சீற்றா ஒப்பந்தத்தை எதிர்த்து கனடிய அரசுக்கு எதிராக வழக்கு!

90

னடா அரசு அண்மையில் கைச்சாத்திட்ட சீற்றா (CETA) ஒப்பந்தம் அரசியல் அமைப்புக்கு முரணானது என்று தெரிவித்து அதற்கெதிராக கனடா உச்ச நீதிமன்றில் வழக்குத் தொடர்வதற்கான முறைப்பாடொன்றை சமர்ப்பித்துள்ளார். ரொறன்ரோவை சேர்ந்த பிரபல சட்டவியற் சட்டத்தரணி ஒருவர்.  றொக்கோ கலற்றி  (Rocco Galati) என்ற இந்தச் சட்டத்தரணி ஏற்கனவே கொன்செர்வேற்றிவ் அரசாங்கத்தினல் உயர்நீதிமன்றத்துக்கு நீதிபதிகளை நியமிப்ப்பதற்காகப் பிரேரிக்கப்பட்ட ஒருவர் தொடர்பாக வழக்குத் தொடர்ந்து வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் இந்த சீற்றா ஒப்பந்தம் அரசியலமைப்புக்கு முரணானது என்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள முறைப்பாட்டறிக்கை, கனடாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குமான ஒப்பந்தம், வட அமெரிக்க சுதந்திர வர்த்தக உடன்பாட்டைப்போல, அரசாங்கத்துக்கெதிராக சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் நஷ்ட ஈடு கோரமுடியும் என்ற சர்ச்சைக்குரிய ஏற்பாடுகளிக் கொண்டிருக்கிறது என்று தெரிவிக்கிறது. அதைத் தவிர,அரசாங்கம் இத்தகைய உடன்படிக்கைகளுக்கு போக முன்பாக பாராளுமன்றம் மற்றும் பிற மாகாணங்கலின் அனுமதி பெறுவதை ஒரு பாரம்பரியமாக கொண்டிருக்கவில்லை என்றும் அதுவும் ஒரு அரசியற்சட்டம் சார்பிரச்சினையே என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டதும், நாம் அவற்றுக்குக் கட்டுப்பட்டு ஆகவேண்டி இருக்கிறது அதுதான் இங்குள்ள பிரச்சினை. மற்றைய நாடுகள் குறிப்பாக,அமெரிக்கா,மற்றும் ஐரோப்பிய நாடுகள் இத்தகைய ஒப்பந்தங்களால் கட்டுப்படுத்தப் படுவதில்லை என்று அவர் மேலும் வலியுறுத்தினார், கடந்த வெள்ளியன்று முன்னைனாள் லிபரல் அமைச்ச Paul Hellyerஐயும் இன்னும் இருவரையும் முறைப்பாட்டாளர்களாக கொண்டு இந்த வழக்குக்கான முறைப்படு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தம்மால் நிச்சியம் வெற்றிபெற முடியும் என தெரிவித்த அவர், இத்தகைய நடவடிக்கைகள் கட்டுப்பாட்டுக்குள் வர இது அவசியம் எனவும் தெரிவித்தார்.