துர்ஹாம் தமிழ் சங்கத்தின் வருடாந்த இளைஞர் விழா- 2016!

151

துர்ஹாம் தமிழ் சங்கத்தினால் (Durham Tamil Association)  வருடாந்தம் நடாத்தப்பட்டுவரும் இளைஞர் விழா ஒக்ரோபர் 22ம் திகதியன்று ஜே. க்ளார்க் அரங்கத்தில் (J.Clarke auditorium) சிறப்பாக நடைபெற்றது. நாநூறுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்ட, அரங்கம் நிறந்த நிகழ்வாக நடைபெற்ற இந்த விழாவில் அரசாங்க, மற்றும் பொதுசன சேவை நிறுவனக்களின் பிரதி நிதிகள், மக்கள் பிரதிநிதிகள் என்று பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மூன்று வயதுமுதல் பதினாறு வயதுவரையான இளம் சந்ததியினரின் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. உண்மையில், டிலானி தேவி, கிருத்திகா சண்முகனாதன், வர்ணா சந்தீப், யோகா செல்வன், சுஜாதா சத்தியாபில், கிருத்திகா தயாபரன் அர்ஜுன் தர்சன், கனிஷ்ரன்  குணேஸ்வரன் ஆகிய ஆசிரியர்களின் தொண்டுதவி காரணமாக இந்த விழா இத்துணை சிறப்பாக நடைபெற்றதெனலாம். பரத நாட்டியம், கொலிவூட் ரக நடனம், வீணை இசை எனப் பலநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நிகழ்வில் எடுக்கப்பட்ட சில ஒளிப்படங்களைக் இங்கே காணலாம்.