கனடாவும் அகதிகளும்

96

டந்த தொடரிலே 1986க்குப் பின்னர் கனடியப் பாராளுமன்றத்திலே அகதிகளுடைய வருகை குறித்தும் கனடா உள்ளே அவர்களை எப்படி உள்வாங்குவது என்னபது குறித்தும் இரண்டு முக்கிய சட்டங்கள் பாராளுமன்றத்திலே கொண்டுவரப்பட்டது என்பதைப் பார்த்தோம்.

1970களுக்குப் பின்னர் அகதிகளைக் கனடாவில் உள்வாங்குவதிற்கு பின்னர் கனடாவிலே அகதிக் நலன் குறித்து கொண்டு வரப்பட்ட பல இலகுவான நடைமுறைகளை இந்த இரு சட்டங்களும் முற்றாக மாற்றியமைத்தன. மேலெழுந்தவாரியாகப் பார்த்தபோது அகதிகள் நலனுக்காக  சில விடயங்களை இந்த சட்டங்கள் கொண்டுவருவதுபோல தோன்றினாலும், உள்ளடக்கத்திலே இந்த சட்டங்களினால் உள்வாங்கப்பட்ட பல சரத்துக்கள் அதற்குமுன் கனடாவிற்கு வந்த அகதிகளின் வருகையை கட்டுப்படுத்தும் பல உள்விதிகளை அடக்கியதாகவே இருந்தது. குறிப்பாக கனடாவிற்கு வருவதற்குமுன் பாதுகாப்பான நாடொன்றின் ஊடாக வருபவர்கள், கனடாவில் அகதி கோருபவர்கள் கட்டுப்படுத்தப்படவேண்டும் என்ற விதி, அடுத்ததாக கனடாவில் அகதி கோர உரித்துடையவராக இருக்க வேண்டும் என்று தகுதிநிலை காணும் விதிகள் எல்லாம் உள்ளடக்கியதாக இந்தச் சட்டங்கள் இருந்தபடியால் அகதிகள் நலன்பேணும் குழுக்களும் அததிகளுக்காக பரிந்து பேசுகின்ற சமூக அமைப்பக்களும் இந்த சட்டங்களுக்கு எதிராக தங்களுடைய வாதங்களை கடுமையாக முன்னெடுத்தனர்.

அப்படி இருந்தும் பல இழுபறிகளுக்குப் பின்னர் பில் சி55, பில் சி84 என்ற இரு சட்டங்களும் பாராளுமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்படும் நிலையே உருவாகியது. ஆனால் அகதிகள் நலன்பேணும் குழக்களும் அகதிகளுக்காகப் பரிந்துபேசும் அமைப்புக்களும் செய்த போராட்டத்தின் பலனாக அன்றை அரசு பாதுகாப்பான நாடுகளிலிருந்து வருபவர் என்ற பதத்தை இந்த சட்டத்தில் இருந்து எடுப்பதாக அறிவித்தது. அது மாத்திரமல்ல இந்த இழுபறிகளுக்கு மத்தியிலே அகதிகள் விசாரணைகளில் தேக்கநிலை உருவாகி மீண்டும் பல்லாயிரக் கணக்கிலே விசாரணை முடிவு பெறாத அகதிகளின் வழக்குகள் கோப்புக்களாகி அசர காரியாலயங்களிலே தேங்கிக் கிடந்தன. இதனால் மேலும் தர்ம சங்கடங்களுக்குள்ளான அரசு 1988ம் ஆண்டு டிசம்பர் 31ந் திகதியளவில் ஒரு விசேட நடைமுறையின்கீழ் இந்த வழக்குகள் விசாரிக்கப்பட்டு, அடுத்துவரும் 2 வருடங்களுக்குள் இந்த வழக்குகளின் தேக்க நிலை முடிவுக்கு கொண்டுவரப்படும் என அறிவித்தது.

ஆனால் அரசு அறிவித்ததுபோல 2 வருடங்களுக்குள் இந்த பல்லாயிரக்கண்கான வழக்குகளையும் கனடிய அதிகாரிகளால் விசாரித்து முடிக்க முடியவில்லை. அரசு அறிவித்ததை விட வருடங்கள் நீண்டு வழக்குகள் முடிவுக்கு வந்தன. இதே நேரத்திலே குடும்பங்கள் மீள் இணைவது என்ற ஒரு நல்ல செய்தியை, குடும்ப மீள் இணைவுகாக காத்திருந்த விண்ணப்பதாரிக்கு கனடிய அரசு அறிவித்தது. 1988ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்த அறிவித்தலின்படி ஒரு திருமணம் செய்த விண்ணப்பதாரி தன் குடும்ப மீள் இணைவுக்கா விண்ணப்பிக்கும்பொழுது அவருடைய பிள்ளைகள் 21 வயதுக் மேற்பட்டவராக இருந்தாலும் கனடாவிற்குள் அழைத்து வரப்படலாம் என்று கொண்டு வரப்பட்ட செய்தியே அந்த நல்ல செய்தியாக இருந்து. இந்த அறிவித்தல் வரும்வரை 21வயதுக் மேற்பட்ட பிள்ளைகள் குடும்ப மிள் இணைவுக்குக்கீழ் கனடாவிற்கு வர அனுமதிக்ப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆனால் இப்படி அறிவிக்கப்பட்ட இந்த சலுகையில்கூட பின் நாட்களிலிலே மீண்டும் வாபஸ் வாங்கப்பட்டு திருத்தியமைக்கப்பட்டது என்பதையும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டும். 1989ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ந்திகதி நாம் ஏற்கனவே குறிப்பிட்ட அந்த இரு முக்கிய சட்டங்களான பில் சி55உம் பில் சி84உம் நடைமுறைக்கு வந்தன. கனடாவிலே இன்று காணும் அகதிகள் குறித்த பலவிதமான நடைமுறை  விசாரணைகளை இந்த இரு சட்டங்களுமே கனடாவிற்கு அறிமுகம் செய்து வைத்தன. குறிப்பாக குடிவரவு அகதிகள் விசாரணைச்சபை எனும் ஒரு சபை அன்று முதலே கனடாவிற்கு அறிமுகமானது. இன்றுவரை கனடாவிலே அகதிகளின் விவகாரங்களை இச்சபையே கையாள்கிறது என்பதை நான் இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும்.

இதற்குப் பின்னரும் அகதிகள் குறித்து அவர்களின் வருகை குறித்து பல சட்டங்கள் கனடாவில் இயற்றப்பட்டிருந்தாலும் இந்த குடிவரவு அகதிகள் விசாரணை சபையில் அவர்களுடை நடவடிக்கைகளும் இன்னும் தொடர்ச்சியாக அமுலில் இருக்கின்றது. இதே காலகட்டத்திலே சீனாவிலே நடந்த சினமன் சதுக்கத்திலே நடந்த அடக்குமுறையால் ஆயிரக் கண்ககான சீன மக்கள் கனடாவிற்குள் வரும் வாய்ப்பு  ஏற்பட்டது. இதன் எதிரொலி எப்படியாக இருந்தது என்பதை அடுத்த வாரத்திலே பார்ப்போம்.