அஜித்தை உதறிய சிம்பு!

92

சமந்தாவை கவிழ்க்கும் நயன்!
நீண்டகாலமாக நம்பர் வன் அந்தஸ்தில் நயன்தாரா இருக்கிறார். வயதும் ஏறிக்கொண்டு போகிறது, இளம் நாயகிகளின் படையெடுப்பு அதிகரித்து விட்டது. போட்டி கடுமையாகியுள்ளது. படங்களை குறைத்து தமிழில் மட்டும் கவனம் செலுத்தி வந்த நயன்தாரா தெலுங்குப்பக்கம் கவத்தை செலுத்த ஆரம்பித்துள்ளார். அஜித்தின் வேதாளம் தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகிறது. இதில் சமந்தாவை நாயகியாக்க முயன்றுள்ளனர். சமந்தா இரண்டு கோடியை விட ஒரு சதம் குறைக்க மறுத்துவிட்டார். பின்னர் நயனிடம் வந்துள்ளனர். அவரும் இரண்டு கோடி சொல்லியுள்ளார். பின்னர் சமந்தாவை ஓரங்கட்டுவதற்காக ஒன்றரை கோடிக்கும் குறைவாக குறைத்துள்ளார்.

சாதனைப் படம்!
அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்ற படத்தை வெறும் பத்து மணித்தியாலத்தில் எடுத்து சாதனை செய்திருக்கிறார்கள். ஆறு கமரா வைத்து, ஒரு காட்சி முடிந்ததும் மற்றைய படப்பிடிப்பு ஆரம்பிக்கும் விதமாக திட்டமிட்டு படத்தை முடித்துள்ளனர். புதிதாக திருமணமான கணவன்- மனைவி. மனைவியை பிடிக்காத கணவன் அவளை வீட்டை விட்டு விரட்ட பேய் நாடகம் ஆடுமாறு நண்பர்களிடம் கேட்கிறான். இதற்குள் மாடியில் புதிய ஜோடி குடிவருகிறது. பேயும் புகுந்து விடுகிறது. இறுதியில் என்ன நடந்ததென்பதே கதை. குறைந்த நேரத்தில் படத்தை முடித்து கின்னஸ் சாதனை அனுப்பியுள்ளனர்.

திரும்பி வந்த சமந்தா!
சமந்தா- நாகரசதன்யா காதல் விரைவில் திருமணத்தில் முடியப்போவதாக செய்திகள் வந்த நிலையில் அடுத்த வருடத்திந்கு திருமணத்தை தள்ளிவைத்தனர். திருமணத்திந்காக புதிய படங்களை தவிர்த்து வந்த சமந்தா மீண்டும் நடிக்க வந்துள்ளார். இதையடுத்து சிவகார்த்திகேயன், விசால் படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். குறைந்தது இன்னும் எட்டு மாதங்களாவது சமந்தா நடிப்பார் என்ற தகவல் வெளியானதையடுத்து அவரை ஒப்பந்தம் செய்ய பலரும் போட்டி போடுகிறார்களாம்.

அஜித்தை உதறிய சிம்பு!
அஜித்திற்கு எவ்வளவு வெறித்தனமான ரசிகராக சிம்பு இருக்கிறார் என்பது ஊரறிந்த செய்தி. அஜித் படம் வெளியானால் முதல் ஆளாக சிம்பு பார்த்துவிடுவார். தனது படங்களில் ஒரு காட்சியிலாவது அஜித் ரசிகன் என்பதை வெளிப்படுத்தி விடுவார். இந்த நிலையில் அண்மையில் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாடிய சிம்பு, இனி படங்களில் அஜித் பெயரை பாவிக்கப் போவதில்லை என கூறியுள்ளார். தற்போது சிம்பு நடிக்கும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் அஜித் பற்றிய எந்த பேச்சும் இல்லையாம். மாறாக, இன்னொரு நடிகரின் ரசிகராக நடிக்கிறாராம். அது, தந்தை டி.ஆர்.ராஜேந்தர்!

விஜயை தாக்கிய அமலாபால்!
இயக்குனர் விஜய்- அமலாபால் ஜோடி மனமொத்து பிரிவதாக முடிவு செய்து குடும்பநல நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர். விவாகரத்து இருவரது வாழ்க்கையையும் பாதிக்காத விதத்தில் தத்தமது வேலைகளில் ஈடுபாடு காட்ட தொடங்கிவிட்டனர். விஜய் இயக்கிய தேவி அண்மையில் வெளியானது. ஜெயம் ரவி படமொன்று விரைவில் ஆரம்பிக்கிறது. அமலாபாலும் படங்களில் ஒப்பந்தமாகிறார். தனுஷின் வடசென்னையில் நாயகியாகியுள்ளார். அண்மையில் நண்பிகளுடன் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு எடுத்து புகைப்படங்களை வெளியிட்டு குறிப்புக்களும் எழுதியுள்ளார். நோ லுங்கிக் வக் (திரும்பிப்பார்க்க மாட்டேன்), உன் இதயத்தை தன் நெஞ்சில் தாங்கி இருக்கும் ஒருவரை தவிர வேறு ஒருவரையும் உன்னைப்பற்றிய முடிவுகள் எடுக்க அனுமதிக்காதே போன்றவை சில. இவை முன்னாள் கணவன் விஜயை தாக்குவதற்காக எழுதப்பட்டதாக ருவிற்றரில் சர்ச்சை தோன்றியுள்ளது.