சுய நிதி முகாமைத்துவம் -3

80

நிதி முகாமைத்தின் முதற்படி சரியான திட்டமிடல் தான். திட்டமிட்ட கடன் அடைப் பாவனையின் நன்மைகள் சிலவற்றை நாம் சென்ற வாரம் பார்த்தோம். அவற்றில் இப்போது மிகப் பொதுவானதும் பிரபலமானதுமான சிணீளலீ ஙிணீநீளீ எனப்படும் பண மீள் வழங்கல் பற்றி இம்முறை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

பண மீள்வழங்கல் முறைப்படி நாம் கடன் அட்டையில் செலவிடும் பண்த்தின் ஒரு குறிப்பிட்ட வீதம் எங்களுக்கு மீள வழங்கப்படும். பொதுவாக இது 0.5% முதல் 2% வரையாக இருக்கும். இது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்தப்பணம் எங்கிருந்து வருகிறது என்று தெரியுமா?.  தங்கள் இலாபத்தை அதிகரிக்க மட்டும் விரும்பும் வங்கிகள் ஏன் எமக்கு அப்படியொரு மீள்வழங்கலைத் தர வேண்டும்?.  நாம் எமது கடன் அட்டைகளை வியாபார நிறுவனக்களில் பயன்படுத்தும் போது அதற்கு ஒரு குறிப்பிட்ட சதவீத கட்டணம் வியாபாரிகளிடமிருந்து  வங்கிகளால் அறவிடப்படுகிறது. அதன் ஒரு பகுதியே பாவனையாளரை ஊக்குவிப்பதற்காக பண மீள்வழங்கலாக வழங்கப்படுகிறது.

அப்படியானால், வியாபாரிகள் ஏன் வங்கிக்கு கட்டணம் செலுத்த வேண்டும்? சில குறைந்த விலைக் கடைகளில் (உதாரணம் டொலராமா) கடன் அட்டைகளை அனுமதிக்காதற்கு இது தான் காரணம். அதுசரி, அப்படியாயின் பெரும்பாலான வியாபாரிகள் ஏன் கடன் அட்டைகளை அனுமதிக்க வேண்டும்? காரணம் வெகு தெளிவு. கடன் அட்டைப் பாவையாளர்கள் பணப்பாவனையாளர்களை விட அதிகம் செலவிடுவார்கள் என்கிற அனுமானம் தான். அது பெரும்பாலான வேளைகளில் பொய்த்துப்போவதில்லை. கடன் அட்டைகளை தட்டும் போது நம் எல்லோருக்கும் ஒரு தாராள மனது உருவாவது உளவியல். அது தவிர, இந்தக் கடன் அட்டைப் பாவனையை அனுமதிக்கும் வியாபர நிறுவனங்கள் தமது விலைகளினை அதிகரிப்பதன் தமது வங்கிக் கட்டணத்தையும்  ஈடுகட்டிக்கொள்கின்றன. அமெரிக்க ஆய்வொன்றின் படி கடன் அட்டைப்பாவனை இல்லாதொழிக்கப்பட்டால் பொருள் விலைகள் குறையும் என்று கூறப்படுகிறது. அப்படியானால் எங்கள் பணத்தை விலை அதிகரிப்பின் மூலம் வாங்கி அதை எங்களுக்கே தருவது தான் பண மீள் வழங்கலா என்று நீங்கள் நினைப்பது புரிகிறது.

எது எப்படியோ நாம் இந்த ஒரு முறைமைக்குள் தான் வாழ்கிறோம். எனவே இந்த முறைமையை நாம் சரிவரப் பயன்படுத்திக்கொள்ளாவிட்டால் இழப்பது நாம் தான். மீள்வழங்கல் கொண்ட கடன் அட்டைகளுள் எமது தேவைக்கும் பொருத்தமானதைத் தெரிவு செய்து அதை சரிவரப்பயன்படுத்துவது எப்படி என அறிந்து வைத்திருப்பது மூலம் நாம் பயனடைய முடியும். இவ்வாறான அதிக பண மீள் வழங்கலை வழங்கும் அட்டைகளைப் பெற்றுக்கொண்ட பின்னர் அதனை அதிகம் பாவிப்பதனால் அதிக இலாபம் கிடைக்கும் என்பது உண்மை. ஆனால் அதிகம் பாவிக்கும் போது நீங்கள் அதிக செலவையும் செய்கின்றீன்கள்.  பண மீள்வருகை உங்கள் செலவை அதிகரிக்கக் கூடாது. எனவே திட்டமிடும் போது தற்போதைய செலவு நிலையை வைத்து திட்டமிடுதல் நல்லது.

மீளவழங்கல் அட்டைகளில் ஒரு சில, குறைந்த வீத மீள்வழங்கலை வழங்குபவையாக இருக்கும் ஆனால் வருடாந்த கட்டணம் எதுவும் அறவிடப்பட மாட்டாது. நீங்கள் கடன் அட்டையில் செய்யும் செலவின் அளவு குறைவு என்றால் அவ்வாறான அட்டைகளை எந்த வங்கியிலும் பெற்றுக் கொள்ளலாம். வருடாந்தம் 8090 டொலர்கள் வரை கட்டணமாக அறவிடும் மீள்வழங்கல் அட்டைகள் கூட இருக்கின்றன. அவற்றின் மீள் வழங்கல் வீதங்கள் அதிகமாக இருக்கும். இவ்வாறான அட்டைகளை பெறும்படி வங்கிகள் உங்களை ஊக்குவிக்கக்கூடும். ஆனால் தேறிய மீள்வழங்கலை (மீள்வழங்கல்- கட்டணம்) ஒரு கட்டணமற்ற அட்டையின்  மீள்வங்கலுடன் ஒப்பிட்டுப்பார்த்து அந்த முடிவை எடுக்க வேண்டும்.

இதுதவிர சிறு எழுத்து (fine print) என்று சொல்லப்படும் மேலதிக விபரக்குறிப்புக்களை, நாம் கடன் அட்டை பெறும்போது கவனத்திலெடுக்க வேண்டும். இன்னவகையான செலவுகளுக்கு என்னென்ன வீதம் என்று வெவ்வேறாக வழங்கும் அட்டைகள் இருக்கின்றன. அதை விட எல்லா செலவுகளுக்கும் ஒரே வீதத்தில் வழங்கும் அட்டைகளும் இருக்கின்றன. சிறப்பு செலவுவகைக்கான அட்டைகள் (உதாரணம் வாகன எரிபொருள்) வாங்கினால் அதற்கு மேலதிக முகாமைத்துவமும் திட்டமிடலும் அவசியம்.

அது தவிர அதிக மீள்வழங்கல் வீதங்களை வழங்கும் அட்டைகள் கடனுக்கு அறவிடும் வட்டி வீதங்களும் சிலவேளை அதிகமாக இருக்கும். அந்த மேலதிகவட்டி எல்லாவற்றையும் தின்று விடும். பண மீள்வருகையை அட்டையை எப்படித் தெரிவுசெய்வது, எப்படி அதன் முழுப்பலனையும் பெற முடியும் என அடுத்தவாரம் பார்க்காலாம்.