கண்பார்வையை காக்கும் வற்றாளை!

ஹாரா பாலைவனத்துக்குத் தெற்கே உள்ள நாடுகளில் சுமார் எட்டுக் கோடி குழந்தைகள் விற்றமின் ஏ குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்களுக்குக் கண்பார்வை இழப்பு முதல் உயிரச்சுறுத்தல் நோய்கள் வரை பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

வளர்ந்து வரும் நாடுகளில் விற்றமின் ஏ குறைபாடு அதிகமாக உள்ளது. இதனால் பார்வைக் குறைவு, வளர்ச்சிக் குறைவு, நோய் எதரிப்பு சக்தி குறைபாடு என்பன ஏற்படும். இந்த விற்றமின் ஏ குறைபாட்டினால் 118 நாடுகளில் 140 மில்லியனுக்கும் அதிகமான ஆரம்பப் பாடசாலை மாணவர்களும், 7 மில்லியன்களுக்கும் அதிகமான கர்ப்பிணிப் பெண்களும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

வற்றாளையில் (சர்க்கரைவள்ளிக்கிழங்கு/ Sweet potato) அதிகளவு விற்றமின் ஏ உள்ளதையும், இன்னும் விற்றமின் ஏ செறிவூட்டப்பட்ட வற்றாளையை உற்பத்தி செய்யலாம் என்பதையும்  இதனால் கண்பார்வைக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்பதையும்  இந்த ஆண்டு  International Potato center ஐச் சேர்ந்த மருத்துவர்கள் ஆயசயை Andrade, Robert Mwanga  மற்றும் Jan Low என்பவர்கள் நிரூபித்து அதற்காக 250,000 அமெரிக்க டொலர்கள் பரிசையும் வென்றுள்ளார்கள்.

ஆரஞ்சு நிற வற்றாளைக் கிழங்கு மூலம் கண்பார்வை தொடர்பான நோய்களைக் குணப்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த வகைக் கிழங்கின் விளைச்சலை அதிகரிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். ஆனால் நாம் அதிகமாக இந்த வற்றாளைக்கிழங்கிற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. நம் உணவில் உருளைக்கிழங்கைச் சேர்த்துக் கொள்ளும் அளவிற்கு வற்றாளைக் கிழங்கைச் சேர்த்துக் கொள்வது இல்லை. ஆனால் இரண்டு கிழங்குகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, உருளைக்கிழங்கில் 14 மிஹி (International Units )  விற்றமின் ஏயும் வற்றாளைக்கிழங்கில் 22,000ஐரு விற்றமின் ஏயும் காணப்படுகிறது. விற்றமின் ஏ வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

அது மாத்திரமன்றி வற்றாளைக்கிழங்கு விற்றமின் சி (நோய் எதிர்ப்பு சக்தி ), விற்றமின் பி6 (Metabolism & nervous system ), இரும்புச்சத்தும் (Blood cells) போன்றவற்றையும் கொண்டது. குறைந்த
கலோரியும் அதிக fiber உம் கொண்டது. அதனால் குழந்தைகளுக்கு ஏதோ ஒரு விதத்தில் அதிக நன்மை பயக்கும் இக்கிழங்கை உணவோடு சேர்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

இந்தக் கிழங்கு இயல்பாகவே இனிப்புச் சுவை கொண்டதால் குழந்தைகளுக்கு இலகுவாக கொடுக்க முடியும். பெற்றோர் சிறிது முயற்சி செய்தால் இது கைகூடும். உருளைக் கிழங்கைப் போல் வற்றாளைக் கிழங்கையும் சிறிய துண்டுகளாகவோ அல்லது நீளமான துண்டுகளாகவோ வெட்டி (French fries போல) பொரித்துக் கொடுக்கலாம். இதில் இனிப்பு சுவை உள்ளதால் அதிக அளவு உப்புப் போடத் தேவையில்லை. அல்லது வெதுப்பல் செய்து அவர்களுக்கு விருப்பமான பாற்கட்டி (Cheese) வகையோடு கொடுக்கலாம்.

இன்னும் கோதுமை மா கொண்டு செய்யும் உணவு வகைகளில் பாதி மாவுக்குப்பதிலாக அவித்த கிழங்கை மாவோடு சேர்த்து உணவு வகைகளைச் தயாரிக்கலாம். கட்லட், பற்றீஸ் வகையான உணவுகளில் உள்ளீட்டிற்கு இந்தக் கிழங்கை பயன்படுத்தலாம். உருளைக் கிழங்கிற்குப் பதிலாக சாம்பார், கறி வகைகள் செய்யும் போது அதில் வற்றாளைக் கிழங்கைச் சேர்க்கலாம்.

இதில் எனக்குப் பிடித்தமான ஒரு இலகுவான வற்றாளைக் கிழங்கு செய்முறையை உங்களோடு இங்கே பகிர்ந்து கொள்கிறேன்:

இரண்டு அளவான வற்றாளைக் கிழங்கை எடுத்துக் கழுவி தோல் நீக்கி ஓரளவு சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.  அதன் பின்பு பாதித் தேங்காயை உடைத்துத் துருவி சிறிது தண்ணீர் விட்டு பிழிந்து முதற் பாலை எடுத்து வைத்து விட்டு, மறுபடியும் தண்ணீர் விட்டுப் பிழிந்து இரண்டாம் பாலையும் எடுத்து வைக்க வேண்டும். வெட்டிய கிழங்குத் துண்டுகளை ஒரு பானையில் இட்டு, சிறிது தண்ணீர் (தண்ணீரில் கிழங்கு முழுவதும் மூடி இருக்க வேண்டும்) சேர்த்து மூடி அவிய விடவேண்டும். கிழங்கு முக்கால் பதமாக அவிந்ததும் பிழிந்து வைத்துள்ள இரண்டாம் பாலை (அரை கப்) சேர்த்துத் துளாவி இன்னும் சிறிது அவிய விடவேண்டும்.

இரண்டாம் பால் விட்டு 5 நிமிடங்களின் பின் முதற் பாலையும் (கால் கப்) சிறிது உப்பையும் (உப்பு தேவையானால் மட்டும்) சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறி இறக்க வேண்டும். இனிப்புச் சுவை அதிகம் விரும்புவர்கள் தேவையென்றால் சிறிது சீனிச் சேர்த்துக் கொள்ளலாம். இது பாயாசாம் போல அல்லது பாலில் செய்த இராசவள்ளிக் கிழங்கு போல சுவையாக இருக்கும். காலை உணவாகவோ அல்லது மாலைச் சிற்றுண்டியாகவோ உண்டு மகிழலாம்.

இன்னும் பல அருமையான வற்றாளை (சர்க்கரைவள்ளிக் கிழங்கு) உணவு செய்முறைகளை அறிந்து கொள்ள www.foodnetwork.ca