ஆண்பிள்ளைகள் பெண்பிள்ளைகளின் சட்டையை அணியக் கூடாது!

117

ல்பேட்டாவில் அண்மையில் இரண்டு குடும்ப நீதிமன்றங்களில் நடந்த வழக்குகளைத் தொடர்ந்து, ‘பால்நிலை அடையாளம் என்றால் என்ன என்பதை புரிந்துகொள்ளும் விதத்தில் நீதிபதிகள் கல்வியூட்டப்பட வேண்டும்’ என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார் பாலியற் சிறுபான்மையினர் தொடர்பான நிபுணர் ஒருவர்.

இந்த நீதிமன்றத்துக்கு வந்த வழக்கும், வழங்கப்பட்ட தீர்ப்பும் விசித்திரமானவை.. வழங்கப்பட்ட தீர்ப்பு இதுதான்:

ஒரு பிள்ளை ஆண்பிள்ளையாகப் பிறந்தால், அது பகிரங்கமாக பெண்பிள்ளைகளின் ஆடைகளை அணியக் கூடாது.
அல்பேட்டாவிலுள்ள மெடிசின் ஹற் என்ற நகரத்திலுள்ள ஒரு குடும்பத்தின் 5 வயது மகன் தொடர்பாக இந்த வழக்கு வந்தது. அந்த மகன் தன்னை பெண்ணாக அடையாளப்படுத்தவும், பெண் பிள்ளைகளின் ஆடைகளை அணியவும் விரும்புவதை அவனது தாயார் ஆதரித்தார். ஆனால் தகப்பன் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. தாயார் தான் பிள்ளைக்கு பால் தொடர்பான மயக்கம் ஏற்படக் காரணமாக இருக்கிறார் என்பது அவரது வாதம். இதனால் இருவருக்குமிடையில் ஏற்பட்ட தகராறு அவர்களை நீதிமன்றத்தை நாடச் செய்தது.

கடந்த ஆண்டு இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இப்படி ஒரு தீர்ப்ப வழங்கினார்: பிள்ளை விரும்பினால், பெண் குழந்தைகளுடைய ஆடைகளை தனிப்பட்ட ரீதியில் மட்டும் அணியலாம். அதாவது அதை அணிந்து கொண்டு வெளியில் செல்ல முடியாது. ஆனால் தாயார் விடவில்லை. மேன்முறையீடு செய்தார். அங்கும் இந்த முடிவு உறுதி செய்யப்பட்டது. ஆனால், இப்போது மூன்றாவதாக இந்த வழக்கை விசரித்த நீதிபதி, முன்னய தீர்ப்புக்களை ரத்துச் செய்ததுடன், பிள்ளை தனக்கு விருப்பமான உடையை அணியலாம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளார்.

“கனடாவில் பாலியல் சிறுபான்மை தொடர்பான சட்டங்கள் எப்போதோ மாறிவிட்ட பிறகும் இப்படியான தீர்ப்புக்கள் வந்துகொண்டிருக்க முடியாது. ஆயினும் இப்படியான தீர்ப்புக்கள் வழங்கப்பட்டுக்கொண்டு தான் இருக்கின்றன. இத்தகைய. போக்குக்கள் கேள்விக்குப்டுத்தப்பட்டு திருத்தப்பட வேண்டியவை” என்று தெரிவிக்கிறார் அல்பேட்டா பல்கலைக் கழகத்தின், பாலியற் சிறுபான்மயினர் தொடர்பான கற்கைக்கான கல்வி நிலையத்தைச் சேர்ந்த க்றிஸ் வெல்ஸ். அந்தத் தாயருக்கு உதவியளித்து வரும் க்றிஸ், அவரது குடும்பத்தை அடையாளம் காட்ட விரும்பவில்லை என்று தெரிவித்தார். ‘அல்பேட்டவின் நீதித்துறை இந்த விடயங்களைக் கவனத்தில் கொண்டு பால் நிலை அடையாளம் தொடர்பான அறிவார்ந்த தன்மை கொண்டதாயும் பால்நிலை சார்ந்த சிக்கல்களை உள்ளடக்கியதாகவும் அமைய வேண்டும்’ என்று அவர் மேலும் தெரிவித்தார்.