கை கலப்பு வரை சென்ற பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் – பௌத்த பிக்கு வாக்கு வாதம். (காணொளி இணைப்பு)

248

இன்று செங்கலடி பதுளை வீதியிலுள்ள  தமிழர்களின் பாரம்பரிய பூர்விக கிராமமான பங்குடாவெளியில் மட்டக்களப்பு விகாரை பிக்கு சில தினங்குளுக்கு முன் கூறியது போல இன்று புத்த சிலை வைப்பதற்காக வந்த போது, அதை அறிந்து உடனே சம்பவ இடத்திற்கு வந்த வியாழேந்திரன் அவர்கள் பிக்குவுடன் காரசாரமாக விவாதத்தில் ஈடுபட்டார் .

ஒரு மணித்தியாலத்திற்கு மேல் நடை பெற்ற இப்பிரச்சினையில் நீதிமன்ற உத்தரவைக் காட்டிப் பேசியதுடன் மாத்திரமல்லாது, பொலிசார் தங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தைக் கொண்டு நடவடிக்கை எடுக்காவிட்டால், நாம் அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டிய நிலை வரும். நிலமை வேறு மாதிரிச்செல்லும் என்று கூறியதற்கமைய பொலிசார் உடனே பிக்குவை வெளியேற்றி அனுப்பினர். ஏதாவது சம்பவங்கள் நடந்தால் தனக்கு உடன் அறிவிக்க வேண்டும். அத்துடன் எந்த நேரத்திலும் பொதுமக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் வலியுறுத்திக் கூறினார்.