கோப் அறிக்கையை சட்டமா அதிபரிடம் கையளிக்குமாறு பிரதமர் அறிவிப்பு!

84

கோப் அறிக்கையை மேலதிக நடவடிக்கைகளுக்காக, சட்டமா அதிபரிடம் கையளிக்குமாறு அமைச்சரும் சபை முதல்வருமான கிரியால்லவிற்கு பிரதமர் றனில் அறிவுறுத்தியிருந்தார், றனிலின் இந்த நடவடிக்கை எதிர்க்கட்சியினருக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பிரதமர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்து அவர்கல் அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.

நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் மகேந்திரனை குற்றவாளி என்று தெரிவிக்கும் கோப் அறிக்கை சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது பதவிக்காலத்தில் அவர் மேற் கொண்ட நடவடிக்கைகளல் 1.6பில்லியன் ரூபாய்கள் மத்திய வங்கிக்கு நஸ்டம் ஏற்பட்
டுள்ளதாகத் தெரிவித்த அந்த அறிக்கை அவர் நிதிமோசடிக் குற்றத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரை செய்திருந்தது.

பாராளுமன்றத்தில்  சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கையை மேலதிக நடவடிக்கைகளுக்காக சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்குமாறு பிரதமர் றனில் விக்கிரமசிங்க அறிவித்தைத் தொடர்ந்து அது சட்டமா அதிபரிடம் அது கையளிக்கப்பட்டுள்ளது. மகேந்திரன் சம்பந்தப்பட்ட இந்த பிணை முறி மோசடி தொடர்பான நடவடிக்கைகளில் ஆரம்பத்தில் றனிலுக்கு தார்மீகப் பொறுப்பு இருப்பதாகவே குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், பின்னர் மகேந்திரனை
ரனில் பாதுகாப்பதாகவும், அவரது மோசடியுடன் ரனிலுக்கும் சம்பந்தமிருக்கலாம் என்றும் பரவலான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இவை எல்லாவற்றுக்கும் மேலாக, கோப் விசாரணையின்  போது மகேந்திரன் தான் றனிலின் உத்தரவின் பேரிலேயே அப்படி செய்ததாக குறிப்பிட்டிருந்ததாக செய்திகள் தெரிவித்த போதும் இறுதி அறிக்கையில் அந்த விடயம் தெரிவிக்கப்படவில்லை.

இப்போது றனில் விக்ரமசிங்கவின் அறிவுறுத்தலின் படி இந்த அறிக்கை மீதான சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக  சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டது மகேந்திரன் மீதான நடவடிக்கைகளை தாமதப்படுத்தும் நோக்குடனேயே என்ற கருத்துக்கல் எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. அவர்களில் சிலர் ஜனாதிபதியுடன் நேராக சந்தித்து, இந்த விசாரனை நியாயமானமுறையில் நடப்பதற்கேற்ற விதத்தில், ஜனாதிபதி தலையிட வேண்டும்என்று கோரிக்கை வைத்துள்ளனர். இதேவேளை, எதிர்க்கட்சி எம்.பிக்கள் குற்றவாளியாகக் காணப்பட்ட மகேந்திரன் விக்கிரமசிங்கவின் நெருங்கிய சகா என்பதாலும், அவரைப் பாதுகாக்க முயன்றவர் என்பதாலும் பதவி விலக வேண்டும் என்று கோருகின்றனர். இதேவேளை, மஹேந்திரன் திடீரென நாட்டைவிட்டு வெளியேறியதை கண்டித்த அமைச்சர் மகிந்த அமமரவீர, விசாரணை நடக்கும்போது அவர் நாட்டுக்குத் திரும்பாமல் விட்டால், அவரை கைது செய்து  நாட்டுக்கு கொண்டுவர இன்ரப்போலின் உதவியை நாட்டவும் நாம் தயாராக உள்ளோம் என்று தெரிவித்தார்.

55 பக்கங்கலைக் கொண்ட இந்த கோப் அறிக்கையில், அதன் தலைவரான சுனில் ஹந்துனெட்டி,கடந்த ஒக்ரோபர் 28ம் திகதியன்று தாம் மகேந்திரன் இந்த பிணை முறி நடவடிக்கையில் அவர் நேரடி சம்பந்தமுள்ள  குற்றவாளியாக  அடையாளம் கண்டுள்ளதாக தெரிவித்திருந்தார்’ இந்த பிணை முறியோடு சம்பந்தப்பட்ட நேரடி ஏஜன்ட் கம்பனியான Perpetual Treasuries Limited, மகேந்திரனது பதவிக்காலமான 2015-2016 காலப்பகுதியில் முன்னைய ஆண்டை விட 430% அதிக இலாபத்தைப் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த நிறுவனத்தின் முக்கியஸ்தர் அர்ஜுன் அலோசியஸ், மகேந்திரனின்  மருமகன் எனவும் தெரிவிக்க்கப்படுகிறது.