இரட்டை வேடம்

117

15 பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆயுதங்களைக் கனடா சௌதி அரேபியாவுக்கு விற்பனை செய்வதைப் பற்றியும் அது எவ்வாறு கனடிய விழுமியங்களுக்கு மாற்றாக இருக்கிறது என்பது பற்றியும் நாம் விரிவாகவே எழுதியுள்ளோம். இந்த ஆயுத விற்பனை பற்றிய கடுங்கண்டனங்களும் எழுப்பப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழலில் தாய்லாந்து நாட்டுக்குக் கனடிய ஆயுதங்கள் விற்பனை செய்வதை உலக விவகாரங்களுக்கான அமைச்சர் ஸ்ரெஃபான் டியோன் தடுத்து நிறுத்தியுள்ளார். காரணம்: மனித உரிமை மீறல்கள்!!!  எனினும் ஆய்தங்கள் பற்றிய மேலதிக விவரங்களை வெளியிட அவரது அமைச்சு மறுத்து விட்டது. சௌதி அரேபியாவுக்கு விற்பனை செய்வது எனும் முடிவில் எந்தவித மாற்றமுமில்லை எனவும் அவரது அமைச்சு தெரிவித்துள்ளது.

சௌதி அரேபியாவைவிட தாய்லாந்தின் அரசு மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகிறது என்பது அமைச்சரின் வாதத்தின் உட்கிட்டை. ஆயுத ஏற்றுமதியும் கனடிய அரசும் என வருகிறபோது, இதனை விட மோசமான இரட்டை வேடத்தை எம். ஜீ. ஆர், சிவாஜி கூடப் போட முடியாது. ஆயுத விற்பனையில்தான் பல கோடிக்கான டொலர்கள் லாபமீட்ட முடியும் எனும் ஒரு ராணுவத்-தொழில் துறைக் கட்டமைப்பைப் பேணி வரும் அமெரிக்கா-பிரித்தானியா-இஸ்ரேல் ஆகிய நாடுகளின் வாலில் தொங்கிக் கொண்டிருக்கும் கனடிய அரசு உய்வதற்கு வேறு வழிதான் தேட வேண்டும்!!