மாவீரர் நாள் (பொப்பி நாள்)

முதலாம்  உலகப்போரின் முடிவில் இருந்து, இறந்து போன இராணுவ வீரர்களுக்காய் பொதுநலவாய நாடுகள் அனைத்தும் சேர்ந்து (Common wealth Nations) இந்த மாவீரர் நாளை (Remembrance Day – Somtimes know informally as Poppy Day)  ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூருகிறார்கள். இந்த மரபு 1919ஆம் ஆண்டு அரசர் ஐந்தாம் ஜோர்ச் (King George V)  அவர்களால் தொடக்கி வைக்கப்பட்டது. பொது நலவாய நாடுகள் மட்டுமல்லாது முதலாம் உலகப் போரோடு தொடர்புடைய இன்னும் பல நாடுகள் இந்த மாவீரர் நாளை நினைவு கூருகிறார்கள்.

முதலாம் உலகப் போரின் மோதல்கள் முறையாக 1918ஆம் ஆண்டு 11ஆம் மாதம் 11ஆம் நாள் 11ஆம் மணிநேரம் முடிவுக்கு வந்த படியால் இந்த மாவீரர் நாள் கார்த்திகை 11ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. ஆனால் முதலாம் உலகப் போர் அதிகாரபூர்வமாக 1919ஆம் ஆண்டு 6ஆம் மாதம் 28ஆம் திகதி வெர்சாய் உடன்படிக்கை (Treaty of Versailles )  மூலம் முடிவுக்கு வந்தது.

ஆரம்பத்தில் போர் நிறுத்த உடன்படிக்கை நாள் என்று சொல்லப்பட்ட இந்த நாள் காலப்போக்கில் மாவீரர் நாள் (Remembrance Day)  என்று அழைக்கப்பட்டது. முதலாவது இந்த மாவீரர் நாள் பக்கிங்காம் மாளிகையில் (Buckingham Palace) அரசர் ஐந்தாம் ஜோர்ச் (King George V) அவர்களால் 1919ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 11ஆம் நாள் ஆரம்பித்து கொண்டாடப்பட்டது. இந்த மாவீரர் நாள் சின்னமாக கசகசா (பொப்பி) பூவைக் காணலாம். இதற்கு காரணம் “In Flanders Fields ” என்ற கவிதையே. இதை எழுதியவர் கனடாவைச் சேர்ந்த லெப்டினன்ட் கேணல் ஜோன் மக்ரே ஆவர். இந்தக் கவிதையை வாசித்த ஜோர்ஜியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் மொய்னா மைக்கேல் அவர்கள் – நாம் நினைவில் கொள்ள வேண்டும் (“We shall Remember” ) என்ற கவிதையை எழுதியது மட்டுமல்லாமல், ஒவ்வொரு மாவீரர் நினைவு நாளிலும் பொப்பி பூவை அணிந்து கொள்வேன் என்று உறுதி செய்து கொண்டார். இந்த மரபு ஐரோப்பாவுக்கும் இங்கிலாந்தின் ஆட்சிக்குள் இருந்த நாடுகளுக்கும் இன்னும் பொதுநலவாய நாடுகளுக்கும் 3 ஆண்டுகளுக்குட்பரவியது.

மாவீரர் நாள் சின்னமான பொப்பி பூவை அணியும் பழக்கத்தை அடமே ஆன் இ. குரியோன் (Madame Anne E. Guerin) என்பவர் அயராது உழைத்து எல்லா இடங்களுக்கும் எடுத்துச் சென்றார். இங்கிலாந்தைச் சேர்ந்த மேஜர் ஜோர்ச் கவுசன் (Major George Howson) அவர்களதும் ஜெனரல் ஹெய்க் (General Haig) அவர்களதும் முயற்சியாலும் முதன் முறையாக பொப்பி பூ 1921ஆம் மாவீரர் நாள் அன்று எல்லாராலும் அணியப்பட்டது. இந்தப் பொப்பி மலர்கள் முதலாம் உலகப்போரின் பல மோசமான போர்க்களங்கள் நடந்த இடங்களில் பூத்துக் காணப்பட்டது. இந்தப் பூவின் சிவப்பு நிறமானது போரினால் சிந்தப்பட்ட இரத்தத்திற்கு அடையாளமாக காணப்பட்டது.

கனடாவில் மாவீரர் நினைவு நாளானது 10இல் 6 மாகாணங்களில் (Scotia, Manitoba, Ontario and Quebec being the exceptions) அரச விடுமுறை நாள் ஆகும். மாவீரர் நினைவு நாளின் உத்தியோகபூர்வ தேசிய நிகழ்வுகள் ஒட்டாவாவில் உள்ள National war Memorial  இல் நடைபெறும். இங்கே நடைபெறும் நிகழ்வுகளுக்கு நாட்டின் கவர்னர் ஜெனரல் தலைமை தாங்குவார். நிகழ்வுகளில் நாட்டின் பிரதம மந்திரி உட்பட பல உயர் அதிகாரிகளும் பிரமுகர்களும் கலந்து கொள்வார்கள். எப்போதாவது அரச குடும்பத்தைச் சேர்நதவர்களும் கலந்து கொள்வார்கள். (2009இல் இளவரசர் சார்ள்சும் 2014இல் இளவரசி ஆன் அவர்களும் கனடாவில் நடந்த
மாவீரரர் நிகழ்வுகளில் கலந்து கொண்டார்கள்.)