பிள்ளைகளுக்கும் வாழைப்பழத்தை தாராளமாக கொடுங்கள். அதற்கு முன்னர் வாழைப்பழத்தின் பயன்கள் பற்றி கொஞ்சம் அறிந்து கொள்ளுங்கள்.

போசாக்கு மட்டம்.
வாழைப்பழங்களில் அதிகளவில் விற்றமின்களும் கனிப்பொருட்களும் கூட இருக்கின்றன. அளவில் சற்றுப்பெரியவாழைப்பழமொன்றில் விற்றமின் ஏ உட்பட தயமின் 15 மில்லிகிராமும் இறை போபிலேவின் 0.82 மில்லிகிராம்,29 மைக்ரோகிராம் போலிக்கமிலம் என்பன உள்ளன. கர்பிணித் தாய்மார்களும் குழந்தைப் பாக்கியத்தை எதிர்பார்த்திருக்கும் பெண்களும் தினமும் 3 வாழைப்பழங்களைச் சாப்பிடுவதால் ஒரு நாளைக்குத் தேவையான போலிக்கமிலம் அவர்களுக்குக் கிடைக்கின்றது. மேலும் கற்பிணிப் பெண்களின் வாந்தியைக் கட்டுப்படுத்தவும் வாழைப்பழம் உதவுகின்றது.

குருதி அழுத்தம்.
வாழைப்பழத்தில் உள்ள பொற்றாசியமும் அளவான உப்பும், குருதி அழுக்கத்தைக் கட்டுப்படுத்துகின்றன. மேலும் உளவியல் பிரச்சினைகளால் அவதியுறுபவர்களும் வாழைப்பழம் உண்பதால் நிவாரணம் பெறுகின்றனர். ஞாபகசக்தி, கிரகிக்கும் ஆற்றல் ஒருவரின் ஞாபகசக்தியை மேம்படுத்தவும், கிரகிக்கும் ஆற்றலை விருத்தி செய்யவும்,வாழைப்பழம் மிகவும் துணைபுரிகின்றது. இங்கிலாந்தில் 200 இற்கும் மேற்பட்ட மாணவர்களிடையே நடத்தப்பட்ட ஆய்விலிருந்து இது புலனாகின்றது.

புகைப்பிடித்தல்
புகைப்பிடித்தலுக்கு அடிமைப்பட்டுள்ளவர்களை அதிலிருந்து மீட்டெடுப்பதற்கும், வாழைப்பழம் துணைபுரிகின்றது. இதில் உள்ள விற்றமின் ஏ, சீ, பீ6, பீ12 போன்றவற்றின் செயற்பாட்டினால் புகைப்பிடிப்பவர்களுக்கு தாம் எதிர்பார்க்கின்ற நிம்மதியும் சந்தோசமும் கிடைக்கின்றனவாம். எனவே நாளடைவில் அவர்கள் புகைப்பிடிப்பதைக் கைவிடுவர். இதை நீண்டகாலத்திற்குத் தொடர்ந்து செயற்படுத்த வேண்டும். அப்போது தான் அதன் முழுமையான அனுகூலத்தைப் பெறக் கூடியதாக இருக்கும். அத்துடன் வாழையிலுள்ள மெக்னீசியம் பொற்றாசியம் என்பவற்றின் செயற்பாட்டினால் உடலிலுள்ள நிக்கொட்டினின் அளவும் குறைந்து விடும்.

மாரடைப்பு.
தினமும் வாழைப்பழம் உட்கொள்வதனால் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு 40வீதத்தால் குறைவடையச் சாத்தியம் இருப்பதாக இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றிலிருந்து தெரியவந்துள்ளது.

மூலவியாதி
மூலவியாதியால் அவதிப்படுபவர்கள் தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அதன் தாக்கத்திலிருந்து ஓரளவுக்கேனும் தம்மை காத்துக் கொள்ளலாம். குருதியில் ஏற்படக்கூடிய பல்வேறுபட்ட நோய்களுக்குமான எதிர்ப்பு சக்தி இதில் அடங்கியுள்ளது. வாழைப்பழத்திலுள்ள 2.6 வீதமான தாதுப்பொருட்களினால் இந்நிலை கட்டுப்படுத்தப்படுகின்றது. சாம்பல் வாழை, பழமாகவும் சமைத்துச் சாப்பிட உகந்தது. இதிலும் மேற்குறிப்பிட்ட நோய்களை எதிர்க்கக் கூடிய சக்தி இருக்கின்றது. எனவே தினமும் உணவு உட்கொண்டபின் வாழைப்பழமொன்று சாப்பிடுவதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். இது உங்கள் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.

உடற்பருமன்
உயர்ந்த மனஅழுத்த வேலைகளில் உள்ளவர்கள் இரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவு சீராக இல்லாத காரணத்தால் உடற்பருமன் ஏற்படுகிறது.  வாழைப்பழத்தை தினமும் உணவில் சேர்த்து வந்தால் இரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவை ஒரு ஸ்திரத்தன்மைக்கு கொண்டு வந்து உடற்பருமன் குறைய பெரிதும் உதவுகிறது.