பீல் காவல்துறை அதிபரின் சட்டவிரோத நடவடிக்கை!

87

பிராம்ப்ரன், மிஸ்ஸிஸாகா இரண்டையும் உள்ளடக்கிய பகுதியே பீல் பிரதேசம். இந்தப் பகுதியின் காவல்துறை அதிபத் ஜென்னிஃபர் இவான்ஸ். வெள்ளைத் திமிர் கொஞ்சம் அதிகமுள்ளவர். பீல் பிரதேசக் காவல்துறை தொடர்பாகவும் பல இனவாதக் குற்றச்சாட்டுகள் உள்ளன. ஜென்னிஃபர் இவான்ஸம் (Jennifer Evans) அவருடைய மேன்மை தங்கிய தலைமையின் கீழ் ஏவல் புரியும் காவல்துறையினரும் ஊயசனiபெ என்று பொதுவாக அழைக்கப்படும்,      “ அவசியமற்று வெள்ளையரல்லாதோரைத் தெருவிலும் வாகனங்கள் ஓட்டும் போதும் மறித்து விசாரிக்கிற” நடைமுறையை அவசியம் எனக் கருதுபவர்கள்.  இது இனவாதம் எனபதை ஏற்றுக் கொள்ள மறுப்பவர்கள். கனடாவின் பல காவல்துறைகளில் இந்த நடைமுறை வழக்கில் இல்லை. பீல் பிரதேசத்தில் பெரும் அளவில் வெள்ளையர் அல்லாதவர்கள் வாழ்ந்தாலும் அதிகார அடுக்கு இன்னும் பழமை பேணும் வெள்ளையர்கள் கைகளிலேயே பெருமளவு இருக்கிறது.

சென்ற வாரம் கனடிய ஒலிஃஒளி பரப்புக் கூட்டுத்தாபனத்தின் (CBC)  பிரபலமான காலை நிகழ்ச்சியான ஆநவசழ ஆழசniபெ நிகழ்வில் அவரது நேர்முகம் இடம் பெற்றது. “ தங்களுடைய அண்டை அயலை விட்டு ( அவர் பயன்படுத்திய சொல் neighborhood) மற்றவர்ககளுடைய அண்டை அயலில் நடமாடுபவர்கள் எல்லோரும் சந்தேகத்துக்குரியவர்கள்தான்” என அந்த நேர்காணலில் இவான்ஸ் தெரிவித்தார்.

எங்களுடைய பெற்றோர் அல்லது உறவினர் வேறு வேறு இடங்களில் வசித்தாலும் அங்கு நாங்கள் நடமாட முடியாதா? என நேர்காணல் செய்தவர் கேட்டபோது. “ அது பொருத்தமான காரணம்தான். எனினும், மற்றவர் அண்டை அயலில் நீங்கள் நடமாடினால் காவல்துறைக்குச் சந்தேகம் வரும்தான்.” எனப் பதில் தந்து கருத்தை மீண்டும் வலியுறுத்தினார்.

அவருடைய நியாயப்படி மாநிலத்தின் பலபாகங்களிலும் இருந்து வந்து தொறொன்ரோ பல்கலைக் கழகத்தின் மிஸ்ஸிஸாகா வளாகத்தில் கற்கும் ஆயிரக்கணக்கான மாணவர்களும் சந்தேகத்துக்குரியவர்கள்தான்!!!. இவரது பிரதேசத்தில் வெள்ளையர்களை விட மூன்றுமடங்கு அதிகமான அளவில் வெள்ளையல்லாதோர் காரணமின்றி தடுத்து நிறுத்தி விசாரிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் வெளியிடப்பட்ட தகவல் ஒன்று கூறுகிறது கனடாவின் சுதந்திரங்களுக்கும் உரிமைகளுக்கான பட்டயம் (Canadian Charter of Rights and Freedom) கனடாவில் வாழ்பவர்கள் அனைவருக்கும் எழுந்தமானமாகக் கைது செய்யப்படுவதையோ, தடுத்து வைத்து விசாரிக்கப்படுவதையோ எதிர்க்கிறது.  “காரணமின்றியும்  உலவித் திரிவதற்கான”  முற்று முழுதான சுதந்திரம் எங்களுக்கு உள்ளது.

அப்படியிருக்க, இவான்ஸ் அம்மணி இவ்வாறு தெரிவித்திருப்பது சட்ட விரோதமும் கூட. அவர் ஒன்றும் சட்டம் தெரியாமல் இப்படிப் பேசவில்லை. அவரது இனவாதம் தான் அவரை இப்படிப் பேச வைக்கிறது. அவரது வெள்ளையல்லாதோர் மீதான வெறுப்புக்கு பீல் பிரதேச மக்கள் கொடுக்கக் கூடிய பதில் அவரைப் பதவியில் இருந்து விலகக் கோருவதும் அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதும்தான்.