உங்கள் குழந்தைகளும் பள்ளிக்கு செல்ல மறுக்கின்றனரா?

87

பிள்ளைக்கும் ஆசிரியருக்கும் நெருங்கிய தொடர் அறுந்து விடுவதால் பிள்ளை பாடசாலைக்குப் போக பயந்து அழுது அடம்பிடிக்கிறது. பிள்ளையிடம் காணப்படும் குறைகள் கோளாறுகளை ஆசிரியர் கண்டிப்புடன் தண்டிக்கும்போது ஆசிரியரின் சுபாவத்தைக் கண்டு பாடசாலைக்குப் போக அஞ்சுகிறது. பாடசாலையைப் பற்றி கதைத்தாலே பிள்ளை அஞ்சுவதற்கு இதுவே காரணம்.

எல்லாப் பிள்ளைகளும் அறிவிலும் புத்திக் கூர்மையிலும் ஒரே நிலையில் இருக்க மாட்டார்கள். ஒரு பிள்ளை புரிந்து கொள்ளும் முறையில் மற்றப் பிள்ளை புரிந்து கொள்ளாது. ஒரு பிள்ளை சரியாக புரிந்து கொள்ளும் அதேவேளை மற்றப் பிள்ளை பிழையாக விளங்கிக் கொள்ளும். பிள்ளைகளிடத்தில் இவ்வாறான கோளாறுகள் இருப்பதை ஆசிரியர் புரிந்து கொண்டு தான் கற்பிக்க வேண்டும். பிள்ளைகளின் மனோநிலையையும் கோளாறுகளையும் கவனிக்
காமல் ஆசிரியர் பிள்ளைகளுக்கு கற்பிக்க முனைந்தால் ஆசிரியருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருக்காது.

அப்போது ஆசிரியர் பிள்ளையிடத்தில் கடினமாகவே நடந்து கொள்ள முனைவர். பிள்ளை ஆசிரியரை விட்டு விலகி பாடசாலையை விட்டு தூரமாகவே விரும்பும். நாளடைவில் அதுவே ஒரு அச்ச நோயாக மாறும். அதைத்தான் பாடசாலை அச்சநோய் எனக் குறிப்பிடப்படுகிறது.

இரண்டாவது தாயுடனுள்ள மிதமிஞ்சிய பிணைப்பு, அதாவது பிறந்ததிலிருந்து தாயுடைய மடியில்  அரவணைப்பில் வளர்ந்து வந்த அந்தப் பிள்ளை முதன் முதலாக தாயை விட்டு பிரிந்து  செல்வதாலும் பயந்து அஞ்சுகிறது. அறிமுகமற்றவர்களுடன்  கலந்துறவாடுவதை பயப்படுகிறது. தாயின் அன்பும் பாசமும் கிடைக்காமல் போகுமோ என்று அஞ்சுகிறது. அதுபோல் பெற்றோரின் பிரச்சினை அல்லது விவகாரத்தின் காரணத்தால் பெற்றோர் பிரிந்திருக்கும்போது அதனால் தாயுடைய தந்தையுடைய பாச பிணைப்பு கிடைக்காமல் தவிர்க்கும்போது பிள்ளை உளரீதியாக பாதிப்படைந்து விடுகிறது. அதன் காரணமாகவும் தாயைவிட்டு பிரிந்து செல்ல அஞ்சுகிறது.