கிழக்கு : தமிழ்-முஸ்லிம் மோதல்களின் உலைக்களம்

89

கிழக்கில், தமிழ் – முஸ்லிம் மக்களுக்கிடையே  இன நல்லுறவு  பற்றி சிறிதளவில் பேசப்படுகிறதெனினும்  தொடர்ந்தும் கிழக்கு தமிழ்-முஸ்லிம்  உறவுகளில்  மோதல்களின் உலைக்களமாகவே  இருந்து வருகிறது. தமிழ்-முஸ்லிம்  மக்களிடையிலான  முரண்கள், கிழக்கு  மாகாணசபைத்  தேர்தலின் போதுகொதிநிலை பெற்றிருந்து,  தற்போது மீண்டும்  கொதி நிலையைப் பெற்றிருக்கிறது. அண்மைக் காலத்தில் குறிப்பாக நீண்ட கால   இனப்பிரச்னைக்குத் தீர்வை உள்ளடக்கியஅரசியல் யாப்புச் சீர்திருத்தம் ஒன்றுக்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வருகிற  அண்மைக்காலத்தில் – இந்தக் கொதிநிலையை கிழக்கு மீண்டும் அடைந்திருக்கிறது.

 “கிழக்கில் முஸ்லிம் அரசியல் கட்சிகள், வடக்கு-கிழக்கு  இணைப்புக்கு எதிராக, முஸ்லிம் கிராமங்கள் தோறும்  பிரச்சாரம் மேற்கொண்டு  வருகிறார்கள்” என்ற செய்தி இந்தக் கொதிநிலையைத் தொடக்கி வைத்திருக்கிறது. இந்தப் பிரச்சாரப் பணியில் முஸ்லிம்களின் பிரதான அரசியல்சக்தியான முஸ்லிம் காங்கிரஸ் தவிர்ந்து ஏனைய  கட்சிகள் ஈடுபட்டுள்ளன எனத்தெரிவிக்கப்படுகிறது.

முஸ்லிம் கட்சித் தலைவர்கள் பலரும் வடக்கு-கிழக்கு இணைப்புக்கு எதிராகப் பகிரங்கமாகப்பேசிவருகிறார்கள். இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாட் பதியுதீன், ~வடக்கும் கிழக்கும்இணைக்கப்படக்கூடாது. அவ்வாறான நிலை ஏற்பட்டால் பதவிகளைத் துறந்துவிட்டு வீதிகளில் இறங்கிப் போராடுவோம்.எனத் தெரிவித்திருக்கிறார். தேசிய காங்கிரஸ் தலைவர்அதாவுல்லாவும் வடக்கு-கிழக்கு இணைப்பிற்கு எதிராகவே பேசிவருகிறார். முஸ்லிம்களிடமிருந்து  மாற்று அரசியல் சக்தியாக  வெளிக்கிளம்பிய  நல்லாட்சிக்கான மக்கள்முன்னணியினருக்கும் இரா.சம்பந்தனுக்குமிடையிலான சந்திப்பின் போது, “1990 இன் பயங்கர அனுபவங்கள்,  ஆழமான வடுவாக முஸ்லிம் மக்களின் மனதில் பதிந்துள்ளன. எனவே வடக்கு,கிழக்கு இணைப்பு தொடர்பில் முஸ்லிம் மக்களின் உணர்வுகளை  மதிக்க வேண்டும். அந்த அடிப்படையிலேயே அரசியல்  தீர்வு விடயம் அனுகப்பட வேண்டும்.  எல்லோரது இணக்கத்துடன்தான்  இந்த விடயம் குறித்த இறுதி நலைப்பாட்டுக்கு வரவேண்டும்.” எனதெரிவித்திருக்கிறது நல்லாட்சிக்கான மக்கள் முன்னணி.

வடக்கு கிழக்கு இணைப்பு விவகாரத்தில் முஸ்லிம்களின் பிரதான அரசியல் சக்தியான முஸ்லிம் காங்கிரஸ் மௌனம் காத்துவருகிறது. இது, கிழக்கில் முஸ்லிம் காங்கிரசுக்கெதிரானபோக்கை உருவாக்கியிருக்கிறது. இப்பின்னணியே கிழக்கில் முஸ்லிம் காங்கிரசுக்கெதிரான “கிழக்கின் எழுச்சி” போராட்டத்தை தோற்றுவித்திருக்கிறது. விடயங்களை பகிரங்கமாகப் போட்டு உடைத்துவிடக்கூடாது எனக்கூறி மௌனம் காத்து வந்தரவூப் ஹக்கீம், தற்போது “வடக்கு கிழக்கை இணைப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைமைஇணங்கிவிட்டது என்பதில் எவ்வித உண்மையுமில்லை.” எனத் தெரிவித்திருக்கிறார். இதற்குமுன்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தனின் இணக்கப்பாட்டுக்கான அழைப்பினை அடுத்து, “சேதாரம் இல்லாத  விட்டுக்கொடுப்புக்குத்  தயார்.” எனத்தெரிவித்திருந்தார் ரவூப் ஹக்கீம். இதற்குமாறாக, கிழக்கில் நடைபெற்று வரும் முஸ்லிம்களின் வடக்கு-கிழக்கு இணைப்பிற்குஎதிரான பிரச்சாரம் குறித்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மௌனம் சாதித்து வருவதுதொடர்பில் கிழக்குத் தமிழர்கள் அதிருப்பியை வெளிப்பிடுத்தியிருக்கிறார்கள்.

இலங்கை அரசாங்கத் தரப்பும்  பேரினவாத சக்திகளும், வடக்கு -இணைப்பு மற்றும் சமஷ்டிமுறை சாத்தியமற்றது எனக்கூறிவரும் நிலையில், அதற்குச் சாதகமான தொரு நிலையில் முஸ்லிம்களின் இந்தப்பிரச்சாரம் அமைந்திருக்கிறது என்றே தமிழர்களால் கருதப்படுகிறது. இந்தப் பிரச்சாரம், சிங்களத்தரப்பினரின் தூண்டுதலிலேயே மேற்கொள்ளப்பட்டு வருகிறது,சிங்களத் தரப்பினரின் வாதத்திற்கு ஆதராக அமைகிறது என்ற சந்தேகம் கிழக்குத் தமிழர்கள் மத்தியில் நிலவுகிறது.

அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்வைத்திருக்கிற கருத்து இந்தச்சந்தேகத்தை வலுப்படுத்தியுமுள்ளது. மகிந்த ராஜபக்ஷ, முஸ்லிம்கள் வடக்கு-கிழக்குஇணைப்பை எதிர்ப்பதால் தானும் வடக்கு-கிழக்கு இணைப்பை எதிர்ப்பதாக அண்மையில்தெரிவித்திருந்தார். எனினும், முஸ்லிம் காங்கிரசும் தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைமையும் (கூட்டமைப்புத்தலைமை என்பது தற்போது அது சம்பந்தரையும் சுமந்திரன் ஆகிய இருவரையுமே குறித்துநிற்கிறது) தாங்கள் நல்லிணக்கத்துடன் இருந்து வருவதாகக் கூறிவருகிறார்கள். எம்.ஏ.சுமந்திரன், நிபந்தனையற்ற இணைப்புக்கு எந்தவொரு முஸ்லிம் தரப்பும் முன்வரமாட்டாது. அப்படியானால் அந்த நிபந்தனை என்ன? அவற்றை எவ்வாறு நாங்கள் உள்வாங்குவது? என்பது தொடர்பிலும் தற்பொழுது பேச்சுக்கள்  இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன எனத்தெரிவித்திருக்கிறார்.

தமிழ்-முஸ்லிம் மக்கள் மத்தியிலான  உறவாடல்களும்,  உரையாடல்களும்  மிக அவசியம் என நல்லாட்சிக்கான  மக்கள்  முன்னணி தெரிவித்திருக்கிறது அக்கட்சி, இது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கையாக நேரடி மக்கள் சந்திப்புக்களை ஏற்படுத்த தயார் எனவும், அவற்றில்கலந்து கொள்ளுமாறு சம்பந்தருக்கு அழைப்பும் விடுத்திருக்கிறது.எனினும், மிக அண்மையில் கிழக்கிலிருந்து வெளியாகி வரும் செய்திகள், உறவாடல்கள்-உரையடால்கள்  ஏற்பட முடியாதளவிற்கு  தமிழ்-முஸ்லிம் முரண்பாடுகள்  மேலும்  அதிகரித்துச் செல்கின்றதனையே  காட்டிநிற்கின்றன.

வடக்கிலிருந்து முஸ்லீம்கள் பலவந்தமாக வெளியேர்றப்பட்டு 26 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், வடக்கு மாகாண சபையோ, இலங்கையின் எதிர்க்கட்சித் தலமையிலிருக்கும் தமிழர் தேசியக் கூட்டமைபோ இன்றுவரை அவர்களது மீழ் குடியேற்றம் தொடர்பாக முஸ்லிம்களால் வைக்கப்பட்ட எந்தக் கோரிக்கைகளுக்கும், சாதகமான விதத்தில் எந்த முயற்சிகளும் எடுக்கவில்லை என்று தொடர்ந்து யாழ் மாநகரசபையின் முன்னாள் உறுப்பினர் சுபியான் குற்றம் சாட்டிவருவது தெரிந்ததே.இந்தக் கொதிநிலையை தணிப்பதில், முக்கிய பங்கும் பொறுப்பும் யாழ் மாகாணசபைக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இருக்கிறது, கிழக்குவாழ் தமிழ் மக்களுக்கும் கிழக்கு முஸ்லிம்களுக்கும் இடையில் நல்லுறவை ஏர்படுத்துவதில் இவர்களது பங்கு முக்கியமானது என்று அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.