நீதிமன்றத்தில் வைத்து கழுத்தை வெட்டிய பாடசாலை ஆசிரியர்!

91

குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவர் நீதி மன்றில் வைத்தே திடீரென சவரக் கத்தியினால் தனது கழுத்தை வெட்டிய திடுக்கிடும் சம்பவம் ஒன்று அண்மையில் நடந்தது.

இந்தச் சம்பவம் நடந்தது தாமுரிக்காவில், கலிபோனியாவில். பாலியல் வல்லுறவு தொடர்பாக நடந்த வழக்கொன்றின் விசாரனையில் குற்றவாளியாக கருதப்பட்ட ஜெஃப்றி ஸ்கொட் ஜோன்ஸ் (56) ஒரு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர். 2012- 2013 காலப்பகுதியில் அவரது காதலியின் உறவினரான ஒரு பதின்ம வயது பெண்ணுடன் பாலியல் உறவு வைத்திருந்தார் என்ற குர்றச்சாட்டின்மீது இவருக்கெதிராக வழக்குத் தொடரப்பட்டது. வழக்கின் விசாரணைக்குப் பின்னர், குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கி, அதன் பின் யூரிகளின் முடிவுக்கு அனுமதிக்கவா என நீதிமன்றம் கேட்டது. ஆயினும் பாதிக்கப்பட்டவர் தரப்பு சட்ட்த்தரணிகள் இதை உறுதியாக மறுத்தனர்.  இந்தச் சந்தர்ப்பத்தில்தான் அவர் திடீரென சவரக்கத்தியை எடுத்து தனது கழுத்தை வெட்டிக்கொண்டார்.

உடனடியாக அங்கிருந்து வைத்திய சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட அவர் சிகிச்சியின் பின் குணமாகியுள்ளார். எவ்வாறாயினும், அவரது வழக்கு பின்னர் யூரிகளின் முடிவுக்கு விடப்பட்டது. ஆயினும், அவர்கள் இரண்டு மணினேர ஆலோசனைக்குப் பிறகு, அவரது தொடர்ச்சியான பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் வன்முறைகள் காரணமாக, குர்றவாளி என முடிவு செய்ததனர். இந்தக் குற்றத்துக்காக அவருக்கு 66  வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.!