கர்ப்பிணிகளுக்கு இது தேவை

209

பிரசவத்தை சுகமானதாக மாற்றி விட யோக சிறந்த பயிற்சியாகும். இந்த ஆசனங்களை கர்ப்பிணி பெண்கள்  செய்துவந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

வண்ணத்து பூச்சி ஆசனம்
சுவரில் சாய்ந்த படி உட்கார்ந்து இரு கால்களையும் மடித்து பாதங்களை சேர்த்து வைத்து பிடித்து கொள்ளவும்.வண்ணத்து பூச்சி சிறகுகளை விரிப்பதை போல இரு தொடைகளையும் பக்கவாட்டில் உயர்த்தி தாழ்த்தவும்.தொடர்ந்து 10 முதல் 20 முறை வரை இதை செய்யவும். ஆசனத்தை செய்ய பின் ஓய்வு பயிற்சியை செய்யவும்.

உட்கார்ந்து உடலை தளர்த்தும் பயிற்சி
சுவரோடு சாய்ந்து நிலத்தில் உட்கார்ந்து இரு கால்களையும் அகற்றி கைகளை அப்படியே மேலே தூக்கி ஓய்வெடுக்கவும்.

படுத்து உடல் தளர்த்தும் பயிற்சி
கால்களை நீட்டி கைகளை விரித்து படுக்கவும். வலது காலை மடக்கி இடது முட்டியருகே பாதத்தை வைக்கவும். அப்படியே கீழே சாய்க்கவும். இதே முறையில் இடது காலையும் செய்யவும்.வலது கையை தலைக்கு கீழே மடித்து வைக்கவும். வலது பக்கமாக திரும்பி படுக்கவும். இடது காலை இடுப்பு வரை உயர்த்தி பிறகு கீழே இறக்கவும். இதே போல் மறு புறமும் செய்ய வேண்டும்.

படுத்தபடி செய்யும் வண்ணத்து பூச்சி ஆசனம்
கால்களை நீட்டி கைகளை சிறிது தள்ளி விரித்து வைத்து படுக்கவும் . இரு கால்களையும் மடக்கி இரு பக்கமும் பக்கவாட்டில் வண்ணத்து பூச்சியின்  இறக்கைகள் போல லேசாக மேலும் கீழும் ஆட்டவும். பின்பு ஓய்வு பயிற்சி செய்யவும்.

யோகா பயிற்சி பலன்கள்
பிரசவ காலத்தில் நீரிழிவு நோய் வராமல் தடுக்கும் கால் சுரப்பு மற்றும் வீக்கம் வராமல் தடுக்கும். கர்ப்பிணிகளுக்கு முதுகு வலி வராமல் தடுக்கும் இடுப்பு தசைகள் மற்றும் கர்ப்பபை வாயை சுற்றியுள்ள பகுதிகளில் நெகிழ்வு தன்மையை ஏற்படுத்தி குழந்தை வரும் வழியை தயார்படுத்தி சீர்ப்படுத்தும்.

கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் உடல் அசதியை போக்கி உடலை நன்கு தளர்த்த உதவும். இடுப்பை உயர்த்தும் பயற்சி  தரையில் அமர்ந்து இரு பாதமும் தரையில் படும்படி கால்களை மடக்கி இரு கைகளையும் உடலுக்கு பின்னே வைத்து கொள்ள வேண்டும்.

கைகளை ஊன்றியபடி மெதுவாக இடுப்பு பகுதியை மேலே உயர்த்தவும். ஒரு சில விநாடிகள் இதே நிலையில் இருந்து பின் இறங்கி சிறு ஓய்வுக்கு பின் மீண்டும் செய்யலாம்.