மீண்டும் சேரும் கூட்டணி!

107

ஐந்து வருடங்களின் முன்னர் வரை தரணி மெஹா ஹிட் இயங்குனர். விக்ரமை வைத்து தில், தூள் மற்றும் விஜயை வைத்து கில்லி, குருவியென பல படங்கள் எடுத்தார். இறுதியாக 2011 இல் சிம்புவை வைத்து ஒஸ்தி படமெடுத்தார். சிம்புவுடன் கூட்டு சேர்ந்த ராசியோ என்னவோ அதன் பின் படங்களே இயக்கவில்லை. இந்தநிலையில் விக்ரமை வைத்து புதிய படமொன்றை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விக்ரம் இன்னும் கதை கேட்கவில்லை, வரும் வாரம் கதை கேட்பார் எனப்படுகிறது.

நயன்தாரா நழுவல்!
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் தானா சேர்ந்த கூட்டம். இந்த படத்தின் பூஜை சென்னையிலுள்ள ஐயப்பன் கோயிலில் நடந்தது. கேரள மக்களின் அபிமான ஐயப்பன் ஆலயத்தில் ஏன் பூஜை நடக்கிறதென விசாரித்ததில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐயப்பன் கோயிலில் பூஜை நடக்க வேண்டுமென நயன்தாராதான விரும்பினாராம். தனது காதலரான விக்னேஷ் சிவன் இயக்கும் படம் என்பதால் நயன்தாரா நிச்சயம் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், அவர் கலந்துகொள்ளாதது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

பருத்ததால் பதறிய லட்சுமி மேனன்!
லட்சுமிமேனன் நடித்தால் படம் ஹிட் என ஒரு காலமிருந்தது. கும்கியில் 14 வயதில் அறிமுகமானதிலிருந்து லட்சுமி மேனனிற்கு ஏறுமுகம்தான். எல்லா முன்னணி நாயகிகளையும் மிரளவைத்தார். மிருதன் படம்தான் இதை மாற்றியது. அது அவ்வளவாக போகவில்லை. பின்னர் விஜய் சேதுபதியுடன் றெக்க படத்தில் நடித்தார். இதில் அவர் நன்றாக தசைபோட்டு, சற்று பருத்தவராக தெரிகிறார். இது அவரை ஒப்பந்தம் செய்தவர்களை மிரள வைத்துள்ளதாம். சிலர் நேரடியாகவே சொல்லியும் விட்டனராம். உடம்பு பருத்தால் மொத்த சினிமாவும் கைகழுவிவிடும் என்ற பயத்தால், டயட்டிற்கு மாறியுள்ளாராம் லட்சுமி மேனன்.

தைரிய தமன்னா!
சிம்புவின் புதிய படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன். மூன்று பாத்திரங்களில் நடிக்கிறார். இரண்டு நாயகிகள் இதில். ஸ்ரேயா, தமன்னா. சிம்புவுடன் நடித்தால் வம்புதான் என எல்லா நடிகைகளும் மிரள, தமன்னா தைரியமாக நடிக்கிறார். படம்பற்றி கூறும்போது, இந்த படத்தில் தன்னுடைய பாத்திரம் முக்கியமானதென்றும், சிம்புவுடன் மரத்தை சுற்றி பாட்டுபாடாமல் நடிக்க வாய்ப்புள்ள பாத்திரமென்பதால் படத்தை ஒப்புக்கொண்டதாக கூறினார். தர்மதுரை, தேவி படங்களைபோல இந்தப்படமும் நல்ல பெயரை பெற்றுத்தருமென தமன்னா நம்புகிறாராம்.