உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இம்மானுவல் அவர்களுடனான சந்திப்பு

304

கனடியத் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இம்மானுவல் அவர்களுடனான பொதுமக்கள் சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அருட்தந்தை இம்மானுவல் அவர்கள் தாயகத்தில் நிரந்தர அமைதியையும் நீதியையும் உருவாக்க பன்னாட்டு அரசுகளோடு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறார்

அண்மையில் அருட்தந்தை இம்மானுவல் அவர்கள் அமெரிக்க அரசின் உத்தியோகபூர்வ அழைப்பையேற்று வோசிங்ரன் நகருக்குச் சென்றிருந்ததார். அங்கே தென் மற்றும் நடு ஆசிய நாடுகளுக்கான அரசின் துணைச் செயலாளர் திருமதி நிசா பிஸ்வால் அவர்களையும் மனித உரிமைகளுக்கான துணைச் செயலாளர் திரு ரொம் மாலினோவ்ஸ்சி அவர்களையும் சந்தித்தார்.

இடம்: தமிழிசைக் கலாமன்றம்
நாள்: புதன்கிழமை, நவம்பர் 16, 2016
நேரம்: மாலை 6:30 தொடக்கம் 8:30 வரை
கூடிய விபரங்களுக்கு:
கனடியத் தமிழர் பேரவை   416 240 0078