சமையல் அறையில்

117
  1. கருவேப்பிலை, பூக்கள், வல்லாரை பொன்னாங்காணி போன்ற இலை வகைகள் வாடாமல் இருக்க வாழை மடலுக்குள் சுற்றி வைத்தால் வாடாமல் இயற்கையான செழிப்பாக இருக்கும்.
  2. இட்லி தோசைக்கு மா குழைத்து வைத்துவிட்டு காலையில் சமையல் செய்ய முடியவில்லை என்றால் மாலையில் மா புளித்து விடுமே என்ற கவலையை விடுங்கள்.  மா புளிக்காமல் இருப்பதற்கு இரண்டு வெற்றிலை இலையை மாவுக்குள் போட்டு வைத்தாதால் புளிக்காமல் இருக்கும்.
  3. காய்கறிகளை குளிர்சாதன பெட்டியில் வைக்கும் பொழுது பிளாஸ்ரிக் கவர் ஒன்றில் போட்டு  வைத்தால் காய்கறி அழுகாமல், தன்மை மாறாமல் அப்படியே இருக்கும்.
  4. சோறு அவிந்ததும் கஞ்சி வடிப்பதற்கு முன்னர் பாதி தேசிப்பழத்தை பிழிந்து விட்டு அதன் பின் வடித்தால் சோறு குழையாமல் ஒற்றை ஒற்றையாக வரும். பார்பதற்கும் உண்பதற்கும் அழகாக சுவையா இருக்கும்.
  5. நீங்கள் வைப்பதை போன்றே இரசம் வையுங்கள் . முடித்ததும் 2-3துளி நெய் சேர்த்து கொள்ளுங்கள். இரசத்தின் சுவையே வேறு.